• பறந்து போ – திரைவிமர்சனம்

    பறந்து போ – திரைவிமர்சனம்

    அண்மையில் பறந்து போ எனும் திரைப்படத்தை ஹாட் ஸ்டார் தளத்தில் பார்த்தேன். இயக்குனர் ராம் அவர்களின் திரைப்படம் என்று ஒரே காரணத்தினாலேயே இந்த திரைப்படத்தை நான் உட்கார்ந்து பார்க்கலாம் என்று முடிவெடுத்தேன். பேரன்பு, தரமணி மற்றும் தங்க மீன்கள் போன்ற திரைப்படங்கள் என்றும் என் இதயத்திற்கு அருகாமையான திரைப்படங்கள்.  அந்த வரிசையில் இந்தத் திரைப்படமும் இருக்கும் என்று பார்த்தால் வெறும் எரிச்சல்தான் இறுதியில் எஞ்சியது. நவீன உலகில் பெற்றோர்களின் தவிப்பு போராட்டம் மற்றும் பயணங்களும் அதன் வழி…

    மேலும் வாசிக்க…

  • Su from So திரை விமர்சனம்

    Su from So திரை விமர்சனம்

    பேய் ஒட்டுதல் பேய் வந்து ஒருத்தர் மேல் ஏறுதல் என்று காஞ்சனா முதல் அரண்மனை வரை பல திரைப்படங்களை நாங்கள் பார்த்திருப்போம். அந்த வகையிலேயே இந்தத் திரைப்படமும் இருக்கும் என்றே எனக்கு முதலில் தோன்றியது. பார்க்க பார்க்க திரைப்படத்துடன் ஒட்டிவிட்டேன். மெல்லிய இதமான நகைச்சுவை மற்றும் நடுத்தரவயதுக் காதல் போன்றவற்றை அழகாக திரைப்படமாக்கியிருந்தனர்.  அத்துடன் திரைப்படத்தில் போக்கிரிச் சாமியார்கள், மூட நம்பிக்கைகள் போன்ற விடயங்களையும் தொட்டுச் செல்கின்றார்கள். பார்த்து முடிந்த பின்னர் ஒரு கன்னடப் படம் பார்த்த…

    மேலும் வாசிக்க…

  • கூலி திரை விமர்சனம் – No Spoiler

    கூலி திரை விமர்சனம் – No Spoiler

    இன்று சிங்கையில் கூலி திரைப்படத்தைச் சென்று கண்டு களித்தேன். அனைத்து திரையரங்குகளிலும் சுமார் 75% காட்சிகள் விற்றுத் தீர்த்திருந்தன. கிடைத்த ஒரு ஆசனத்தை எடுத்துக்கொண்டு திரையரங்கினுள் சென்று அமர்ந்து கொண்டேன். திரைப்படம் ஆரம்பித்து சற்றே வேகமெடுக்க முதல் 40 நிமிடங்கள் கடந்துவிட்டன. அதன் பின்னர் திரைக்கதை மெல்ல மெல்ல வேகமெடுத்து ஒடத் தொடங்கியது. திரையெங்கும் ரஜினியின் உச்சக் காட்சிகள் நிறைந்திருந்தன. திரையெங்கும் ரஜினி நிறைந்திருக்கின்றார் அது போலவே திரைக்கதையெங்கும் லோகேஷ் நிறைந்திருக்கின்றார். லொகேஷின் முத்திரைக் காட்சிகள் மற்றும்…

    மேலும் வாசிக்க…

  • சிங்கப்பூர் நிரந்தர குடியிருப்பாளராக விண்ணப்பிக்க முன்னர் இதைப் படித்துவிடுங்கள்

    சிங்கப்பூர் நிரந்தர குடியிருப்பாளராக விண்ணப்பிக்க முன்னர் இதைப் படித்துவிடுங்கள்

    சிங்கப்பூரில் வசிப்பவர்கள் சிறிது காலம் இங்கே வசித்த பின்னர் தொடர்ந்து இந்த மாண்பு மிகு நாட்டிலேயே தங்கிவிடலாம் என்று எண்ணுவர். ஆனால் இது அனைவரிற்கும் கைக்கூடுவதில்லை.  சிங்கப்பூரில் நிரந்தரவாசியாக (Permanent Resident) SPass, EPass ஆகிய வேலை அட்டையை வைத்துள்ளவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதாவது மென்பொருள் வல்லுனர், பொறியியளாளர் போன்ற தொழில்சார் புலமையுடையோரிற்கே இந்த வாய்ப்பு வழங்கப்படும். தகமைகள் இருந்தாலும் நிரந்தரவாசிக்கான விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படும் என்று எந்த ஒரு உத்தரவாதமும் கிடையாது.  இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு…

    மேலும் வாசிக்க…

  • 3BHK திரைப்பட விமர்சனம்

    3BHK திரைப்பட விமர்சனம்

    தற்போதெல்லாம் தரமான தமிழ் திரைப்படங்களைப் பார்பதே அபூர்வமாக உள்ளது. ரூரிஸ்ட் பமிலி, மட்ராஸ் மட்டினி ஆகிய இரண்டு படங்கள் மட்டுமே என்னைக் கவர்ந்த படங்களாக இந்த வருடம் 2025 இல் இருந்தது. இன்று நீண்ட நாட்களின் பின்னர் 3BHK எனும் தமிழ் திரைப்படத்தைப் பார்ததேன். சரத்குமார், தேவயாணி மற்றும் சித்தார்த் முக்கிய கதா பாத்திரங்களில் நடித்திருந்தனர். ஒரு நடுத்தரக் குடும்பத்தின் வீடு வாங்கும் கனவை மையமாகக் கொண்டே இந்த திரைப்படம் அமைந்து இருந்தது. பிரபு எனும் கதா…

    மேலும் வாசிக்க…

  • சிங்கை நாட்டிற்கு 60 வயது

    சிங்கை நாட்டிற்கு 60 வயது

    நேற்றய தினம் சிங்கப்பூர் தனது 60ம் ஆண்டு நிறைவை ஒட்டிய கொண்டாட்டங்களை இனிதே நடத்தியது. 1965 மலாயா சிங்கப்பூ தனிநாடாக பிரித்துவைத்தது முதல் சிங்கப்பூரின் வரலாறு ஆரம்பமாகின்றது.திரு லீ குவான் யூ தலைமயில் ஆரம்பித்த அரசு இன்று திரு லாரன்ஸ் வாங் வரை வெற்றி நடை போடுகின்றது. சிங்கை மாநகரத்தின் நிரந்தரக் குடியாளராக இந்த நாட்டின் இன்ப துன்பங்களில் பங்கெடுத்துக் கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகின்றேன். சுதந்திர தினக் கொண்டாட்டம் அன்று நான் புகைப்படங்கள் எடுக்க முடியாவிடினும் ஒத்திகை…

    மேலும் வாசிக்க…

  • வணக்கம்

    வணக்கம்

    மீளவும் 2025 இல் எனது வலைப்பதிவை மீள ஆரம்பித்துள்ளேன். 15 வருடம் முன்னால் வலைப்பதிவுகள் கொடிகட்டிப் பறந்தன. இன்றோ அனைவரும் முகப்புத்தகத்தையும் ஏனைய சமூக வலைத்தளங்களையும் நாடிவிட்டனர். எத்தனை ரீல்ஸ் விட்டாலும் உட்கார்ந்து அமைதியாக ஒரு வலைப்பதிவை வாசிப்பதே தனிச் சுவை. ஏலவே இந்த தளத்தை மீளவும் முடுக்கி விட்டுள்ளேன். நான் முன்னர் எழுதிய பதிவுகள் அப்படியே வேர்ட்பிரஸ்.காம் தளத்திற்கு மாற்றிவிட்டேன். ஆனால் அதில் இருந்த படிமங்கள் (images) அனைத்தும் தொலைந்துவிட்டன. வேறென்ன.. புதுப் பதிவொன்றில் ஆரம்பிக்கலாம்.…

    மேலும் வாசிக்க…

Proudly powered by WordPress