Salt (2010) விமர்சனம்

கொஞ்ச நாளாகவே திரைப்படம் பார்த்தால் ரொம்பவும் வெறுப்பாக இருக்கின்றது. புதிதாய் வரும் திரைப்படங்களிற்குப் பதிலாக சுறா மற்றும் வில்லு போன்ற லொள்ளு வஜையின் படங்களை… சீ.. சீ.. விஜயின் படங்களைப் பார்த்துவிடலமோ என்று தோன்றுகின்றது. இன்று வேலைக்கு கல்தா கொடுத்துவிட்டதால் அமைதியாக இருந்து பெரிய எதிர்பார்ப்பில்லாமல் இந்த சோல்ட் படத்தைப் பார்க்கத் தொடங்கினேன். எதிர்பார்ப்பு இல்லாமல் பார்க்கத் தொடங்கியதால் என்னவோ படம் ஓரளவு திருப்தியாகவே அமைந்தது.

பனி யுத்தக்காலத்தில் அமெரிக்காவும் றுசியாவும் முட்டிக்கு முட்டி மல்லுக் கட்டிக்கொண்டி இருந்தன. ஒருத்தரை ஒருத்தர் அணுவாயுதம் கொண்டு அழித்துவிடுவதாககூட மிரட்டினர். இப்படியான பனி யுத்தக் காலத்தில் ஆரம்பிக்கும் கதை இன்றைய காலம் வரை வந்தால் எப்படி இருக்கும் என்பதுதான் கதை.


நீறு பூத்த நெருப்பாக றுசிய உளவாளிகள் அமெரிக்க மண்ணில் இருக்கின்றார்கள். காலம் வரும் போது சர்வ நாசம் செய்து தம்மை அடையாளம் காட்டுவர் என்றும் அவர்களுக்கு அறிவுறுத்தப் படுகின்றது.

அஞ்சலீனா ஜூலி இந்த திரைப்படத்தில் சோல்ட் ஆக நடிக்கின்றார். அவர் ஒரு சி.ஐ.ஏ உளவாளி திரைப்படம் ஆரம்பத்திலேயே வட கொரிய சிறைச்சாலையில் வைத்து நையப் புடைக்கப்படுகின்றார். பின்னர் கைதிகள் பரிமாற்றம் மூலம் மீள அமெரிக்கா வந்து சேர்கின்றார்.

ஒரு நாள் இவர்களின் அலுவலகத்தினுள் நுழையும் ஒரு றுசிய நபர் சோல்ட் எனும் பெண் விரைவில் அமெரிக்கா வரவிருக்கும் றுசிய அதிபரை போட்டுத்தள்ளப்போவதாகக் கூறுகின்றார். அவர் சொன்ன சோல்ட்தான் நாம் பார்த்த ஹீரோயின் அஞ்சலீனா. இதைக் கேட்டு பதகளித்து தப்பி ஓடி அஞ்சலீனா என்ன செய்தார் என்பதை காட்டியுள்ளார்கள் மிகுதித் திரைப்படம் முழுவதும்.

கதையின் மையப் பாத்திரங்கள் சோல்ட் (அஞ்சலீனா), லீவ் ஸ்கிரைபர் (இவர் தான் வூல்வரீனின் அண்ணா சைபரூத்தாக வருபவர்), Chiwetel Ejiofor (மற்றோரு CIA அதிகாரி) ஆகியோரைச் சுற்றி நகர்கின்றது.

அஞ்சலீனா ஜூலியை டொம் ரைடரில் பார்த்த காலத்தில் இருந்தே இயந்திரத் துப்பாக்கி, நெருப்பு, புல்லட்டு என்று பார்த்தால் அவருடன் ஒட்டிவிடுகின்றது. அவரிற்கு ஏற்ற பாத்திரத்தை அருமையாகச் செய்துள்ளார்கள். இறுதி வரை இவள் என்ன மண்ணாங்கட்டி செய்றாள் என்றே தெரியாது. படம் ஒரு 75 வீதம் ஓடியபின்னரே கதை ஓரளவு புரியத் தொடங்குகின்றது.


படங்கள் வெறுத்து எதைப் பார்ப்பது என்று இருந்தால் இந்த திரைபடம் நிச்சயம் உங்களுக்கு ஆறுதல் தரும். அட்லீஸ்ட் தலையிடி தரும் 😉

My Rating: 65/100

IMDB Rating: 67/100

7 thoughts on “Salt (2010) விமர்சனம்”

 1. நண்பரே,

  மிகுந்த பில்ட் அப் உடன் இங்கு படம் ரிலீஸ் ஆகியது. படம் சுமார்தான்.

 2. உங்கள் வலைப்பூவில் இருக்கும் மாற்றங்கள் அருமையாக உள்ளன. பாராட்டுக்கள்.

 3. இந்தப் படம் பார்த்தப்போ ஏனோ எனக்கு விஜயகாந்த் நடித்த ‘நரசிம்மா’ படம்தான் ஞாபகத்திற்கு வந்தது!

 4. @விஷ்வா
  நான் ட்ரெயிலர் கூடப் பார்க்கவில்லை. படம் சுமார் இரகத்தில் அடங்குகின்றது. ஆனால் படம் பார்த்து இனி எந்தப் படத்தைப் பார்ப்பது என்று வெறுத்திருந்த நேரத்தில் இந்தப் படம் ஓரளவு ஆறுதலாக இருந்த்து. மொக்கைக் கதை என்பதனால் 65 புள்ளி வழங்கியுள்ளேன்.

  @மோகன்
  ஹி..ஹி… அவ்வ்.. பாவம் அவர்… அரசியல் போனாலும் விடமாட்டீங்களா அவரை.. ஹி..ஹி..

 5. ஹலோ பாலா..இது மகா மொக்கை படம்..ஏஞ்சலினா நம்ம கேப்டன் மாதிரி என்ன தடை இருந்தாலும் அப்படியே ஊதி தள்ளிட்டு போறதை பார்த்து… பார்த்து…பார்த்து.. அட! போங்கப்பா..

  இவங்க பண்ண சூப்பர் னு சொல்றாங்க..நம்ம ஆளுங்க பண்ணுனா கிண்டலடிக்கறாங்க.. என்ன உலகமடா இது! 🙂

 6. @கிரி
  நன்றி கிரி வரவிற்கு பின்னூட்டத்திற்கும். அப்புறம் கப்டனை மெச்சிய உங்களுங்கு ஒரு பூங்கொத்து

  அதைவிட என்னை பாலா என்று போட்டிக் கீரைக் கடை நடத்துபவரை கூப்பிட்டமைக்கு கண்டனங்கள் 🙂

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.