Robin Hood (2010) விமர்சனம்

ஏழைகளிடம் திருடி பணக்காரனிடம் கொடுப்பவன் துரோகி. பணக்கானிடம் இருந்து திருடி ஏழைகளிடம் கொடுத்தால் அவன் ஹீரோ. இவ்வகையான ஹீரோக்களுக்கு முன்மாதிரியாகத் திகழ்ந்தவர் ஏழைகளின் தோழன் ரொபின் ஹூட். ரொபின் ஹூட் நொட்டிங்காம் எனும் பிரதேசத்தில் வாழ்ந்து அங்கே மக்களுக்கு எதிராக கொடுங்கோல் ஆட்சி புரிந்த செரீபை எதிர்த்து மக்களுகுச் சேவை செய்ததாக வரலாறு.

இவ்வகையில் பல திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சித் தொடர்கள் வெளிவந்துள்ளன. என் உள்ளத்தை என்றும் விட்டு நகராத ரொபின் கூட் தொலைக்காட்சித் தொடர் 80களில் வெளியானது பின்னர் இலங்கை ரூபவாகினியில் சிங்களத்திலும் ஆங்கிலத்திலும் 90 களில் ஒளிபரப்பானது.

இலங்கையில் உள்ள எந்த வொரு குழந்தையும் அக்கால கட்டத்தில் இந்த ரொபின் கூட் தொலைக்காட்சித் தொடரைப் பார்க்காமல் இருந்திருக்க முடியாது. ரொபின் கூட்டினால் உந்தப்பட்டு மரத்தில் வாள் தீட்டியதையும் ஈர்க்கில் எடுத்து அதில் அம்பும் வில்லும் செய்து குருவியை சரி குறிவைத்து அடிக்க முயன்றதும் மறக்க முடியாத காலங்கள். இதைப் பற்றி சில இலங்கைப் பதிவர்கள் கூட பதிவிட்டிருந்தார்கள்.

இந்த ரொபின் கூட் தொலைக் காட்சித் தொடரில் நடித்த பலரும் திரைப்படங்களில் நடிப்பதில்லை. ஹீரோ வாக இரண்டு ரொபின்கள் வருவார்கள். முதல் பாகத்தில் வரும் ரொபின் கொலை செய்யப்பட்ட பின்னர் ரோபேர்ட் எனும் ஒரு பிரபுக் குடும்பத்தைச் சேர்ந்த ஒருத்தர் வருவார். அவர் மீளவும் ரொபினின் கூட்டத்தை ஒன்றிணைப்பார்.

80 களின் வெளியான தொலைக்காட்சி ரொபின்

திரைப்பட விமர்சனம் என்று ஆரம்பித்து தொலைக்காட்சித் தொடர் விமர்சனம் அல்லவா செய்கின்றேன். 😉


நகர் வலம் செல்லும் லேடி மரியன் & ரொபின்
நகர் வலம் செல்லும் லேடி மரியன் & ரொபின்

இங்கனம் ரொபின் கூட்டின் தோற்றம் வரலாறு பற்றிப் பலவிதமான கருத்துக்கள் கதைகள் உலாவுகின்றன. சிலர் ரொபின் கூட் என்று ஒரு நபர் இருந்ததே இல்லை என்கின்றார்கள் ஆனால் நிச்சயமாக இருந்தார் என்று இன்னுமொரு கூட்டம் அடித்துச் சொல்கின்றது.

எது எவ்வாறாயினும் இந்த திரைப்படம் ரொபின் கூட்டின் வரலாறு பற்றிப் புதுக் கதை கூறுகின்றது. பேசாமல் இந்த திரைப்படத்திற்கு Origin of Robin Hood என்றோ Rise of Robin Hood என்றோ வைத்திருக்கலாம். பலரும் ரொபின் கூட் துரோகியாக அக்சன் பண்ணுவார் என்று எதிர்பார்க்கும் போது ரொபின் எப்படித் தோன்றினார் என்று மட்டுமே இங்கே காட்டப்படுகின்றது. இதனால் தான் என்னவோ பல இரசிக உள்ளங்களுக்கும் இந்த திரைப்படம் பிடிக்கவில்லை.

இரண்டாம் சிலுவை யுத்தம் நடத்த புனித பூமி சென்று திரும்பும் வழியில் நடக்கும் யுத்தம் ஒன்றில் இங்கிலாந்தின் மிகப் பெரிய மன்னன் சிங்க மனசுக் காரன் ரிச்சார்ட் (Richard the Lion Heart) பலியாகி விடுகின்றான். ரிச்சாட்டின் படையில் வில்வித்தையில் தேர்ந்த போர் வீரனாகப் பணியாற்றுகின்றான் ரொபின்.

அரசனின் மரணத்தின் பின்னர் நடக்கும் சில நிகழ்வுகளினால் அரசனின் முடி மற்றும் லொக்ஸ்லி பிரபுவின் மகனின் உடைவாள் என்பன ரொபின் கைகளில் மாட்டி விடுகின்றது. இதை மீள உரியவர்களிடம் ஒப்படைக்கத் திட சங்கர்ப்பம் பூண்டு புறப்படும் ரொபின் இங்கிலாந்தின் வரலாற்றையே மாற்றி அமைக்கப்போகும் யுத்தத்தில் நேரடியாகப் பங்கு பெறும் நிலைக்குத் தள்ளப்படுகின்றான். இங்கிலாந்தின் துரோகி கொட்பிரேயையும் எதிர்க்கும் நிலைக்குத் தள்ளப்படுகின்றான்.

இறுதி யுத்தத்தில் ரொபின்
இறுதி யுத்தத்தில் ரொபின்

கதையை முழுமையாகச் சொல்லாமல் சொதப்பலா சொல்லியிருக்கன் அப்போதுதான் நீங்கள் திரையிலோ டிவிடியிலோ பார்க்கும் போது அருமையாக இருக்கும்.

இந்த திரைப்படம் மேல் பெரும் ஆர்வர் மேலிட இன்னுமொரு காரணமும் இருந்தது. கிளாடியேட்டர் திரைப்படத்தை இயக்கி பெரும் பாராட்டுக்களைக் குவித்த அதே இயக்குனர் அதே நாயகன் றசல் குரோவை வைத்து இயக்கிய திரைப்படம். ஆதலினால் திரைப்படம் பற்றிக் கடும் எதிர் பார்ப்பு மக்களிடம். கிளாடியேட்டர் திரைப்படத்தை இயக்கிய ரிட்லியின் பிரமாண்டத்தை இங்கேயும் காணலாம் குறிப்பாக பிரஞ்சுப் படைகளை ஆங்கிலப் படைகள் எதிர்கொள்ளும் காட்சி.

அமெரிக்க திரைப்பட வரிசையில் கிடு கிடு என கீழே இறங்கி விட்டாலும் பிரித்தானியாவில் தர வரிசையில் மேலே சில காலம் நின்றது. அவர்கள் ஊர் லெஜண்ட் பற்றிய கதை என்பதால் என்னவோ அவர்கள் பிடித்து நிறுத்திவிட்டார்கள்.

தானைத் தலைவன் ரசல் குரோவிற்கு இப்போது வயது 45ஆம். இந்த வயதில் இது தேவை தானா என்று கேட்கின்றார்களாம். அப்படியானால் 65 வயதில் அவருக்கு ஐஸ்ஸூ தேவையா?? ஹி..ஹி.. 🙂 ரொபின் பாத்திரத்தில் இது வரை நடித்தவர்களில் ரசல் குரோவிற்குத்தான் வயது கூடவாம்.

இதே வேளை பட்மான், டேர்மினேட்டர் போன்ற திரைப்படங்களில் நடித்த கிரிஸ்டியன் பேலையும் ரொபின் கூட் பாத்திரத்தில் நடிக்க வைக்க முயன்றார்கள் என்று கூறப்படுகின்றது. அம்மா மகமாயி எங்கள காப்பாத்திட்டே… நன்றி. பேல் கிட்ட டர்மினேட்டரிலயே அறுபட்டது போதும். 🙂

என்னைப் பொறுத்தவரையில் அருமையான திரைப்படம். இரசிக உள்ளங்கள் இரசிக்கலாம்.

MY RATING: 75/100
IMDB RATING: 70/100

12 thoughts on “Robin Hood (2010) விமர்சனம்”

 1. உங்கள் பார்வையும் நன்றாக இருக்கிறது.. நிறைய படங்களின் விமர்சனங்களை எழுதுங்கள்…

 2. நண்பரே,

  அந்த தொலைகாட்சி தொடரிற்கு அடியேனும் ரசிகனே. மாய மந்திரங்கள் கலந்திருக்கும். இப்படத்தை என்னால் ரசிக்க முடிந்தது. நன்றாகவெ இருந்தது. முடிவுதான் கொஞ்சம் ஏமாற்றம் தந்தது. நல்ல விமர்சனம் நண்பரே.

 3. மாயூ,
  இந்த படம் சுமார்தான். ஆனால் கெவின் காஸ்ட்னர் நடித்த ராபின் படம் பற்றி சொல்ல மறந்தது ஏனோ? அது ஒரு சூப்பர் படம் ஆகும். அதில் வரும் அந்த கிளைமாக்ஸ் பாடல் என்னுடைய பதின்ம வயது முணு-முணு பாடலாகும்.

 4. @krpsenthil
  நன்றி நண்பரே. தொடர்ந்தும் எழுதுகின்றோம்.

  @க.காதலன்
  இலங்கையில் 90 களின் ஆரம்ப பகுதியில் இருந்த யாவரும் இந்த தொடரின் அடிமைகளே. வருகைக்கு நன்றி

  @கிங்கு
  கெவின் காஸ்ட்னர் நடித்த படத்தை அடியேன் பார்த்ததே இல்லை. இணையத்தில் தேடி பதிவிறக்கிப் பார்க்கின்றேன். இளமையில் பாடினீர் சரி.. யாரை நினைத்துப் பாடினீர்?? ஹி..ஹி.. வைச்சமில்ல ஆப்பு

  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி விஷ்வா.

 5. நண்பரே,

  //கெவின் காஸ்ட்னர் நடித்த படத்தை அடியேன் பார்த்ததே இல்லை// என்ன கொடுமையான மேட்டர் இது? அந்த படத்தில் தான் நான் முதன்முறையாக மார்கன் ப்ப்ரிமன் நடிப்பை கண்டு அசந்தது. படத்த்தின் வசங்கள் மிகவும் பிரபலம்.

  //இளமையில் பாடினீர் சரி.. யாரை நினைத்துப் பாடினீர்?? ஹி..ஹி.. வைச்சமில்ல ஆப்பு// இது போன்ற பதில் சொல்ல முடியாத கேள்விகளை சமாளிக்கவே நாங்கள் ஒரு பதிலை வைத்து உள்ளோம்: நல்ல கேள்வி.

 6. @கிங்கு
  ஆமாம் கொடுமைதான் 🙁 சொல்லுவதைப் பார்த்தால் நிச்சயம் பார்த்துவிட வேண்டிய பட்டியலில் அடங்குகின்றது.

  ஆகா… நல்ல பதில்.

 7. ராபின் ஹூட் பணக்காரர்களிடம் திருடி ஏழைகளுக்கு தருவார். இவ்வளவுதான் தெரியும், பார்க்கலாம். இந்த படத்தையும். நன்றி!

 8. சி.பி. செந்தில்குமார்
  மிக்க நன்றி. தொடர்ந்தும் எழுதுகின்றோம்.

  @எஸ்.கே
  நன்றி வரவிற்கும் மறுமொழிக்கும்.

Leave a Reply