அண்மையில் அலுவலகத்தில் இனிமேல் லினக்சின் உபுண்டு பதிப்பில் மென்பொருள் எழுதும் பணிகளை ஆரம்பிக்க வேண்டும் என்று அறிவித்தல் வழங்கப்பட்ட பின்னர் எனது அலவலக மடிக் கணனியில் உபுண்டு 13.04 ஐ நிறுவிக்கொண்டேன். எக்லிப்ஸ், நோட்ஜெஸ் என்று எல்லாம் உபுண்டுவில் களை கட்டிப் பறந்தாலும் அவ்வப்போது பேஸ்புக் போய் தமிழில் மொக்கை போட முடியவில்லை. தமிழ் 99 முறையில் தட்டச்சிடும் நான் எவ்வாறு தமிழில் தட்டச்சிடலாம் என்று தேடத் தொடங்கினேன்.
முதலில் நிறுவப்பட்டிருக்கும் செயலிகளில் iBus இருப்பதைக் கண்டுகொண்டேன். அதை திறந்து பார்த்தாலோ ஒரே ஆச்சரியமும் ஏமாற்றமும். காரணம் சீனம் மட்டுமே அதில் நிறுவப்பட்டு இருந்தது. சரி எப்படியாவது தமிழ் பொதிகளை நிறவிவிடவேண்டும் என்று புறப்பட்டேன்.
அதன் போது உபுண்டு மன்றத்தின் இந்த திரி கண்ணில் பட்டது. அடடா அதில் கூறியபடி செய்தவுடன் தமிழ் உடனேயே iBus தெரிவு சாரளத்தில் தெரியத் தொடங்கியது.
உங்கள் டேர்மினலைத் திறந்து அதில் பின்வரும் கட்டளையை இயக்கவும்
sudo apt-get install ibus ibus-m17n m17n-db m17n-contrib ibus-gtk
இப்போது iBus ஐத் திறந்து கொள்ளுங்கள். இப்போது Add எனும் தெரிவைத் தெரிவு செய்து அதில் தமிழ் 99 ஐத் தெரிவு செய்து கொள்ளலாம்.

அப்புறம் என்ன கலக்குங்கள்
ரொம்ப நாளாக பயர்பாக்சு தமிழ் விசை நீட்சியையும் விக்கிப்பீடியாவில் உள்ள விசைப்பலகையையும் வைத்தே ஓட்டிக் கொண்டு இருந்தேன். இப்ப துவிட்டர் போன்று ( rich text உடைய?) பல தளங்களில் நீட்சி வேலை செய்யவில்லை. விக்கிப்பீடியா கருவியையும் சில மீடியாவிக்கி காரங்க சொதப்பிட்டாங்க. தக்க நேரத்தில் உங்க இடுகை கண்ணில் பட்டது. இப்ப மீண்டும் உபுண்டுவில் இருந்தே தமிழ்99 🙂
உங்களைப் போன்ற மூத்த உபுண்டு பயனருக்கு உதவ முயன்றதில் மகிழ்ச்சி. 😉
பயனுல்ல தகவல்.
பலரும் தயக்கமில்லாமல் குனு-லினக்சுக்குள் வர, பல்வேறு திறனுள்ள கணினிகளைக் கணக்கில் கொண்டு, லினக்சுமின்டு-13-MATE தேர்ந்தெடுத்தேன். அதில் மிகமிக எளிமையாக தமிழ் தட்டச்சிட , முனையத்தில் இட வேண்டிய கட்டளை மிகவும் பயனுள்ளதாக இருந்தது. நன்றி. தமிழுக்குத் தேவைப்படும் பிற கட்டளைகளை ஒருபக்கத்தில் தொகுத்து அளித்தால் பலருக்கும் பயனுள்ளதாக இருக்கும். அவற்றை விரிவான விளக்கங்களுடன், புதியவர்களுக்கு உதவும் வகையில் எழுத எண்ணுகிறேன். உங்களது வலைப்பூ என்னையும் இதுபோல பயனுள்ள குறிப்புகளை எழுதத் தூண்டியுள்ளது.