Scarface விமர்சனம் (1983)

அல் பாசினோ ஹாலிவூட் கண்ட ஒரு பெருமகன் என்பதில் ஐயம் இல்லை. திரைப்படத்தைப் பற்றி எழுத முன்னர் அவரைப் பற்றி சில வரிகள் எழுதியே ஆக வேண்டும். நான் முதல் முதலாகப் பார்த்த அலபாசினோ திரைப்படம் ‘Scent of a Woman’ எனும் திரைப்படம். கண் தெரியாத ஒரு வயதான நபராக வந்து திரைப்பட முடிவில் அனைவர் மனதையும் அள்ளிச் செல்வார். சில ஆண்டுளின் பின்னர் இவர் நடித்த உலகப் புகழ் பெற்ற திரைப்படமான ‘The Godfather’ திரைப்படத்தைப் பார்த்தேன். இள வயதில் எத்தனை துடிப்பான ஆண் அழகுடன் மிடுக்காக நடித்து இருக்கின்றார். அதைத் தொடரந்து பார்த்ததே இந்த ‘Scarface’ திரைப்படம்.

எங்கள் கொலிவூட் அல்ட்டிமேட் ஸ்டார் அஜித் நடித்த படம் பில்லா 2 கூட இந்த திரைப்படத்தைத் தழுவி எடுக்கப்பட்டதாகவே கூறப்பட்டது. இன்னும் பில்லா 2 திரைப்படத்தைப் பார்க்காத காரணத்தால் அதை உறுதிசெய்ய முடியவில்லை.

1980ம் ஆண்டு கியூப அதிபர் பிடல் காஸ்டோ கியூபாவில் தங்க விருப்பம் இல்லாத அனைவரும் நாட்டை விட்டு வெளியேறலாம் என்று உத்தரவிட்டார். ஏப்ரல் 1980 முதல் அக்டோபர் 1980 வரை சுமார் 125,000 கியூபர்கள் அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தை வந்தடைந்தனர். இந்த அகதிகள் வருகையை அமெரிக்கா அவரசமாக நிறுத்தியதன் காரணம் வந்து சேர்ந்தவர்களில் பெரும்பாலானோர் சிறைச்சாலையில் இருந்து வெளியேறியவர்களும் மனோநிலை சரியில்லாதவர்களுமாவர்.

இந்த நிகழ்வை மையமாக வைத்து பல ஹாலிவூட் திரைப்படங்கள் இயக்கப்பட்டன (The Perez Family (1995), and Before Night Falls (2000)). இந்த ஸ்கார்பேஸ் திரைப்படமும் இவ்வாறு படகில் அமெரிக்கா வந்த ஒரு அகதியைச் சுற்றி நடக்கும் கதையையே களமாகக் கொண்டுள்ளது.

படகில் வரும் கியூப அகதிகள்

1980 இல் அகதியாக அமெரிக்க மண்ணில் கால் பதிக்கின்றார் டொனி (அன் பாசினோ) மற்றும் அவர் நண்பர்கள். பீரீடம்டவுன் எனும் அகதி முகாமில் அடைக்கப்படுகின்றான். போதைப் பொருள் கடத்தும் ஒருத்தன் வேண்டுகோளுக்கு இணங்க அங்கே அகதி முகாமிற்கு அடைக்கலம் தேடி வரும் முன்னாள் கியூப அரச அதிகாரி ஒருத்தரை கொலைசெய்கின்றான் டொனி. இதற்குப் பரிகாரமாக டொனிக்கும் அவன் நண்பனிற்கும் கிரீன் கார்ட் சட்டத்திற்குப் புறம்பாகக் கொடுக்கப்படுகின்றது.

இயக்கம் :Brian De Palma
தயாரிப்பு : Martin Bregman
வசனம் : Oliver Stone
நடிப்பு : Al Pacino
தொடுப்புகள் : IMDB
: Rotten Tomatoes
: Wiki

இதன் பின்னர் ஒரு உணவகத்தில் டொனியும் அவன் நண்பனும் வேலைசெகின்றனர். வாழ்க்கையில் பெரிதாக எதையும் செய்ய வேண்டும் என எண்ணும் டொனி தனது நண்பன் உதவியுடன் உணவக வேலையை விட்டு போதைப் பொருள் விற்பனையில் ஈடுபடுகின்றான்.

இந்த தொழிலில் மெல்ல மெல்ல உச்சிக்கு செல்லும் டொனி இறுதியில் என்ன ஆகின்றான். அவன் காதலித்த பெண், உறவினர்கள் கதி என்னாகின்றது என்பதை மிகுதிப் படம் காட்டுகின்றது.

வன்முறை வன்முறை வன்முறை

படம் தொடங்கும் போதும் முடியும் போதும் “”The World is Yours”” எனும் வார்த்தை படத்தில் வந்து போகும். உண்மையிலேயே இந்த உலகம் எங்களுடையது இல்லை என்று சொல்லாமல் சொல்கின்றார்கள் போலும்.

அந்த்காலத்திலேயே இத்தனை வன்முறைகளுடன் படம் எடுத்து சக்கை போட்டிருக்கின்றார்கள். நின்றால் குத்து இருந்தாள் துப்பாக்கிச்சூடு என படம் முழுக்க திரும்பும் இடம் எலாம் வெட்டுக் குத்தது மற்றும் கண்ணே காதலி என்று படம் இருக்கின்றது.

பணத்தால் வாங்கிய காதலி

இந்த திரைப்படம் வெளியான வேளையில் வன்முறைக்காக இந்த திரைப்படம் கடும் எதிர்ப்பை வாங்கிக்கட்டிக்கொண்டது. அத்துடன் மியாமியில் இருக்கும் கியூப குடியேற்ற வாசிகள் தங்கள் சமூகத்தை போதைப்பொருள் கடத்துபவராகவும் கொள்ளைக்காரர்களாகவும் காட்டுவதாகக் கூறி இந்தத் திரைப்படத்திற்கு கடும் எதிர்ப்பு வெளியிட்டனர்.

திரைபடம் வெளியிடப்பட்ட காலத்திலே அவ்வளவாகப் பெயர் பெறாவிட்டாலும் காலப்போக்கில் படத்திற்கு நல்ல பெயர் கிடைக்கத் தொடங்கியது. அந்தக்காலத்தில் சுமார் 65 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வசூல் செய்துள்ளது. இக்காலப் பெறுமதியில் இது 150 மில்லியன் அமெரிக்க டாலர்களை விட அதிகம்.

சுமார் 30 வருடம் பழமையான திரைப்படம். ஆகவே திரைப்படம் பார்க்கும் போது இந்த வருடம் வெளியான அதிரடி திரைப்படம் போல வேகமாக இருக்கும் என்று எதிர்பார்க்காதீர்கள். ஆனால் கிரைம் கதைகளை இரசிப்பவரானால் உங்களை ஏமாற்றாது இந்த திரைப்படம்.
.

6 thoughts on “Scarface விமர்சனம் (1983)”

  1. பில்லா 2 வெளியான பிறகு தான் ஒரு கம்பேர் பண்ணிப் பார்க்கலாம் என்று இந்தப் படத்தைப் பார்த்தேன். ஆனாப் பாருங்க….பில்லா 2 பார்க்க ஆரம்பித்து ஒரு 30 நிமிஷத்தில் தூங்கிட்டேன். ஆனாப் பார்த்த வரைக்கும் பில்லா 2வின் அசல் இது தான்.

  2. ஹி..ஹி.. அப்படித்தான் நானும் கேள்விப்பட்டேன் பலர் தூங்கிவிட்டதாக. என் நண்பன் ஒருவன் திரையரங்கில் படத்தின் ரோதனை தாங்க முடியாமல் ஹெட்போன் போட்டு ஷக்தி எப்.எம் கேட்டுக்கொண்டே தூங்கிவிட்டானாம். 😉

  3. இந்த திரைப்படம் வன்முறைக்காகவே அமெரிக்காவில் ஓடியதாம் அந்தக் காலத்தில். அல் பாசினோ உண்மையிலே அருமையான நடிகர். அதுவும் இறுதிக் காட்சிகளில் வெறி வந்த ஓநாய் போல எதிரிகள் மீது பாயும் காட்சி.. அட அட அட !!

  4. நான் இந்த திரைப்படம் பார்கவில்லை.
    நீங்கள் கூறியதில் இருந்து இது தான் ஒரிஜினல் என்று தெரிந்து கொண்டேன்.

    1. @கிருஷ்ணா வருகைக்கு நன்றி நண்பரே. ஆமாம் பலர் இதுதான் மூலம் என்று பலர் கூறுகின்றார்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.