Tag: The Dog Stars

  • The Dog Stars திரைவிமர்சனம்

    The Dog Stars திரைவிமர்சனம்

    த டோக் ஸ்டார்ஸ் எனும் திரைப்படம் கிளாடியேட்டர் போன்ற மாபெரும் திரைப்படங்களை இயக்கிய ரிட்லி ஸ்காட் அவர்களின் திரைப்படம் என்றதும் திரையரங்கில் சென்று பார்த்துவிட முடிவெடுத்தேன். ஆயினும் imdb தளத்தில் மதிப்பீட்டைப் பார்த்ததும் இது பெரியளவில் இரசிகர்கள் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யவில்லை என்று புரிந்து கொண்டேன்.

    திரைப்படத்தில் விளம்பரப் போஸ்ட்டர்

    இந்தத் திரைப்படத்தின் மூலக் கதை இதே பெயரில் அமைந்த ஒரு நாவலின் மூலக் கதையைப் பின்னொட்டி அமைந்துள்ளது. எப்போதுமே ஒரு நாவலைத் திரைப்படமாக்குவது ஒன்றும் இலகுவான காரியமல்ல. லோடர் ஆப் த ரிங்ஸ் முதல் ஹர் பாட்டர் வரை நாவல்களைச் சரியாகத் திரைப்படமாக்கவில்லை என்று இன்று வரை குறை கூறுவோர் பலர்.

    சரி திபைப்படக் கதை என்றால் பேரழிவிற்குப் பிந்திய நிகழ்வுகளை (post apocalyptic) ஒற்றி நடக்கின்றது. மனைவியை இழந்த ஒரு ஆடவனும் அவன் ஆசை செஸ்னா இரக விமானப் பயணங்களும், அதன் வழி அவன் சந்திக்கும் மானிடர்களும் இடர்களும் என்று கதை நீள்கின்றது. திரைக்காட்சியமைப்புகள் ஜில் என்று இருக்கின்றன. குறிப்பாக விமானத்தில் பறப்புக் காட்சிகளும் அமெரிக்காவின் இயற்கை அழகும் கண்களை விரிந்து ஆர்வத்துடன் பார்க்க வைக்கின்றது.

    பொதுவாகவே நாவல்களை திரைப்படமாக்கும் போது நாலவலில் உள்ள பட விடயதானங்களை உள்ளடக்க முடியாது. அதற்கான நேரமும் அதில் கிடைக்காது. ஆகவே நாவலின் சில பகுதிகளைத் தவிர்த்துவிடுவர். பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியான போதும் இதே போன்ற கடும் கண்டனங்கள் புத்தகப் பிரியர்களிடம் இருந்து வெளியானது. என்னைக் கேட்டால் கதை மந்த கதியில் நகர்கின்றது பாத்திரங்களை இன்னும் பார்வையாளருடன் இணைக்க இயக்குனர் முயற்சி செய்திருக்கலாம்.

    சரி இந்தத் திரைப்படத்தைப் பார்க்கலாமா என்று கேட்டால் நிச்சயமாகப்பார்க்கலாம். கிளாடியேட்டர் போன்ற எதிர்பார்ப்பில்லாமல் சாதாரன எதிர்பார்ப்புடன் சென்றால் இதைப் பார்த்து இரசிக்கலாம்.

    குறிப்பாக செஸ்னா இரக விமானம் சம்பந்தப்பபட்ட காட்சிகளுக்காகவே இந்தத் திரைப்படத்தை திரையில் பார்க்கலாம்.