Corpse Bride (2005) விமர்சனம்

திருமணத்திற்கு நிச்சயம் செய்தாகிவிட்டது. ஆனால் இப்போது தேவாலயத்தில் அருட் தந்தை முன்னால் ஒத்திகை பார்க்கவேண்டும். அங்கேதான் நம்ம ஹீரோ வீக்!. ஒத்திகையில் தாறுமாறாக சொதப்பும் இந்த ஹீரோ வெட்டவெளியில் பனி மூட்டத்தில் மூடுபனியில் ஒரு மரக்கொப்பில் மோதிரத்தைப் போட்டு தன் திருமண ஒத்திகையை நடத்துகின்றார். இங்கேதான் காரியம் கெட்டு குட்டிச்சுவரானது. மரக்கொப்பென்று நினைத்து அவர் மோதிரத்தைப் போட்டது ஒரு இறந்த பெண்ணின் எலும்புக்கூட்டு விரலுக்கு. ப்பூ…! இப்ப செத்த சவம் எழும்பி வந்துட்டுதுங்கோ!


Johnny Depp கதையின் நாயகனுக்கு குரல் கொடுத்திருந்த காரணத்தால் இந்த திரைப்படத்தை நான் பார்த்தேன். ஆனாலும் இந்த அனிமேசன் திரைப்படம் என்னை ஏமாற்றவில்லை. அருமையான கதையமைப்பு, வசனங்கள், காட்சியமைப்புகள் என்று அற்புதமான திரைக்காவியம்.

முன்பு ஒரு ஆணால் ஏமாற்றப்பட்டு இறந்துபோன ஒரு மணப்பெண் தற்செயலாக நம் ஹீரோவிற்கு மனைவியாகிவிட நம் ஹீரோவை இழுத்துக்கொண்டு இந்த பேய்ப் பெண் தம் பேய் உலகத்திற்கு சென்றுவிடுகின்றாள். அங்கே நம் மனித நாயகனுடன் புதிய வாழ்க்கை ஒன்றை ஆரம்பிக்க நினைக்கின்றாள்.

இதேவேளை தன் அருமை காதலியைப் பிரிந்து வாடும் காதலன் மீள அவளுடன் சேர முயற்சிக்கின்றான். இவர்கள் சேர்ந்தார்களா இல்லை நம் ஹீரோ ஜீரோவாகி இறுதிவிரை பேய் பெண்ணுடன் வாழ்க்கை நடத்தினாரா என்பதை DVD இல் பார்த்து அறிந்து கொள்ளுங்கள்.


திரைப்படத்தில் மற்றுமொரு சிறப்பான அம்சம் இசை. ஓபேரா ரக இசையை இரசிப்பவர்கள் நிச்சயமாக இந்த திரைப்படத்துடன் காதல் கொள்வர். அதைவிட நாயகியின் உணர்வுகள் அவர் பியானோ வாசிப்பதன் மூலம் காட்டுவார்கள். ஆஹா.. அருமை. வேட்டைக் காரன்கள் எல்லாரும் எப்ப இப்படி சிந்திப்பார்களோ???

இது ஒரு நாடோடிக் கதையை மையமாக கொண்டு எழுதிய திரைப்படமாம். நீங்களும் அந்த நாடோடிக் கதையை வாசித்துப் பார்க்கலாம்.


அருமையான அனிமேசன் திரைப்படம் ஒன்றைப் பார்க்க வேண்டும் என்று நினைத்தால் இந்த திரைப்படத்தைக் கட்டாயம் பாருங்கள். குடும்பத்துடன் பார்த்து இரசிக்க கூடிய திரைப்படம்.

RATING : 85/100

புல்லட்டின் அறிவுறுத்தலுக்கு ஏற்ப இப் பதிவில் இருந்து ரேட்டிங் முறமையும் அறிமுகப் படுத்தப்படுகின்றது.

8 thoughts on “Corpse Bride (2005) விமர்சனம்”

 1. பகிர்விற்கு மிக்க நன்றி மயூரேசன்.

  (இப்பல்லாம் உங்க சினிமாப் பற்றிய பதிவுகள் ரொம்ப குறைஞ்சுடுச்சா!?)

 2. @சென்ஷி
  நேரம் இல்லை. பல வலைப்பதிவுகளைத் திறந்து பலதிலும் எழுத வேண்டிய தேவை. இயன்றவரை எதிர்காலத்தில் எழுதுகின்றோம் 😉

  நன்றி

 3. உங்கள் விமர்சனம் படத்தை தேடிப் பார்க்க தூண்டிவிட்டது.
  மேலும் இது போன்ற விமர்சனங்களை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். நன்றி.

 4. சொல்ல மறந்து விட்டேன். பியானோ இசை அற்புதம். வேறு ஒரு உலகத்திற்கு இழுத்துப் போகிறது. அருமை.

 5. நன்றி ஓவியா. தொடர்ந்து எழுதுகின்றோம். நான் முன்பே கூறியபடி இசை இந்த திரைப்படத்தில் ஒரு விஷேஷமான அம்சம்.

 6. நன்றி தகவலுக்கு.
  நேரம் கிடைச்சா இந்த படத்தையும் பார்த்துடுறேன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.