Valkyrie (2008) விமர்சனம்


பலரும் இணையத் தளங்களில் இந்த விமர்சனத்தை எழுதியிருப்பதைக் கண்டேன் என்றாலும் என் பங்குக்கும் ஏதாவது எழுதும் ஆர்வத்தில் இந்த விமர்சனத்தை எழுதுகின்றேன். வல்கரி எனும் இந்த திரைப்படம் ஹிட்லர் காலத்தில் நடந்த ஒரு புரட்சிக்கதை. ஹிட்லருக்கெதிராக நடந்த புரட்சி. ஹிட்லருக்கு எதிராக நடந்த புரட்சி என்றதும் ஏதோ பிரஞ்சுகாரனும், பிருத்தானியா காரனும் செய்த புரட்சி என்று எண்ண வேண்டாம். இது ஹிட்லருக்கெதிராக அவரது படையில் இருக்கும் இராணுவ அதிகாரிகளால் அரங்கேற்றப்பட்ட நிகழ்ச்சி. வரலாற்றையே மாற்றியிருக்க வேண்டிய நிகழ்ச்சி இது.!!!


வட ஆபிரிக்காவில் நகரும் ஹிட்லரின் நாசிப்படைகளைக் காட்டுவதுடன் திரைப்படம் ஆரம்பிக்கின்றது. டாம் குரூஸ் ஒரு நாசிப் படை அதிகாரியாக திரைப்படத்தில் தோண்றுகின்றார். முதல் காட்சியிலேயே அவர் ஹிட்லரை எந்தளவு வெறுக்கின்றார் என்பதைக் காட்டுகின்றனர்.

யுத்த முண்ணரங்கிற்கு படைகளை நகர்த்த இருக்கும் அதிகாரியிடம் படைகளை நகர்த்துவது எவ்வளவு முட்டாள் தனம் என்று பேசி முடித்து நகர்வதற்கிடையில் நேசப் படைகளின் விமானங்கள் வந்து சேர்ந்து குண்டு மழை பொழிகின்றன. வழமைபோல அங்கும் இங்கும் ஓடித்திரியும் ஸ்டோபன்பேர்க் (Stauffenberg-டாம் குறூஸ்)தானும் காயப்பட்டுவிடுகின்றார்.

வைத்தியசாலையில் கண்விழிக்கின்றார் ஸ்டோபன்பேர்க், மனைவி அரவணைத்துக்கொள்கின்றார். ஒரு கண், வலக்கையில் சில விரல்கள் என்பன இல்லாமல் போய்விட்டன. ஊனமுற்றவரான ஸ்டோபன்பேர்க்கிற்கு பதிவியுயர்வுடன் அலுவலக வேலையொன்றும் வழங்கப்படுகின்றது.

அடிபட்ட புலியாக ஸ்டோபன்பேர்க் ஹிட்லருக்கு எதிராக செயற்படத்தொடங்குகின்றார். மெல்ல மெல்ல அதற்கு கூட்டுச்சேர வேண்டியவர்களையும் அடையாளம் கண்டு அவர்களுடன் இணைந்துகொள்கின்றார். இதன்படி இரகசியமாக ஹிட்லருக்கு எதிராக அரசியல் நடத்துவோருடன் இணைகின்றார். இவர்கள் மத்தியில் மெல்ல மெல்ல ஸ்டோபன்பேர்க் பிரபலமாகின்றார்.

இந்த கூட்டத்தின் பலனாக ஹிட்லர் இறந்தபிறகு என்ன செய்வது என்பது பற்றிய வல்கரி எனும் நடவடிக்கையை ஸ்டோபன்பேர்க் ஆவணப்படுத்தி அதில் ஹிட்லரின் கையெழுத்தையே வேண்டுகின்றார்.

Olbricht எனும் இராணுவ உத்தியோகத்தர் மற்றும் ஸ்டோபன்பேர்க் ஒன்றாக இணைந்து ஹிட்லரின் குகைக்குள் நுழைகின்றனர். அவரை குண்டுவைத்து கொலைசெயவதே இவர்களின் நோக்கம்.

இதை வாசிக்கையிலேயே உங்களுக்குப் புரியக்கூடும். இது ஒரு தோற்கடிக்கப்பட்ட நடவடிக்கை என்பது. ஏன் எனில் ஹிட்லர் குண்டு வெடிப்பில் மரணமாகவில்லை. திட்டம் பலமானதாக இருப்பினும் குண்டுவெடிப்பில் ஹிட்லர் தப்பிவிடுவதால் எல்லாம் தாறுமாறாக மாறுகின்றது. இறுதியில் புரட்சிசெய்தோருக்கு என்ன தண்டனை என்பதை நான் சொல்லித் தெரியவேண்டியதில்லை.

வழமைபோல அனைவரும் டொம் குறூஸ் நடிப்பு மோசம் என்று பேசியுள்ளனர். ஆனால் என்னைப் பொறுத்தவரையில் மனுசன் நடிப்பில் விளாசியிருக்கின்றார். அருமையான நடிப்பு. இவருடன் இணைந்து நடித்த துணை நடிகர்களும் அருமையாக நடித்திருக்கினர்.

கட்டாயமாக அனைவரும் பார்க்க வேண்டிய திரைப்படம்.!

சில தொடர்பான தொடுப்புகள்

  1. குண்டு வெடிப்ப

4 thoughts on “Valkyrie (2008) விமர்சனம்”

  1. இந்த படத்தைப்பற்றி நானும் வாசித்திருக்கிறேன். நீங்களும் இப்படி சொன்ன பிறகு பார்த்துட வேண்டியதுதான். ஒரிஜினல் dvdrip ற்கு வையிட்டிங்.

  2. இங்கே கடைகளில் தரமான கொப்பி கிடைக்கின்றது. அப்படி ஒரு கொப்பியில்தான் இந்த திரைப்படத்தைப் பார்த்தேன்.

    விரைவில் ரிப் பெற்று வாழ வாழ்த்துகின்றோம் 😉

  3. நண்பரொருவர் eagle ல் DVD வாங்கினார். அவ்வளவாக இல்லை. அதன்பிறகு அங்கு போகவே இல்லை. விரைவில் வாங்கினா போச்சு

  4. Eagle ல் போட்டுப் பார்த்து வாங்குங்க இல்லாட்டி கமிரா கோப்பியை தலையில கட்டிடுவானுகள்.

Leave a Reply