Wild West ஸ்பெஷல் இலங்கையிலும்

பல இழுத்தடிப்புகள் கும்மிகள் வெட்டுக் குத்துகளுக்கு தாமதங்களின் பின்னர் வைல்ட் வெஸ்ட் ஸ்பெஷல் நேற்று இலங்கை மண்ணைத் தொட்டது. புத்தகத்தின் வெளி அட்டயே அத்தனை அட்டகாசமாக இருக்க பக்கத்தில் இருந்த சைவ உணவகத்தினுள் புகுந்து வெளியுறையை அகற்றி தட தடவென சித்திரங்களை மேலோட்டமாகப் பார்க்கத் தொடங்கினேன். அட அட அட! காத்திருந்தது வீண் போகவில்லை அப்படி ஒரு அருமையான சித்திரங்கள். வண்ணத்திலே ஜொலித்தது.

மொத்தம் 3 கதைகள் இந்தப் புத்தகத்தில் இருக்கின்றன

 1. மரண நகரம் மிசௌரி – கப்டன் டைகர்
 2. எமனில் திரை மேற்கு – கிராபிக் நாவல்
 3. ஒரு பனிவேட்டை – ஸ்டீவ்

மரண நகரம் மிசௌரி கப்டன் டைகர் ஏமாற்றாவிட்டாலும், கதை சாதா ரகமே. கபடன் டைகரின் முற்காலக் கதைசொல்லும் புத்தகத் தொடரில் இது 4ம் கதையாம். தொடர் என்றாலும் முன்னைய கதை வாசிக்காமல் இந்தக் கதை வாசித்தால் ஒன்றும் புரியாது என்று கவலைகொள்ள வேண்டாம். அப்படி எதுவும் இல்லை.

அமெரிக்க உள்நாட்டு யுத்தத்தில் அமெரிக்காவின் வடக்கும் தெற்கும் உள்கோஷ்டி மோதலில் உக்கிரம் அடையும் வேளையில் டைகர் ஒரு படையணியை மிசௌரி கன்சாஸ் எல்லையில் உள்ள ஒரு இராணுவக் கோட்டைக்கு அழைத்து வருகின்றார். அங்கிருந்து ஒரு புரட்சி வேடம் இட்ட குள்ள நரியைத் தேடி மிசௌரி விரைகின்றார் டைகர். கதை அப்படியே அதைச் சுற்றி நகர்கின்றது. இறுதியில் என்ன ஆனது என்று நீங்களே வாசித்து அறிந்து கொண்டிருப்பீர்கள் அல்லது அறிந்து கொள்ளலாம் 😉 கதை சுமார் இரகம் என்றாலும் வண்ணத்தில் சித்திரங்கள் இலயிக்க வைக்கின்றன.

எமனின் திசை மேற்கு எனும் கிராபிக் நாவல் அப்படியே அசர வைத்துவிட்டது. கதையின் போக்கும் சித்திரங்களும் தூள் தூள். மங்கலான வெளிச்சத்தில் நடக்கும் காட்சிகள் எல்லாம் அப்படியே தூக்கி சாப்பிட்டுவிடுகின்றன. ஒற்றைக் கையுடன் அலையும் இந்த நபர் ஹீரோவாக முடியுமா என நினைத்து வாசிக்க ஆரம்பித்தேன் வாசித்து முடிந்த பின்னர்தான் அது எத்தனை முட்டாள் தனமான கேள்வி என்று புரிந்து கொண்டது. சில வேளைகளில் நீண்ட காலத்திற்கு ஓடக் கூடிய வரைகதை தொடர்களுக்கான ஹீரோ என்றால் அப்படி அங்க லட்சணத்துடன் அல்லது குறைந்த பட்சம் டைகர் மாதிரி அழுக்காக இருந்தாலும் வீரத்துடன் இருக்க வேண்டும். ஆனால் இது போன்ற கிராபிக் நாவல்களில் மாஸ் ஹீரோவிற்கான ஈகோ இல்லை தேவையும் இல்லை. அதுவேதான் இந்த கிராபிக் நாவலின் வெற்றி. கதை முடிந்து விட்டது என எண்ணும் போது எபிலொக் ஒன்று கூட உள்ளது.

மூன்றாவதாக உள்ள ஒரு பனி வேட்டை எனும் கதை பற்றி ஒன்றும் பெரிதாக சொல்வதற்கில்லை. முன்னைய கதை இரண்டும் மெகா பட்ஜட் ரஜனி திரைப்படம் போலவும் மூன்றாம் கதை கறுப்புவெள்ளையில் வெற்றிடம் நிரப்ப வந்த ஒரு சிறு பட்ஜட் திரைப்படம் போலவும் இருந்தது.

தமிழ் காமிக்ஸ் பிரியர்கள் அனைவரும் கட்டாயம் வாசித்து கையகப் படுத்த வேண்டிய புத்தகம் இது.

இவற்றையும் வாசியுங்கள்

படங்கள் ஆசிரியர் விஜயனின் வலைப்பதிவில் அனுமதியின்றி சுடப்பட்டவை.

11 thoughts on “Wild West ஸ்பெஷல் இலங்கையிலும்”

 1. ப்ளேன் டீ யா (Aeroplane – ஆ?), நாங்க குடிக்கும் சைனா டீ மாதிரி இருக்குமா ?

  “இவற்றையும் வாசியுங்கள்” நல்ல முயற்சி. பின்னுட்டம் இடுவதற்கு என் ஜாதகத்தையே தரவேண்டியிருக்குதே ? 🙁

 2. @ராஜ்முத்துகுமார்
  நன்றி பின்னூட்டத்திற்கு. Plain Tea 😉 தான் சைவ கடையில் கிடைக்கும் மலிவான பொருள்.

  எனது வலைப்பதிவு உங்கள் வலைப்பதிவு போல் அல்லாமல் வேர்ட்பிரஸ் இயங்கு தளத்தில் இயங்குகின்றது. பெயர், மின்னஞ்சல் மட்டுமே கட்டாயம் மிகுதி உங்கள் விருப்பம். 🙂

 3. மயூரேசன்,

  WildWest இற்காக காத்திருந்து அலுத்து Blueberry comics அனைத்தையும் வாசித்து முடித்தாகிவிட்டது. இப்பொழுது வாங்குவதா விடுவதா என்று இருக்கிறது.

  எமனின் திசை மேற்கு எவ்வாறிருக்கிறது?

 4. @பகீ
  நானும் ஸ்கான்லேஷன்ஸ் வாசித்துத்தான் முன்னைய கதைகளை அறிந்து கொண்டேன். Fort Navajo, Lone Eagle போன்ற கதைகள் அளவு வீச்சு இந்தக் கதையில் இல்லை. சுமார் இரக கதைதான்.

  ஓவியங்கள் வண்ணத்தில் இரசிக்க வைக்கும் ஒரே காரணத்திற்காக இதனை வாங்கலாம்.

 5. @பகீ
  வண்ணத்தில், தமிழில் கதை என்ற ரீதியில் வாங்கி எதிர்காலத்தில் அசைபோட வாங்கிக்கொள்ளலாம்.

 6. சுருங்க மூணு கதையையும் விமர்சனம் பண்ணிடீங்க.
  பதிவுலகில் முதல் முறையாக மூன்று கதையின் விமர்சனம் ஒரே பதிவில்.கலக்குங்க.

 7. @Krishna.V.V
  நன்றி நன்றி 🙂

  எல்லாம் உங்களைப் போன்ற மூத்த காமிக்ஸ் பதிவர்களிடம் இருந்து கற்றுக்கொண்டதுதான்.

 8. நன்றி. இன்றே வாங்கிவிடுகின்றேன். (ஆண்டவன் புண்ணியத்தில் கடையில் இருந்தால்)

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.