The Walking Dead

அண்மையில் AMC தொலைக்காட்சியில் த வோல்க்கிங் டெட் என்கிற தொலைக்காட்சித் தொடர் ஒளிபரப்பாகத் தொடங்கியது. ஏற்கனவே பாகம் ஒன்று முடிவடைந்து பாகம் இரண்டு ஒரு மாதத்திற்கு முன்னர் ஆரம்பித்தது. நண்பன் தயவில் பாகம் ஒன்று டிவிடி கையில கிடைக்கவே ஆறு எபிசொட்டுகளையும் ஒரே நாளில் பார்த்து முடித்தேன்.

Walking Dead Poster

சாதாரண சொம்பி (Zombie) கதைகளில் இருந்து வித்தியாசமாகவும் கொஞ்சம் கிலி ஊட்டுவதாகவும் இருந்தது. அதன் பின்னர் கட்டாயம் இரண்டாம் பாகத்தையும் பார்க்கவேண்டும் என்று எண்ணி அமெரிக்காவில் ஒலிபரப்பாகி சில மணி நேரத்தில் இலங்கையில் இருந்து பதிவிறக்கிப் பார்க்கத் தொடங்கினேன்.

த வோக்கிங் டெட் கதை ஒரு பொலீஸ் காரனைச் சுற்றி நடக்கின்றது. ஒரு சிறய நகரத்தில் பொலீஸ் செரீப்பாக வேலை செய்கின்றார் ரிக். ஒரு நாள் சட்டத்தை மீறும் நபர்களை மடக்கும் நிகழ்வில் காயப்பட்டு உயிர் நண்பன் சோன் இனால் வைத்திய சாலையில் அனுமதிக்கப்படுகின்றார். சில நாள் கழித்து விழித்துப் பார்க்கும் ரிக்கிற்கு ஒரு அதிர்ச்சி காத்திருக்கின்றது. அவர் காயப்படும் போது இருந்த உலகமும் இப்போது இருக்கும் உலகமும் இரண்டு துருவங்களாக இருந்தன. வைத்திய சாலை எல்லாம் அடித்து நொருக்கப்பட்டு சொம்பிகள் அலைந்து திரிகின்றன. அவற்றில் இருந்து தப்பி தனது குடும்பத்தைத் தேடி தனது பயனத்தை ஆரம்பிக்கின்றார். இதற்கு மேல் கதையை சொல்ல விருப்பமில்லை. நீங்களே பார்த்து தெரிந்து கொள்ளலாம். 😉

வோல்க்கிங் டெட் அரிப்பு அதிகரிக்கத் தொடங்கவே அது பற்றி ஆராயத் தொடங்கியதில் இன்னுமொரு இனிப்பான செய்தி கிடைத்தது. அதாவது வோக்கிங் டெட் என்பது ஒரு கிராபிக் நாவலை அடிப்படையாகக் கொண்டு ஆக்கியிருக்கின்றார்கள். இதற்கும் மேலும் தாங்குமா இந்த உயிர். உடனே இணைய வழி காமிக்சுகளை இறக்கியாச்சு. பாகம் பாகமாக வாசிக்கத் தொடங்கினால் அடேங்கப்பா, தொலைக்காட்சித் தொடரை விட மிகவும் அருமை. புத்தகத்திற்கு புத்தகம் அலுப்பத் தட்டாமல் வாசிக்க வேண்டும் என்று வெறி அதிகமாகி எனது அன்ரொயிட் தொலைபேசி, டாப்லெட் என்று அனைத்திலும் நிரப்பி பயன நேரங்களில் கூட வாசித்துக் கொண்டு இருக்கின்றேன்.

தொலைக்காட்சிக் கதைக்கும், காமிக்ஸ் புத்தகத்தின் கதைக்கும் ஒற்றுமை இருந்தாலும் பல இடங்களில் புத்தகம் நிமிர்ந்து நிற்கின்றது. காமிக்சையும் தொலைக்காட்சித் தொடரையும் ஒப்பிடுவது தப்புத்தான். ஆனால் என்னைப் பொறுத்தவரையில் காமிக்ஸ் உயர்ந்து நிற்கின்றது. தொலைக்காட்சியில் காட்ட முடியாத பல கோணங்களில் அபூர்வமாகச் சித்திரம் தீட்டியுள்ளார்கள். தொலைக்காட்சித் தொடரில் வரும் பொலீஸ் அதிகாரியை விட காமிக்சில் வரும் ரிக்கை மிகவும் பிடித்து விட்டது. 🙂

தொலைக்காட்சி Vs காமிக்ஸ்

நீங்கள் காமிக்ஸ் பிரியரானால் கட்டாயம் வாசிக்க வேண்டிய புத்தகத் தொடர். உங்களுக்காக புத்தக அட்டைகள் சில இங்கே.

தொலைக்காட்சித் தொடர் 85/100
காமிக்ஸ் புத்தகம் 90/100

பி.கு: இவற்றை எல்லாம் 7ம் அறிவு எடுத்து எங்கள் 6ம் அறிவையும் கேள்விக்குறியாக்குபவர்கட்கு போட்டுக் காட்டவேண்டும். 😉
 

4 thoughts on “The Walking Dead”

  1. சூப்பர் அறிமுகம். விரைவில் படித்து / பார்த்தும் விடுகிறேன். தொடருங்கள் உங்கள் பதிவுகளை

  2. தகவலுக்கு நன்றி. நான் தொலைக்காட்சி தொடர் மட்டும் தான் பார்த்துக் கொண்டிருக்கிறேன். காமிக்ஸில் நல்ல ஆர்வம் உண்டு. இந்த தொடரின் காமிக்ஸையும் பார்த்து விடுகிறேன்.

  3. நானும் உங்கள மாதிரிதான் இந்த சீரீஸ் பார்த்துட்டு காமிக்ஸ் டவுன்லோட் பண்ணி மொபைல்ல படிச்சி முடிச்சேன், சொன்னா நம்ப மாட்டிங்க நான் முதல் முதலா (எழுத்து கூட்டி) படிச்ச இங்க்லீஷ் காமிக்ஸ் இதான், அந்த அளவுக்கு நல்லாருந்துச்சி ஆனா காமிக்ஸ் முடிவுதான் கொஞ்சம் இழுத்து முடிச்சிருந்தாங்க எப்படி முடிக்கணும்னு தெரியாம முடிச்ச மாதிரி ஒரு பீலிங்…., என்ன கேட்டா காமிக்ஸ்தான் பெஸ்ட்னு சொல்லுவேன் பட் வசனம் மட்டும் காமிக்ஸ்ச விட சீரிஸ்ல ரொம்ப சார்ப்பா இருக்கும்…., காமிக்ஸ்ல நல்லா மத போதனை பண்ணி ஜல்லி அடிச்சிருப்பாங்க பட் சீரிஸ்ல அதுக்கு அப்படியே ஆப்போசிட்டா இருக்கும்….,

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.