Tag Archives: தமிழ்

பையா விமர்சனம்

வழமை போல எல்லாரும் எழுதி முடித்த பின்னரே நான் இந்த திரைப்பட விமர்சனத்தை எழுத ஆரம்பிக்கின்றேன். புதுவருட விடுமுறைக்கு யாழ் சென்று சும்மா ஆணி புடுங்கிக்கொண்டு இருந்த வேளையில் சோதரன் அழைக்கவே யாழ் நகர் சென்று பையா படம் பார்க்கச் சென்றேன்.

அதிகமாக எதிர்பார்ப்பு வைத்திருக்கவில்லை காரணம் ஏற்கனவே பலரும் பல விதமான விமர்சனங்களை முன்வைத்திருந்தமையே. சூப்பர் என்று சிலரும் மொக்கை என்று சிலரும் சொல்லி வைத்திருந்த காரணத்தால் நானே சென்று பார்த்து முடிவெடுப்பதாக இருந்தேன்.

திரைப்படம் தொடங்கியதில் இருந்து திரைப்படம் முடியும் வரை நாயகன் ஓடு ஓடு என்று ஓடுவார் அவர் கூட நாயகியும் ஓடுவார். வில்லனும் விதியும் விடாமல் துரத்தும். அவ்வகையான திரைப்படங்களை நாம் இது வரை பார்த்திருக்கின்றோம். அவ்வகையைச் சார்த்த திரைப்படம்தான் இந்த திரைப்படம்.

கார்த்தி பொறுப்பற்ற ஒரு இளைஞன். வாழ்வில் வித்தியாசமாக எதையும் முயற்சித்து காலம் கடத்துபவன். விதியின் செயலால் கட்டாயத் திருமணத்தில் இருந்து தமனாவைக் காப்பாற்றும் ஒரு பொறுப்பில் வீழ்கின்றான்.

கிடைத்த இரவல் காரில் தமானாவை ஏற்றிக் கொண்டு ஊர் ஊராக ஓடுவதும் பின்னால் இரண்டு ரவுடிக் கும்பல் துரத்துவதுமாகக் கதை. இடையில் சொல்ல நினைத்தும் சொல்லாமல் தவிக்கும் ஒரு காதல் வேற.

திரைப்படத்தில் என்ன சிறப்பு என்று கேட்டீர்களானால் என்னைப் பொறுத்தவரையில் பிண்ணனி இசை மற்றும் இரண்டு பாடல்கள். சண்டைக் காட்சியில் வரும் இலக்ரோனிக் கிட்டார் இசை எங்கள் மீசையையும் முறுக்க வைக்கின்றது. என் காதல் சொல்ல நேரம் இல்லை மற்றும் துளி துளி மழைத்துளியாய் வந்தாளே பாடல்கள் மனதில் நச்சென்று பதிந்து விடுகின்றன. மற்றய பாடல்கள் ஒட்டவில்லை.

லொஜிக் இல்லாத மொக்கை சண்டைகளுக்கு குறைவில்லை. இருபது முப்பது பேரை கார்த்தி ஒத்தையாளாக அடித்து வீழ்த்தும் போது.. ஷப்பா… ஆரம்பிச்சுட்டாங்கையா என்றுதான் சொல்லத் தோன்றுகின்றது. ஆனால் தியட்டரில் அந்த சண்டைக் காட்சிகளை விசிலடிச்சு இரசிக்கவும் ஒரு கூட்டம் இருக்கின்றது என்பதே உண்மை.

கார்த்தி நடிப்பு ஓ.கே. தமானா நடிப்பு என்று ஒன்றும் இல்லை ஆனால் கியூட்டா இருந்தாங்க. என்றாலும் கார்த்திதான் பெஸ்ட். 😉

கார்த்தியின் நடிப்பு ஆயிரத்தில் ஒருவன் மற்றும் பருத்தி வீரன் போன்ற திரைப்படங்களுடன் ஒப்பிடும் போது சுமார்தான். கார்த்தி சில இடங்களில் சூர்யாவையும் சில இடங்களில் சிவ குமாரையும் ஞாபகப் படுத்துகின்றார். இன்னும் சிறப்பாக எதிர் வரும் படங்களில் நடிப்பார் என்று நம்பலாம்.

படம் சூப்பரா இல்லை மொக்கையா என்று என்னிடம் கேட்டால் என் பதில் இரண்டும் இல்லை என்பதுதான். ஒரு தடவை தியட்டரில் பார்த்து இரசிக்க கூடிய திரைப்படம். திருட்டு வீசீடியில் பார்ப்பதற்கு இந்த திரைப்படத்தில் ஒன்றும் இல்லை.

அது சரி எதற்காக இந்த திரைப்படத்திற்கு “பையா” என்று பெயர் வைத்தனர்??? பேசாமல் பெங்களூரில் இருந்து மும்பாய் வரை என்று ஒரு பெயர் வைத்திருக்கலாம்.  வர வர லிங்குசாமியிடம் சரக்கு குறைந்து போகின்றதோ என்று எண்ணத் தோன்றுகின்றது.

தமிழுக்கும் எழுத்து -> பேச்சு வந்தாச்சு

கண்தெரியாத பலரும் Text to Speech எனும் தொழில்நுட்பம் மூலம் இணையப் பக்கங்களை வாசிப்பதுண்டு. இந்த தொழில்நுட்பம் இத்தனை காலமும் தமிழுக்கு கிடைக்கவில்லை. இன்று நிமலின் ட்விட்டின் மூலம் இந்த தொழில்நுட்பம் தமிழுக்கும் வந்துவிட்டது என்பதை அறிந்து பேருவகை கொண்டேன்.

http://mile.ee.iisc.ernet.in:8080/tts_demo/ என்ற முகவரிக்குச் சென்று அங்கே தமிழில் தட்டச்சு செய்து “Submit” எனும் பொத்தானை அமுக்குங்கள். பின்னர் வரும் சாரளத்தில் வரும் தொடுப்பை சொடுக்கி பேச்சைக் கேளுங்கள். நீங்கள் தட்டச்சு செய்ய எழுத்துக்களை ஒரு ஆண் பேசிக் காட்டுவார்.

பிளாக்கர் தமிழ் இடைமுகம்

இப்போது பிளாக்கர் ட்ராஃப்ட்இல் தமிழ் இடைமுகம் கிடைக்கின்றது. விரைவில் பிளாக்கர்.காம் இல் இந்த இடைமுகம் கிடைக்கும் என்று நம்பலாம். தமிழ் உட்பட தெலுங்கு, மலையாளம், கன்னடா போன்ற பல இந்திய மொழிகளிலும் விரைவில் கிடைக்கும் என்று தெரிகின்றது.

பிளாக்கர் வரைவு தமிழில்

கூகிள் ஜிடாக் அரட்டை தமிழில்

Tamil Google Botஇப்போது ஜிமெயிலில் நேரடியாகத் தமிழில் அரட்டை அடிக்கலாம். கூகிள் இந்தியா இதற்கான வசதியை செய்து வழங்கியுள்ளது. இவ்வாறு அரட்டை அடிப்பதற்கு முதலில் en2ta.translit@bot.talk.google.com எனும் முகவரியை உங்கள் தொடர்பாக சேர்த்துக்கொள்ளுங்கள்.

பின்னர் உங்களுக்கு அரட்டை அடிக்க விருப்பமான நண்பரை அரட்டைக்கு அழையுங்கள். பின்னர் அந்த அரட்டையை குழு அரட்டை ஆக்குங்கள். அந்த குழு அரட்டைக்கு en2ta.translit@bot.talk.google.com ஐயும் அழையுங்கள். இப்போ ஆங்கிலத்தில் தட்டச்சிட தட்டச்சிட தமிழில் இந்த பாட் உங்களுக்கு மாற்றிக்காட்டும்.

இதில் இருக்கிற பிரைச்சனை என்ன வென்றால் இரண்டு தடவை நாங்கள் தட்டச்சிடுவது மீள மீள வருது. உதாரணமாக நான் amma என்று தட்டச்சிட்டா அங்கே amma, அம்மா இரண்டையும் காட்டுது. இதை விரைவில் திருத்துவார்கள் என்று நம்புவோம்.

கலக்குங்க….

இப்போ ஜிமெயில் தமிழில்

இப்போது ஜிமெயிலுக்குத் தமிழ் இடைமுகம் வழங்கப் பட்டுள்ளது. தமிழுடன் கிட்டத்தட்ட அனைத்து இந்திய மொழிகளுக்கும் ஜிமெயில் இடைமுகம் வழங்கப்படுகின்றது. இந்த சேவை மூலம் கிட்டத்தட்ட 90 வீதமான இந்தியர்கள் தமது சொந்த மொழியில் ஜிமெயிலைப் பயன்படுத்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

தமிழ் இடைமுகத்தைப் பெற்றுக்கொள்ள settings சென்று Language என்பதில் தமிழ் என்பதைத் தெரிவு செய்யுங்கள்…

கூகிள் வாழ்க… தமிழ் அதனிலும் ஓங்கி வாழ்க.

வேர்ட்பிரசில் த.ம கருவிப் பட்டை செயல்இழப்பதேன்?

எனது வலைப்பதிவில் ஜோராக வேலைசெய்துகொண்டிருந்த தமி்ழ்மணம் கருவிப்பட்டை, வேர்ட்பிரஸ்பக்கங்களுக்கு அர்த்தமுள்ள முகவரி கொடுத்ததும் செயல் இழந்துவிட்டது. இதற்கு என்ன காரணமாக இருக்கும் என்று நோண்டி நோண்டி பார்த்ததில் எனக்குப் புரிந்த பிழை இதுதான். Continue reading வேர்ட்பிரசில் த.ம கருவிப் பட்டை செயல்இழப்பதேன்?

IE 8 வேண்டாம் Firefox beta 3 போதும்

இன்று கலைஞர் தொலைக்காட்சியில் மண் திரைப்படம் பதிவை இடும் போது ஒரு விடையத்தைக் கவனித்தேன். அதாவது Firefox தமிழ் முகவரிகளை அழகாகக் காட்டுகின்றது. கீழே இணைக்கப்பட்ட படங்களைப் பாருங்கள்.

IE 8
null

Firefox beta 3 null

விக்கீப்பீடியாப் பக்கங்களையும் சென்று பார்த்தேன் அழகாக காட்டுகின்றார். அச்சா குட்டி!

இப்போ மைக்ரோசாப்ட் அண்ணாச்சி என்ன சொல்கிறாராம்!!! 😎

Firefox 3  Beta 3 பதிவிறக்குக

தமிழ் மொழி பெயர்ப்பான் விரைவில்???

null
கூகிள் நிறுவனத்தின் மொழிபெயர்ப்பு சேவையை நீங்கள் பல தடவை பயன்படுத்தியிருப்பீர்கள். இதன் முக்கியமான விடையம் என்னவெனில் அங்கு ஆங்கிலத்தில் உள்ளிட்டு சீனம், பிரஞ்சு, அரபி போன்ற மொழிகளில் தேடலாம்.

தமிழ், ஹி்ந்தி சேவை வழங்கப்படலாம் என்று ஒரு செய்திக் குறிப்பு சொல்கின்றது. அவ்வாறு நடந்தால் பின்வருமாறு நாம் தேடலாம்.

உ+ம்: how to make a cup of tea? என்று தேட அது “எப்படி ஒரு கோப்பை தேனீர் தயாரிப்பது?” என்று தேடித்தரும்.

இந்த தளத்திற்குச் சென்று இது வரை உள்ள மொழிகளில் தேடி, எதிர்காலத்தில் தமிழ் வரும் போது தேடுவதற்கு இப்போதே பயிற்சி எடுக்கவும் 🙂

அன்புடன்,
மயூரேசன்

தமிழ் வேர்ட்பிரஸ் வந்தார்

தமிழ் கூறும் நல்லுலகம் இறுதியாக ஒன்றிணைந்து ஒரு நல்ல நிகழ்வினை நடத்தி முடித்துள்ளது. தமிழில் வேர்ட்பிரஸ் இடைமுகம் வழங்கப்பட்டுவிட்டது.

அங்கங்கே பிழைகள், ஒரு சொல்லுக்கு வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு சொற்கள் பயன்படுத்தப்பட்டமை போன்ற பிரைச்சனைகள் உள்ளன. ஆயினும் எமது கூட்டுமுயற்சியின் வீரியத்தின் முன்னால் இவையனைத்தும் எதுவமேயல்ல.

 அடுத்த பதிப்பில் இந்தக் குறைகளையும் களைய வேண்டும். எத்தனையே தடவை முக்கி முக்கி வேண்டியபோதும் பிளாக்கருக்கு தமிழ் இடைமுகம் வழங்காமல் பிகுபண்ணும் கூகுகிள் இதைப் பார்த்தாவது இடைமுகம் வழங்கட்டும்.

http://ta.wordpress.com என்ற முகவரிக்குச் சென்று தமிழ் வேர்ட்பிரசைக் காணுங்கள்!!!

 இத்திட்டத்தை முன்னின்று நடத்திய அனைவருக்கும் என் நன்றிகள்.

வாழ்க தமிழ்! வாழிய தமிழ் கணனியியல்!!!

2007 முடிவுக்குள் wordpressஐத் தமிழாக்குவோம்

கடந்த ஒரு வாரத்தில் 700 சரங்களைத் தமிழாக்கி உள்ளேன். இன்னும் 2200 சரங்கள் உள்ளன. அண்மையில் மயூரேசனும் களத்தில் குதித்து இருக்கிறார்

தமிழ்ப்பதிவுலகம், தமிழ்ப்பதிவுலகம் என்று நிறைய பேசிக் கொண்டே இருக்கிறோம்..ஆனால், ஆக்கப்பூர்வமான செயல்கள் குறைவு தான்..இதைத் தமிழாக்கி முடிப்பது உருப்படியான ஒரு பணியாக இருக்கும்..தமிழ் மட்டும் அறிந்த பல தமிழர்களை வலைப்பதிய வைக்கும்..அதுவும் இல்லாமல் நம் பண்பாட்டுக்கு ஏற்ற சொல்லாடல் உள்ள இடைமுகப்பப்பை உருவாக்குவது இனிமையாக இருக்கும் தானே..

எப்படி செய்வது?

http://translate.wordpress.com/ சென்று பயனர் கணக்கு உருவாக்கி மொழிபெயர்ப்பு மொழியாகத் தமிழைத் தேர்ந்தெடுங்கள்.

http://translate.wordpress.com/list.php போய் மேலிருந்து கீழாக்க ஒவ்வொரு சரமாக மொழிபெயர்க்கலாம். edit என்ற குறிப்பிடப்பட்டிருப்பவை ஏற்கனவே தமிழாக்கப்பட்டு விட்டது. அவற்றை விட்டு விடலாம். இல்லை, சரியாக தமிழாக்கப்பட்டிருக்கிறா என்று உறுதி செய்யலாம். add இணைப்பு உள்ளவை இன்னும் தமிழாக்கப்படாமல் இருப்பவை.

தெளிவில்லாத சரங்களை அப்படியே விட்டுவிடுங்கள். வேறு யாராவது தமிழாக்கலாம். சரத்தில் ஓரிரு சொற்கள் மட்டும் தெரியவில்லை என்றால் அவற்றை அப்படியே ஆங்கிலச் சொற்களாக ஆங்கில எழுத்திலேயே எழுதி விடுங்கள். விவரம் தெரிந்த வேறு எவரும் தமிழாக்கலாம். ஐயங்கள், விளக்கங்களை comment பகுதியில் தந்தது உரையாடுங்கள். பொதுவான உரையாடல்களுக்கு, நம்முடையே ஆன ஒருங்கிணைப்புக்கு http://groups.google.com/group/tamil…ss_translation குழுமத்தில் இணையலாம்.

தளம் முழுக்க ஒரே மாதிரி சொல்லாடல் இருப்பது முக்கியம்..இதுவரை நான் பயன்படுத்திய பொதுவான சொல்லாடல்க்களும் என் பரிந்துரைகளும்..

blog – பதிவு (most of the places, to be short)..வலைப்பதிவு (when we need to be more formal)

post – இடுகை

comment – மறுமொழி

category – பகுப்பு

tag – குறிச்சொல்

wordpress – வேர்ட்ப்ரெஸ

link – தொடுப்பு

user – பயனர்

logout (verb) – வெளியேறுக

login (noun) – புகுபதிகை

edit – திருத்துக

role – பொறுப்பு

நினைவு வரும்போது பிற சொற்களையும் தமிழாக்கக் குழுமத்தில் தெரிவிக்கிறேன்.

கவனத்தில் வைக்க வேண்டிய இன்னும் சில – நம் பண்பாட்டுக்கு ஏற்ப வினைச்சொற்களை மரியாதை விகுதிகளுடன் எழுதலாம். எடுத்துக்காட்டுக்கு, தேடு என்பதற்குப் பதில் தேடுக என்று தமிழாக்கலாம். இன்னொன்று நேர்மறையாக தமிழாக்குவது. எடுத்துக்காட்டுக்கு, delete userஐ பயனரை அழிக்கவும் என்று சொல்லாமல் பயனரை நீக்கவும் என்று தமிழாக்குவது..அழிப்பது என்பது நமது பண்பாட்டில் கடுமையான சொல்லாடல் தானே..

நீங்கள் குறைந்தது இவ்வளவு சரங்கள் தமிழாக்க வேண்டும் என்று ஒரு கட்டாயமும் இல்லை. உங்களால் இயன்றைச் செய்யலாம். ஒரு நிமிடத்துக்கு இரண்டு சரங்கள் என்ற வேகத்தில் தமிழாக்குவது பெரும்பாலும் சாத்தியமே..

எவ்வளவே பண்ணிட்டோம்..இதைப் பண்ண மாட்டமா

அன்புடன்
ரவி

மேலும் அறிய ரவியின் தளத்திற்குச் செல்லுங்கள்

தமிழ் வேர்ட்பிரஸ் மடலாடற் குழுவில் நடந்த உரையாடல் ஒன்று…….!! அதிரடியாக இந்தத் திட்டத்தை நிறைவேற்ற  தமிழ் ஆர்வலர்களையும் அழைக்கின்றேன்!!!!  😆