தகவல் உரிமை மற்றும் சீனாவை நேரடியாக சீண்டிய கூகிள்

பேச்சுரிமை, தகவல் உரிமை போன்ற விடயங்களைக் கேட்டால் சீனாவிற்கு ஆகாது. எதையும் முளையிலேயே கிள்ளி எறியும் பழக்கம் உடையது சீனா. உலகம் எங்கும் சீனாவிற்கு எதிராக மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் இருந்தாலும் சீனா எது பற்றியும் கவலைப் படுவதில்லை.

கடந்த டிசம்பர் நடுப்பகுதியில் நடந்த ஒரு நிகழ்வு சீனா மற்றும் கூகிள் இடையில் கடும் கசப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் மனித உரிமைக்கு மீறலுக்கு எதிராகச் செயற்படும் நபர்களின் ஜிமெயில் கணக்குகளைக் கூறிவைத்து சீனாவில் இருந்து இணையத் தாக்குதல் நடைபெற்றுள்ளது. இதன் மூலம் மிகவும் சீற்றம் அடைந்துள்ள கூகிள் நிறுவனம் தன் சீன அலுவலகத்தை மூட வேண்டி வந்தாலும் அதற்கு தயாராக இருப்பதாக அறிவித்துள்ளது.

2006இல் சீனாவில் தனது செயற்பாடுகளை ஆரம்பித்த கூகிள் 10 மில்லியன் பயனர்களில் இருந்து 340 மில்லியன் பயனர்களை தன்பால் மிக குறுகிய காலத்தில் ஈர்த்துக்கொண்டது. சீன அரசுடன் செய்து கொண்ட ஒப்பந்தப்படி சில தகவல்களை தேடல் முடிவுகளில் காட்டாமல் கூகிள் கவனித்துக் கொண்டது.

ஆயினும் டிசம்பர் நடுப் பகுதியில் நடந்த நிகழ்வுகள் நிலைமையைத் தலைகீழாக மாற்றியுள்ளன. இது பற்றி கூகிள் கூறுகையில்

we have evidence to suggest that a primary goal of the attackers was accessing the Gmail accounts of Chinese human rights activists. Based on our investigation to date we believe their attack did not achieve that objective. Only two Gmail accounts appear to have been accessed, and that activity was limited to account information (such as the date the account was created) and subject line, rather than the content of emails themselves.

கூகிளின் பாதுகாப்பு வளையத்தைத் தாண்டி சீன ஹக்கர்களால் ஜிமெயில் கணக்குகளை அணுக முடியாமல் போய்விட்டாலும் இதே மாதிரியான தாக்குதல் ஏனைய நிறுவனங்கள் மீதும் நடத்தப்பட்டதாக கூகிள் கூறுகின்றது.

this attack was not just on Google. As part of our investigation we have discovered that at least twenty other large companies from a wide range of businesses–including the Internet, finance, technology, media and chemical sectors–have been similarly targeted.

பெரும் தர்மசங்கடத்தை தோற்றுவித்த இந்த நிகழ்வில் சீன அரசின் நேரடிப் பங்கு இருக்கின்றதா என்று கேட்டதற்கு பதில் ஏதும் சொல்ல கூகிள் மறுத்துவிட்டது.

குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கும் பழக்கம் உடைய அமெரிக்காவும் தன் பாட்டிற்கு இந்த நிகழ்வு பெரும் சந்தேகங்களை ஏற்படுத்துவதுடன் இது பற்றி சீன அரசிடம் விளக்கம் கோரியுள்ளதாகவும் தெரிவித்தார் ஹல்லாரி கிளிண்டன்.

இந்த நிகழ்வுகளின் பின்னர் கூகிள் இனிமேல் சீனா கூகிள் நிறுவனம் தணிக்கைகள் எவற்றிலும் ஈடுபடாது எனவும் இது சம்பந்தமாக சீன அரசுடன் பேச்சுவார்த்தை நடைபெறும் என்றும் அறிவித்துள்ளது. பேச்சு வார்தை முடிவில் தமது அலுவலகத்தையும் மூடிக்கொண்டு புறபட நேரிட்டாலும் அதற்கும் தயாராக இருப்பதான தோறணையில் கூகிள் கருத்து வெளியிட்டுள்ளது.

“If, as seems likely, the government refuses to allow it to operate an uncensored service, then Google will pull out.

தகவல் சுதந்திரம் எனபது ஒவ்வொரு மனிதனிற்கும் இருக்கவேண்டியது. யாரும் சொல்பவற்றை மட்டுமே நாங்கள் நம்பவேண்டும் என்று நினைப்பது முட்டாள்தனம். சீன அரசும் ஒரு மக்கள் அரசு இப்படியான செயல்களில் இறங்கி மக்கள் எதிர்ப்பைச் சம்பாதிக்குமா?

இவ்விடயம் சம்பந்தமாக எழுதிய புதிய தகவல்களைக் கொண்ட பின்வரும் பதிவுகளையும் காணவும்.

 1. சீனாவை கூகுளுடன் இணைந்து இந்தியாவும் சீண்டியது
 2. தொடரும் சீனா – கூகிள் பனி யுத்தம்

P.S: சீன அரசு பேசாமல் Cowboy மதுவை நாடியிருந்தால் பிஷ்ஷிங் முறையில் ஹக் செய்து கொடுத்திருப்பார். 😉

6 thoughts on “தகவல் உரிமை மற்றும் சீனாவை நேரடியாக சீண்டிய கூகிள்”

 1. புதிய தகவல் எனக்கு….

  என்ன தான் நடக்குது பார்ப்பமே…. 🙄

  கெளபோயட மது அண்ணா இலகுவில எடுத்துக் குடுத்திருப்பார் என? 😉

  தகவலுக்கு/பகிர்வுக்கு நன்றி… 🙂

 2. என்ன கொடுமை இருக்கிறம் இது?

  ஐ ஆம் பாவம்… நான் அப்படியல்லப்பா..

 3. @கனக கோபி
  ஆமாம் பொறுத்து பார்ப்போம் என்ன நடக்குது எண்டு

  @மது
  என்னப்பா நீர்.. புல்லட்டின் ஜிமெயிலை சூறையாடின சூரப்புலி இப்படிப் பின்வாங்கலாமா?? 😈

 4. //
  சீன அரசும் ஒரு மக்கள் அரசு இப்படியான செயல்களில் இறங்கி மக்கள் எதிர்ப்பைச் சம்பாதிக்குமா?
  //

  சீனா ஒரு மக்கள் நடத்தும் அரசு அல்ல. ஒரு சிலர் நடத்தும் கம்யூனிச அரசு. கம்யூனிஸமும் சென்சார்ஷிப்பும் சையாமீஸ் ரெட்டையர்கள்.

 5. என்னப்பா நீர்.. புல்லட்டின் ஜிமெயிலை சூறையாடின சூரப்புலி இப்படிப் பின்வாங்கலாமா?? //

  இவரா ஆள்?

  நல்ல பதிவு.. சிறிலங்காவை விட மொசமா ஒரு இடம் இருக்குது எண்ட கெள்விப்டேக்க ஒரு திருப்தியா இருக்கு.. வாழ்க சீனா .. ( இது மூனா தானா சீனா இல்லை .. நாடு சீனா )

 6. @க.கா.அ.சங்கம்
  யப்பா என்ன பெயர் இது? 🙄

  நீங்கள் சொல்வது சரி. கம்யூனிசம் ரசியாவில் சிதைந்தது போல் சீனாவில் சிதையுமோ?

  @புல்லட்
  ஆமா இருக்கு. இதைவிட மோசமான நாடுகளும் ஆபிரிக்காவில் இருக்கு.. சோ கவலை வேண்டாம். 😉

  சீனா தானா பற்றிப் பதிவிடனும் என்று நினைச்சன் ஞாபகம் ஊட்டியமைக்கு நன்றி 😉

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.