உபுண்டு 10.4 இல் தமிழில் தட்டச்சிடல்

முன்பு ஒரு பதிவில் உபுண்டு 9.04 இல் தமிழ் 99 இல் தட்டச்சிடும் வசதி பற்றி எழுதியிருந்தேன். அதில் ஸ்கிம் எனும் ஒரு மென்பொருளை நிறுவி அதன் மூலம் தமிழில் தட்டச்சிடும் வசதி பற்றி எழுதியிருந்தேன். இந்த முறை எந்தவொரு மேலதிகப் பொதியையும் நிறுவாமால் 10.4 பதிப்பில் எவ்வாறு தமிழில் தட்டச்சிடுவது என்று எழுதுகின்றேன்.

முதலில் System => Preference => iBus Preference என்று நகர்ந்து கொள்ளுங்கள்

Input Method எனும் தாவலைத் தெரிவுசெய்துகொள்ளுங்கள்

கிடைக்கும் தகவல் பெட்டியில் உங்களுக்குத் தேவையான எழுத்து முறையைத் தெரிவு செய்து கொள்ளுங்கள். உதாரணத்திற்கு மேலே காட்டியுள்ள படிமத்தைக் காண்க.

இப்போது இடது பக்கம் உள்ள Alt + Shit விசைகளை ஒருங்குசேர அமத்துங்கள். நீங்கள் இம்முறையில் தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் தட்டச்சிடலாம்.

ஒவ்வொரு தடவையும் கணனி ஆரம்பிக்கும் போதும் இந்த செயலியை நீங்கள் இயக்க வேண்டும். Startup Applications இல் இதைச் சேர்த்துவிட்டால் அந்தப் பிரைச்சனை இருக்காது. எவ்வாறு சேர்ப்பது என்பது பற்றி இந்தப் பதிவில் காண்க.

Creative Commons License
உபுண்டு பதிவுகளின் அத்தனை உள்ளடக்கங்களும் Creative Commons Attribution-Share Alike 3.0 License அடிப்படையில் கட்டற்ற பயன்பாட்டுக்கு அளிக்கப்பட்டுள்ளன.

5 thoughts on “உபுண்டு 10.4 இல் தமிழில் தட்டச்சிடல்”

 1. அன்பு மயூரேசன், உங்கள் விளக்கம் நன்று. இப்போது உபண்டு 10.10 வெளிவந்திருக்கிறது. முதலில் சீன மற்றும் ஆங்கிலம் தவிர வேறு மொழிகளையே ஐபஸ்-ஸிற்குள் கொண்டு வர முடியாமல் இருந்தது. ஒரு மணி நேரத்திற்கும் மேலாக 💡 தலையை பிய்த்து கொண்டதில் http://ubuntuforums.org/showthread.php?p=10018540 என்கிற பக்கத்தில் விடையை கண்டு பிடித்தேன். உபண்டுவில் தமிழை பயன்படுத்துவதை பற்றி விரிவான கட்டுரை ஒன்றை நீங்கள் எழுத வேண்டும் என்பது என் கோரிக்கை.

 2. வணக்கம் … விக்கி யின் இலவச மென்பொருள் கொண்டு தளம் வடிவமைக்க முயன்றேன். அதில் ரிச் எடிட்டர் – ஐ எப்படி இணைப்பது இது குறித்து உதவிட வேண்டுகிறேன்.

  நன்றி… வணக்கம் …

 3. வணக்கம் மயூரேசன்:

  உபுண்டு ஒலிப்பெயர்ப்பு முறை வழமையானாதை விட வேறாக இருக்கிறதே?

 4. @நக்கீரன்
  நான் ஒலிப்பு முறையைப் பயன்படுத்துவதில்லை. தமிழ் 99. சாதாரண முறையை விட வேறு பட்டிருந்தால் பிரைச்சனைதான்.! ஒலிப்பு முறையில் ஒவ்வொருவரும் தமக்கேற்ற நியமங்களை ஏற்படுத்திக் கொள்வதின் விளைவு இது.

 5. தமிழ்99 முறைமையை, எப்பொழுதும் பயன்படுத்தும் படி அமைத்துக் கொண்டேன். உங்கள் குறிப்புகள் இல்லையென்றால் தடுமாறியிருப்பேன். பயனுள்ள குறிப்புகளை பதிந்தமைக்கு மிக்க நன்றி. அவ்வப்போது, என் போன்ற கத்துக்குட்டிகளுக்கும், எழுதுமாறு வேண்டுகிறேன். வணக்கம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.