தமிழ் மணமும் கடுப்பேத்தும் செய்தித் தளங்களும்

அதிகமாகத் தமிழ் வாசகர்களை இழுக்க வலைப்பதிவுத் திரட்டிகள் ஒரு சிறந்த வழி என்பதை யாம் எல்லாரும் அறிவோம். திரட்டியில் சேர்த்தபின்னர் மொக்கைப் பதிவுகளுக்குக் கூட 100 ஹிட்சுக்கு அதிகமாகச் சம்பாதிக்கலாம்.

இதை நன்கே புரிந்து வைத்திருக்கும் செய்தி தளங்கள் தமிழ் மணத்தை கேவலமாகப் பயன்படுத்த தொடங்கியுள்ளனர். இவர்களை இரண்டு வகையாகப் பிரிக்கலாம்.

1. செய்தியின் ஒரு வரியைப் போட்டு மீதியை தளத்தில் படிக்கச் சொல்பவர்கள். அதாவது அசின் இன்று பிசினாகிவிட்டார். அவரின் மனேஜர் இது பற்றிக் கூறுகையில்.. என்று வாசிக்கும் போது <<மேலும்>> என்று ஒரு இணைப்பு இருக்கும். அதைக் கிளிக்கி மிகுதிச் செய்தியை அவர்களின் தளத்தில் வாசிக்க வேண்டும்.

2. இரண்டாம் இரகம் ரொம்பக் கேவலம். முன்பு கூறியபடி ஒரு செய்தியிருக்கும். மேலும் இணைப்பைக் கிளிக்கினால் ஒரு தளத்தின் முகப்பிற்கு எடுத்துச் செல்லும். அதாவது அந்த தளத்தின் சரியான செய்திக்கு இணைப்புத் தராமல் தளத்தின் ஹோம் பக்கத்திற்கு எங்களை எடுத்துச் செல்லும். தளத்தின் முகப்புப் பக்கதிற்கான வாகர் வரவை அதிகரிக்க ஒரு கேவலமான முயற்சி

தமிழ் மணத்திற்கு இது பற்றி அறிவித்தேன் ஆனாலும் அவர்களிற்கு இதுகளுக்கு நேரம் இல்லை போலும். இவ்வகையான தளங்களை இனம் கண்டி நீக்கி வாசகர்களின் வாசகப் பயனத்தை இலகுவாக்க தமிழ் மணம் நடவடிக்கை எடுக்க கோருகின்றேன்.

E.g

 1. ராஜ் தாக்ரேவை தாக்கும் மண்ணாங்கட்டி
 2. பார்த்தீபனின் வித்தகன்
 3. நமி நமி நமீதாஆஆஆஆ

சொல்லுறத சொல்லியாச்சு இனி தமிழ் மணமாச்சு தமிழ் செய்தித் தளங்களாச்சு.

6 thoughts on “தமிழ் மணமும் கடுப்பேத்தும் செய்தித் தளங்களும்”

 1. கரீக்ட் பாஸ்!

  ஒரே ஒரு தடவை ஆர்வத்தில ஆரம்பிச்சேன் அது கிட்டதட்ட நாலஞ்சு லொக்கேஷன் போயி ச்சே அதுக்கு படிக்காமலே இருந்திருக்கலாம் பீல் பண்ணி,அதுக்கு பிறகு தொடரதே இல்ல 🙂

 2. yes , mainly cinema related news, kishore, tamildigitalcinema, hr mansion… I to stopped clicking that posts. simply ignore those posts.

 3. சரியா சொன்னீங்க மயூரேசன்!… அதுவும் உந்த “தமிழ்—-” காரர் ரொம்ப மோசம். அவர்கள் நாலைந்து பேர் சேர்ந்து இயங்குகிறார்கள். தமிழ்மணத்தில் காணப்படும் அனேகமானவை அவர்களுடையவை தான்..

  தமிழ்மணம் தக்க முடிவை எடுக்கும்.

 4. தமிழ்மணத்தால் zoomla, mambo போன்ற நிரல்களில் இயங்கும் தளங்களில் இருந்து பதிவுகளை / செய்திகளை திரட்ட முடிவதில்லை. அதற்காகத்தான் இந்த தலையை சுத்தி மூக்கை தொடும் வேலையை செய்ய சொல்கின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.