சிங்கப்பூரில் வசிப்பவர்கள் சிறிது காலம் இங்கே வசித்த பின்னர் தொடர்ந்து இந்த மாண்பு மிகு நாட்டிலேயே தங்கிவிடலாம் என்று எண்ணுவர். ஆனால் இது அனைவரிற்கும் கைக்கூடுவதில்லை.
சிங்கப்பூரில் நிரந்தரவாசியாக (Permanent Resident) SPass, EPass ஆகிய வேலை அட்டையை வைத்துள்ளவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதாவது மென்பொருள் வல்லுனர், பொறியியளாளர் போன்ற தொழில்சார் புலமையுடையோரிற்கே இந்த வாய்ப்பு வழங்கப்படும். தகமைகள் இருந்தாலும் நிரந்தரவாசிக்கான விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படும் என்று எந்த ஒரு உத்தரவாதமும் கிடையாது.
இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு பல தனியார் நிறுவனங்கள் தங்களைத் தாங்களே குடியேற்ற விற்பனர்கள் என்று சந்தைப்படுத்தி மக்களிடம் பணத்தை வாங்கி வயிறு நிரப்பிக்கொண்டு இருகின்றனர். குறிப்பாக நாங்கள் உங்கள் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு உத்தரவாதம் என்று கூறுவதெல்லாம் பொய்யிலும் பொய்.
இப்படியாக ஒரு நிறுவனம் பல பொய் உறுதிகளை வழங்கி இறுதியில் நிரந்தக்குடியுரிமையையும் வாங்கிக் கொடுக்கவில்லை. இதற்காக சிங்கப்பூர் பணம் 10,000 வெள்ளி வரை வாங்கி நிரந்தரக்குடியேற்றவாசியாக விழைந்த மக்களை ஏமாற்றியுள்ளனர். இது சம்பந்தமாக இன்று சிஎன்ஏ செய்திச் சேவையில் செய்தி வெளியாகியுள்ளது. சிங்கை அரசின் ஒரு அமலாக்கப்பிரிவு இந்த நிறுவனத்தின் ஏய்ப்பு நடவடிக்கை பற்றி மக்களுக்கு அறியத் தந்துள்ளது.
insecurities and unfamiliarity with Singapore’s immigration system were exploited by the three firms, misleading them into paying substantial sums of money. – Alvin Koh (Competition and Consumer Commission of Singapore)
சிங்கையில் நிரந்தரக்குடியேற்ற வாசியாக மாற என்ன செய்யவேண்டும் என்பது யாராலும் கணிக்க முடியாமல் உள்ளது. அது சிங்கை குடிவரவு குடியகலவு அதிகாரசபைக்கே வெளிச்சம்.
ஆனாலும் நானும் சிங்கையின் ஒரு நிரந்தரக் குடியேற்றவாசி என்ற ரீதியில் என்னால் கூறக்கூடியதெல்லாம் ஒன்றுதான். நீங்கள் சிங்கை நாட்டுடன் உண்மையாகவே இணைந்து பயணிக்க ஆரம்பித்துவிட்டதைக் காண்பிக்க வேண்டும். குறிப்பாக சிங்கையின் குடிமக்களுடன் நீங்கள் இணைந்து பழக ஆரம்பித்துவிட்டீர்கள், சிங்கை நாட்டின் இன்பதுன்பங்களின் பங்கெடுக்க ஆரம்பித்துவிட்டீர்கள் போன்றவற்றைக் உள சுத்தியுடன் காண்பிக்கவேண்டும். அனைத்திற்கும் மேல் கட்டாயமாக நீங்கள் சிங்கை அரசிற்கான வரிப்பணங்களைத் தவறாமல் செலுத்தியிருக்க வெண்டும். சின்னதாகக்கூட குற்றச் செயல்களில் ஈடுபட்டிருக்கக்கூடாது. மேலும் உங்கள் கல்வித் தகமையை உயர்த்திக்கொள்ளுங்கள். பட்டப்படிப்புடன் நின்றுவிடாமல் பட்டப்பின்படிப்பையும் கட்டாயம் செய்துகொள்ளுங்கள்.
இது பற்றி பிரபல சிங்கை யூரியூப்பர் திரு ஈஸ்வரன் அவர்களும் தமிழில் தமது யூரியூப் தளத்தில் பதிவிட்டுள்ளார். அவரின் கருத்துக்களையும் கேட்டுவிடுங்கள்.
திருட்டு மற்றும் பொய் சொல்லி நாங்கள் பிழைக்கக்கூடாது. அதுபோலவே இது போன்று பொய் புரட்டு சொல்லி வாழ்க்கை நடத்துவோரிடம் சிக்கியும் விடக்கூடாது.
சிங்கப்பூர் நிரந்தரக்குடியேற்றவாசியாக விண்ணப்பம் செலுத்த உங்களுக்கும் விரும்பம் இருந்தால் நீங்களாகவே செய்துவிடுங்கள். யாரிடமும் தேவையில்லாமல் பணம் கொடுத்து ஏமாந்துவிடாதீர்கள். குறிப்பாக உங்கள் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட நாங்கள் உத்தரவாதம் என்று பொய்கூறும் பொய்யர்களிடம் சிக்கிவிடாதீர்கள்.
Leave a Reply