வேர்ட்பிரசில் த.ம கருவிப் பட்டை செயல்இழப்பதேன்?

எனது வலைப்பதிவில் ஜோராக வேலைசெய்துகொண்டிருந்த தமி்ழ்மணம் கருவிப்பட்டை, வேர்ட்பிரஸ்பக்கங்களுக்கு அர்த்தமுள்ள முகவரி கொடுத்ததும் செயல் இழந்துவிட்டது. இதற்கு என்ன காரணமாக இருக்கும் என்று நோண்டி நோண்டி பார்த்ததில் எனக்குப் புரிந்த பிழை இதுதான்.

பதிவுப் பட்டை இரண்டாம் கட்ட நிரலில்

src=” http://services.thamizmanam.com/toolbar.php?date=&posturl=&cmt=&blogurl= &photo=xxxxxxxxxxxxxxxxxxx”>

இதில் GET Method மூலம் தளமுகவரி, மறுமொழி எண்ணிக்கை, புகைப்பட விபரம் என்பவற்றை பெறுகின்றார்கள்.
the_permalink() என்ற கட்டளை மூலம் அர்த்தமுள்ள தமிழ் வேர்ட்பிரஸ் பதிவுகளின் முகவரியைப்பெற்றால் அது கடும் குளப்பமான நீண்ட முகவரியைக் கொடுக்கும்

உ+ம் ie-8-வேண்டாம்-firefox-beta-3-போதும் என்பதை

/ie-8-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-firefox-beta-3-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/

என்று காட்டும்…

GET Method இல் 100 எழுத்துக்கு அதிகமாக இருந்தால் அது திரட்டாது. என்னைப் பொறுத்தவரையில் என் சிறிய மூளைக்கு இதுதான் பிரைச்சனையாகத் தோண்றுகின்றது.

ஆங்கல எழுத்தில் தலைப்பிட்டால் கருவிப்பட்டை வேலைசெய்கின்றது. ஆங்கிலத்தில் இருந்தால் அது எப்படி தமிழில் அர்த்தமுள்ள முகவரியாகும்.

PHP, MYSQL குளப்பத்தால் வந்த வினையாம் இது. தமிழ் மணம் நிர்வாகம் இந்த பிரைச்சனைக்கு தீர்வு கண்டுள்ளது. நிர்வாகத்துக்கு நன்றி!

இதைவிட வேர்ட்பிரஸ்.காம் பயனர்களுக்கு கருவிப்பட்டையை நிறுவவே முடியாது. அதற்கான அனுமதி தளத்தில் அவர்களுக்கு வழங்கப்படாது.

இப்படியான பிரைச்சனைகள் தமிழ் வேர்ட்பிரஸ் பயனர்களுக்கு இருப்பதனால் எதிர்காலத்தில் தமிழ்மணம் செய்தியோடைமூலம் மறுமொழி நிலவரத்தைத் திரட்டும் என்று எண்ணுகின்றேன்.

வேர்ட்பிரஸ்.காம் பயனர்களின் மறுமொழியை செய்தியோடைமூலம் தமிழ்மணம் திரட்டுகின்றது. மீண்டும் தமிழ் மணத்திற்கு நன்றிகள்.

11 thoughts on “வேர்ட்பிரசில் த.ம கருவிப் பட்டை செயல்இழப்பதேன்?”

 1. மயூ, உங்களுக்கு 100 வயசு ! கடந்த ஒரு மணி நேரமாக நானும் இதைப் பற்றி தான் குடைந்து கொண்டிருந்தேன் !! நான் தமிழ்மணக் கருவிப்பட்டை நீட்சியில் தான் கோளாறு என்று நினைத்துக் கொண்டிருந்தேன். Get தான் பிரச்சினையா 🙁 தமிழ்மணத்தை விட்டு விட்டாலும், நாளை தமிழ் இணையத்தில் பல்வேறு பணிகளுக்கு இந்த get தேவைப்படுமே 🙁 தமிழ் ஒருங்குறிச் சொதப்பல்களில் இன்னொன்று 🙁

 2. get தான் பிரச்சினையான்னு குழப்பமா இருக்கே? மாற்று! தலைப்புப் பக்கங்களை உருவாக்க இடுகைத் தலைப்புகளைத் தரவுத் தளத்தில் இருந்து பெற get தான் பயன்படுத்துறோம். ஆனா, அது எத்தனை எழுத்துக்கள் இருந்தாலும் காட்டுதே? ஒரு சோதனைக்கு ஒரே ஒரு தமிழ் எழுத்து, 2,3 தமிழ் எழுத்துக்கள் தலைப்புகளாக கொண்ட இடுகைகளைப் போட்டுப் பாருங்களேன்..எண்ணிக்கை பிரச்சினையா இல்லை தமிழ் தான் பிரச்சினையான்னு பார்ப்போம்..ஆங்கில இடுகைத் தலைப்பிலும் 100க்கு மேல் எண்ணிக்கை உள்ள இடுகைத் தலைப்பை வைச்சுப் பார்த்து சொல்லுங்களேன்..

 3. ரவி நீங்கள் சொல்வது சரிதான்… 100க்கு மேற்பட்ட ஆங்கில எழுத்துள்ள பதிவிட்டாலும் பட்டை வேலை செய்கின்றது..!!!

  $_GET முறைமையில் பிழை இல்லை என்றே தெரிகின்றது. தமிழில் ஒரு எழுத்தில தலைப்பிட்டாலும் பணி புரியமாட்டேன் என்கிறது!!!!

  என்னவென்று புரியவில்லை…!!! 😐

 4. மயூரேசன் தகவலுக்கு நன்றி.

  இந்த பிரச்சனையால நான் அர்த்தமுள்ள தலைப்பு கொடுப்பதை நிறுத்தியிருந்தேன். நீங்களாவது ஒரு தீர்வு சொல்லுவீங்கள் எண்டு பாத்தா….

  இப்பிடி சொல்லிப்போட்டியள். இன்னும் வடிவா ஒருக்கா நோண்டி பாருங்கோவன்.

  பகீ.

 5. பகீ.. இது MYSQL, PHP இரண்டும் செய்திஓடையை மையமாக வைத்து ஒன்றை ஒன்று குளப்புவதால் வந்த வினையாம்.. தமிழ் மணம் நிர்வாகம் விரைவில் இது சம்பந்தமாக ஒரு தீர்வைத் தரலாம். பொறுத்திருந்து பார்ப்போம்!!!

 6. இப்ப என்ன பிரச்சனை எண்டா இந்த தமிழ்மணம் கருவிப்பட்டை சரியா வேலை செய்ய மாட்டன் எண்டுது. நான் நினைக்கிறன் இது வேர்ட்பிரஸ் 2.5 இக்கு ஒத்திசைவானதா இல்லை போல இருக்கு.

 7. @பகீ
  பகி, அது நூறுவீதம் ஒத்திசைவானது. எனது வலைப்பதிவில் வேர்ட்பிரஸ் 2.5.1 உடன் தமிழ்மணம் கருவிப்பட்டையைப் பாவித்தேன். பிரைச்சனை இல்லாமல் வேலைசெய்யதது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.