பாகம் 1 : Node.js தமிழில்

நோட்ஜெஎஸ் இன்று பல மென்பெருள் வல்லுனர்கள் மத்தியிலும் அடிக்கடி உச்சரிக்கப்ப்படும் ஒரு மந்திரச்சொல். நோட் ஜேஸ் றையல் டால் (Ryan Dhal) எனபவரினால் எழுதப்பட்டது. இது கூகிளினால் எழுதப்பட்ட வி8 ஜாவாஸ்கிரிப்ட் இயந்திரத்தினால் பின்ணனியில் இருந்து இயக்கப்படுகின்றது.

logo

நோட்ஜேஸ் என்றால் என்ன?

நோட்ஜேஎஸ் ஒரு வழங்கி சார் தொழில்நுட்பம் (Server side technology). ஆனால் இதில் வியப்புத்தரும் விடையம் என்னவென்றால் ஜாவாஸ்கிரிப்ட் கொண்டு வழங்கிசார் மென்பொருள் தயாரிப்பில் ஈடுபடக்கூடியதாக இருக்கின்றமையே.

பொதுவாக ஜாவாஸ்கிரிப்ட் இணைய உலாவி (Internet Browser) சார்ந்த ஒரு பயனர் கணனியில் இயங்கும் ஒரு மொழியாகும். இதைப் பயன்படுத்தி வழங்கிசார் சேவைகளை எழுத முடிவது நோட்ஜேஸ்இன் ஒரு பலமாகும்.

ஜாவாஸ்கிரிப்ட் மொழியானது ஜாவா, சீசார்ப் (C#) போன்ற மொழிகளைப்போல கற்றுக்கொள்ள அத்தனை கடினமானது கிடையாது. இலவகுவாக உங்கள் மென்பொருள் அல்லது கைபேசி மொன்பொருளுக்குத் தேவையான வழங்கி சேவைகளை (Web Services) நீங்களே எழுதிக்கொள்ளலாம்.

NodeJS ஐ நிறுவுதல்

NodeJS முன்பு வின்டோசுக்கான ஆதரவை வழங்கவில்லை. லினக்ஸ் கணனிகளை கல கலவென்று கலக்கிக்கொண்டு வேலைசெய்தது. வின்டோஸ் பயனர்கள் NodeJS ஐ இயக்குவதானால் சுற்றி மூக்கைத் தொடும் செயலாகவே இருந்தது. பலர் லினக்ஸ் வேர்ச்சுவர் மெசினை இயக்கி அதில் லினக்சை ஓட்டுவர்.

இப்போது NodeJS இன் புதிய பதிப்புகள் வின்டோசுக்கான ஆதரவைத் தருகின்றமை வின்டோஸ் பயனர்களுக்கு சந்தோசமான செய்தியாகும்.

நிறுவல் படிகள்

 1. http://nodejs.org/ எனும் தளத்திற்கு செல்க
 2. தளத்தில் இருந்து Node.js இற்கான நிறுவியைப் பதிவிறக்கி உங்கள் கணனியில் நிறுவுக.
 3. Command Promt ஐத் திறந்து node என தட்டச்சி Enter விசையை அமுக்கவும்
 4. அனைத்தும் சரியாக நிறவப்பட்டிருந்தால் உங்கள் கணனியில் பினவரும் திரை கிடைக்கும்.

node command promt

அனைத்தும் சரிதானே?? சரி அடுத்த்தாக முதலாவது செயலியை எழுதிவிடலாமா?

முதலாவது உதாரணம்

உங்கள் கணனியில் விரும்பிய ஒரு இடத்தில் ஒரு கோப்பை (Folder) உருவாக்கிக்கொள்ளுங்கள். உங்கள் கோப்பு உள்ள இடத்திற்கு Command Promt இல் இடம்பெயர்ந்து கொள்ளுங்கள்.

உதாரணமாக D Drive இல் “TamilNode” எனும் கோப்பை உருவாக்கியுள்ளேன் என வைத்துக்கொள்வோம். Command Prompt இல் அந்த கோப்பிற்கு நகர்ந்தால் கீழ் உள்ளவாறு தெரியும்.

2 Tamil Node

இனி செயலியை எழுதத்தொடங்கலாம். உங்கள் விருப்ப Text Editor ஐத் திறந்து நாங்கள் முன்பே உருவாக்கிய கோப்புறை TamilNode இல் app.js எனுப் கோப்பை உருவாக்கிக்கொள்ளலாம்.

app.js கோப்பின் உள்ளடக்கம் பின்வருமாற அமையட்டும்.

// http எனும் module இங்கு பாவிக்கப்படுகின்றது.
// Node.js இது போல பல உள்ளமைந்த மொடியூல்களுடன் வருகின்றது
var http = require('http');
// வழங்கி உருவாக்கம்
http.createServer(function (req, res) {
 // வழங்கி பதில் குறியெண் (Server responce code)
 res.writeHead(200, {'Content-Type': 'text/plain'});
 // பதிலில் வழங்கி அனுப்பும் செய்தி
 res.end('வணக்கம் உலகம்');
}).listen(1337); // 1337 என்ற Port இல் வழங்கி கவனித்துக்கொண்டு இருக்கும்
console.log('Server started');

இப்போது எங்கள் Command Prompt இல் node app.js எனும் கட்டளையை வழங்குக.

4. Server started

பின்னர் உங்கள் உலாவியைத் திறந்து அதில் http://localhost:1337/ எனும் முகவரிக்குச் செல்லவும்.

அனைத்தும் சரியாகச் செயற்பட்டால் பின்வரும் திரையைக் காணலாம்.

3. Server running

குறிப்பு : தமிழ் எழுத்து ஜிலேபி போலத் தெரிந்தால் உலாவியின் Encoding ஐ UTF-8 க்கு கைமுறையாக (Manual) மாற்றவும்.

வாழ்த்துக்கள் Node.js மூலம் முதலாவது செயலியை நீங்கள் உருவாக்கி விட்டீர்கள். அடுத்து வரும் பாகங்களில் மேலும் Nodejs பற்றி அறிந்து கொள்ளலாம்.

13 thoughts on “பாகம் 1 : Node.js தமிழில்”

 1. I appreciate your idea to write this article in Tamil. It’s a good move. But, I feel you should talk about Async, Non blocking programming practices available in Node.js which are the highlight points. Also, it’s better if you use a real time example such as building a small application from scratch and in each step introduce a new thing about Node.js.

 2. நல்ல பதிவு நன்றி…

  முன்பு எழுதியது போல் WordPress தொடர்பான பதிவுகளை எழுதமாட்டீர்களா ?

 3. @வடுவூர் குமார்
  நீண்ட நாட்களின் பின்னர் வந்திருக்கின்றீர்கள். பின்னூட்டத்திற்கு நன்றி

  @pragashonlinek
  Sure I”ll focus on it too. I’m actually planning on my second segment on callback functions. At the moment I have no plans to develop along a small app along the way. Lets see things might change. 🙂 Thanks for the feedback, I’m open for criticism, and do point out if I make any mistakes here.

  @மாயா
  வேர்ட்பிரசில் அவ்வளவாக நாட்டம் இப்போது இல்லை. அதனால் அன்ரொயிட், C# Web Services, jQuery Mobile, jQuery என்று தாவியாச்சு 😉 பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி.

 4. மிக னன்ரு.
  command prompt = கட்டலய்ச் சுட்டி
  encoding = குரியீட்டாக்கம் (குரியாக்கம்)
  server response code = வலங்கி துலங்கல் குரியீடு
  (responce ? in program line 6 = Server responce code)

 5. முதல் வரி முற்றிலும் உண்மையான வரி. எந்தவொரு புதிய தொழில்நுட்பமும் தமிழில் அறிந்து கொள்ள வசதியிருப்பது சிறப்பு. பொங்கல் நல்வாழ்த்துகள்.

 6. புதிதாக ஒன்றை கற்கும்போது ஆங்கிலத்தில் கற்பதைவிட தமிழில் கற்பது எவ்வளவோ இலகுவாக உள்ளது. உங்களது சேவையை தொடர்ந்து செய்யுங்கள், நன்றி

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.