IE 8 வேண்டாம் Firefox beta 3 போதும்

இன்று கலைஞர் தொலைக்காட்சியில் மண் திரைப்படம் பதிவை இடும் போது ஒரு விடையத்தைக் கவனித்தேன். அதாவது Firefox தமிழ் முகவரிகளை அழகாகக் காட்டுகின்றது. கீழே இணைக்கப்பட்ட படங்களைப் பாருங்கள்.

IE 8
null

Firefox beta 3 null

விக்கீப்பீடியாப் பக்கங்களையும் சென்று பார்த்தேன் அழகாக காட்டுகின்றார். அச்சா குட்டி!

இப்போ மைக்ரோசாப்ட் அண்ணாச்சி என்ன சொல்கிறாராம்!!! 😎

Firefox 3  Beta 3 பதிவிறக்குக

16 thoughts on “IE 8 வேண்டாம் Firefox beta 3 போதும்”

 1. அது எப்படி உங்களுக்கு மட்டும் தெரிகிறது??
  இந்த பதிவை பார்த்து விட்டு நானும் இந்த பக்கத்தை பீட்டாவில் திறந்து பார்த்தால் அப்படி தெரியவில்லையே!! 😉

 2. @CVR
  அதெப்படி??? நான் பாவிப்பது Firefox 3 beta 3!!! நீங்க பாவிப்பது பீட்டா 2 இல்லீயே? மற்றவர்கள் பார்த்து சொல்லட்டும்.

 3. மயூ, பீட்டா 2லும் தெரிந்தது..மிக அருமையான வசதி இது. konquerorலும் இது போல் தெரிகிறது.

 4. Firefox 3 beta 3 யில் மட்டுமேதான் அப்படித் தெரிகிறது. நானும் எதோ வேர்ட்பிரஸ் புதிய பதிப்பில் தான் ஏதோ மாற்றம் வந்து விட்டது என்று நினைத்தேன். (சில நாட்களாக நானும் பயர்பாக்ஸ் 3.3 தான் உபயோகிக்கிறேன்.)

 5. தீ நரி பீட்டா 3 தரவிறக்க சுட்டி கொடுங்கள் மயூ! நான் வெர்சன் 2 தான் உபயோகிக்கிறேன். 🙂

 6. @பொன்வண்டு
  அப்படி இல்லையே பொன்வண்டு.. இப்ப கூட யாகூ மெயில் பார்த்துக்கொண்டுதான் இருக்கின்றேன்.!!! 💡

 7. Percent Escape மற்றும் Percent-encoding என்ற பெயர்களில் குறிப்பிடப்படும் URL க்கான ஒரு format ஆனதில் சிக்கல் எழுத்துக்களின் ஒருங்குறி குறியேற்றங்களுக்கான hexadecimal குறிகள் ஒவ்வென்றுக்கும் அடுத்து % (percent) இருக்கும்.

  பயர்பாக்ஸ் வெளியீடுகளில் பீட்டா 2 விலிருந்தே Percent-encoding அல்லாமல் சிக்கல் எழுத்துருக்கள் வாசிக்கக்கூடிய இயல்பு நிலையில் காணப்படத் தொடங்கின. அதன் முன்னர் வந்த பயர்பாக்ஸ் 2 முதல் 3-alpha 4 வரையான உலாவிகளை உபயோகிப்பின் Locationbar2 என்ற நீட்சி (https://addons.mozilla.org/en-US/firefox/addon/4014) நிறுவினால் சிக்கல் எழுத்துருக்கள் உள்ள URL க்கள் வாசிக்கக் கூடியவாறே தெரியும்.

  லினக்ஸ் தளங்களில் Qt அடிப்படையிலான Konqueror உலாவி இரு வருடங்கள் முன்னிருந்தே URL வாசிக்கக்கூடியதாக அமைக்கப்பட்டு வந்தன என ஞாபகத்தில் உள்ளது.

  Percent-encodings களைத்தான் காட்டும் IE மற்றும் வேறு அப்படிப்பட்ட உலாவிகள் பாவிப்போர் ஓர் URL இல் உள்ள அத்தகைய Percent-encodings என்னவென கண்டறியத் தேவையிருப்பின் Ishida Unicode Code Converter (ver 6) ( http://people.w3.org/rishida/scripts/uniview/conversion.php) என்ற வலைச் சேவையைப் பயன்படுத்தலாம். அப்பக்கத்தில் உள்ள “Percent encoding for URLs” என்ற பெட்டகத்தினுள் URL யையிட்டு அதிலுள்ள “Convert” என்பதை அமுக்கியதும் அதன் மேலுள்ள HTML/XML பெட்டகத்தினுள் வாசிக்க முடியும். எனது உதாரணம் பார்க்க: http://i25.tinypic.com/4twyg9.jpg

  கா. சேது

 8. பயன்படுத்தும் உலாவி தழல்நரி என்றாலும், பயன்படுத்தும் இயங்குதளம் முக்கியம். நான் தழல்நரி சோதனை வெளியீடு 2 மற்றும் 3 இரண்டையும் பயன்படுத்திய பொழுது உணர்ந்தது இது.. உபுண்டு லினுக்ஸ் இயங்குதளத்தின் அடுத்த வெளியீடான ஹார்டி ஹெரோன்’இன் சோதனை வெளியீட்டில் தெரிந்த அளவுக்கு முந்தைய வெளியீடான கட்சீ கிப்பன்’இல் எழுத்துருக்கள் வழங்கப்படவில்லை. விண்டோஸ் இயங்குதளங்களில் விண்டோஸ் 2000 மற்றும் அதற்கு பின்னானவற்றில் தமிழ் மற்றும் இண்டிக் எழுத்துரு மீள்தருகை (rendering) நன்றாக இருந்தது. அதற்கு இப்பொழுது வெளியடப்படும் தழல்நரி மற்றும் அண்மைய குனு/லினுக்ஸ் இயங்குதளங்கள் சரியான பதில் அளித்துவருகின்றன.. 🙂

 9. @கா.சேது, முரளி
  இருவருக்கும் நன்றி. அருமையான தகவலைப் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றிகள்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.