Michael 2026 திரைவிமர்சனம்

micheal movie cartoonified

உலகத்தை அசரவைத்த பாப் இசைச் சக்கரவர்த்தி எங்கள் மைக்கல் ஜாக்சனின் வாழ்க்கை வரலாற்றைத் திரைப்படமாக எடுத்திருக்கின்றார்கள் என்று தெரிந்ததும் தெறித்து ஓடிச்சென்று முதல் வாரத்திலேயே டிக்கட்டை எடுத்துவிட்டேன்.

Micheal movie poster

திரைப்படத்தின் உத்தியோகபூரவ பதாகை

இசைச் சக்கரவர்த்தியின் திரைப்படத்தை சாதாரணத் திரையில் பார்த்தாலும் அது போதாது என்று நினைத்து ஐமாக்ஸ் திரையில் திரைப்படத்தைக் கண்டு களித்தேன்.

எனக்கு மைக்கலின் அறிமுகம் 90களில் தான் கிடைத்தது. அக்காலத்தில் மைக்கலின் உருவம் ஒரு வெள்ளை இனத்தவரைப் போலத்தான் இருக்கும். ஆயினும் எனது தந்தையார் மைக்கள் உண்மையில் ஒரு கறுப்பினத்தவர் பிளாஸ்டிக் அறுவைச் சிகிச்சை செய்து வெள்ளைக்காரணைப் போல மாறிவிட்டார் என்று கூறியது இன்றும் ஞாபகம் உள்ளது. உண்மையில் மைக்கல் ஒரு தோல் வியாதியால் பாதிக்கப்பட்டு அவர் தோலின் கறுப்பு நிறத்தை இழந்ததால்தான் வெள்ளைத் தோலாக மாறிவிட்டிருந்தது என்பதை பின்னர் அறிந்து கொண்டேன்.

வெள்ளை இனத்தவர் போன்ற தோற்றத்துடன் மைக்கல்

இதைப் போலவே சக்கரவர்த்தியின் இறுதிக் காலத்திலும் சிறுவர் துஷ்பிரயோகம் செய்து விட்டார் என்று பல குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டு எதுவுமே பின்னர் நிரூபிக்கபடவில்லை. இதைப் பற்றி மைக்கலே பல இடங்களில் வெளிப்படையாகப் பேசியிருகின்றார்.

சரி திரைப்படத்தைப் பற்றிச் சொல்வதானால் திரைப்படம் அருமையாக இருந்தது. ரொட்டின் டொமாட்டோ போன்ற தளங்களில் குறைவான புள்ளிகளே வழங்கப்பட்டிருந்தாலும் மக்கள் படத்தைக் கொண்டாடினார்கள்.

ஜபார் ஜாக்சன்

மைக்கலாக மைக்கல் ஜாக்சனின் பெறாமகன் (மைக்கலின் சகோதரனின் மகன்) ஜபார் ஜக்சனே நடிந்துள்ளார். அப்படியே திரையில் மைக்கலைப் பார்ப்பதைப் போலவே இருந்தது. உடல் மொழி, குரல் மற்றும் நடன அசைவுகள் என்று ஜபார் நடிப்பில் உச்சத்தை எட்டுகின்றார்.

சிங்கையில் திரைப்படம் முடிந்ததும் மக்கள் அனைவரும் கைதட்டி மகிழ்ந்தனர். அத்துடன் திரைப்படம் பார்க்க வந்தவர்களில் அனைத்து இன, மொழி மக்களையும் காணக் கூடியதாக இருந்தது. மைக்கல் இறந்து 15 வருடங்களுக்கு மேலாகினாலும் மக்கள் அவர்பால் கொண்ட அன்பை இழக்கவில்லை என்பது இன்றும் வெள்ளிடைமலை.

மைக்கல் திரைப்படத்தில் முதலாவது பாகமே இந்தத் திரைப்படம். இந்தப் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து இரண்டாம் பாகத்திற்கான திரைப்படத் தயாரிப்பு வேலைகள் ஆரம்பமாகிவிட்டன.

திரைப்படத்தைப் பார்த்ததில் இருந்து பில்லி ஜீன் மண்டைக்குள் நிற்காமல் ஓடிக் கொண்டே இருக்கின்றது.

நீங்களும் இசைப் பிரியராக இருந்தால் கட்டாயமாக திரையில் பாப் இசைச் சக்கரவர்தியின் மாயாஜாலங்களை கண்டு மகிழுங்கள்.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Proudly powered by WordPress