Category Archives: ஹரி போட்டர்

ஹரி போட்டர் அன் த டெத்லி ஹலோவ்ஸ் – பாகம் 1

ஹரி போட்டர் என்றாலே நான் கொஞ்சம் உசாரடைந்து விடுவது வழமை. புத்தகங்களை தலைகீழாக நின்று வாசித்த காலங்களை நினைத்துப் பார்க்கின்றேன். ஏழாம் புத்தகம் வெளியானபோது புத்தகம் வாங்க கையில் பணமில்லாமல் ஈபுக்கில் படித்து அப்புறம் விலை குறைந்த பின்னர் அதை வாங்கி என்னுடைய புத்தக கிடங்கில் சேமித்துக் கொண்டதை நினைத்துப் பார்க்கின்றேன்.

ஹரி போட்டர் திரைப்படங்களை எடுத்து நோக்கினால் முதலாம் பாகம் சூப்பர், இரண்டாம் பாகம் சூப்பர், மூன்றாம் பாகம் சூப்பர், நான்காம் பாகம் பரவாயில்லை, ஐந்தாப் பாகம் மொக்கை, ஆறாம் பாகம் செம மொக்கை இப்போது ஏழாம் பாகத்தின் முதல் பாதி செம மொக்கை மற்றும் அறுவை.

ஏழாம் பாகத்தை இரண்டு பாகமாக உடைத்து திரைப்படம் ஆக்குகின்றார்கள் என்று கேள்விப்பட்ட போது மிகவும் சந்தோஷமடைந்தேன். காரணம் புத்தகத்தில் வருவதை அப்படியே திரைப்படத்தில் காட்ட முடியாது. பல சம்பவங்களை கத்தரித்து விடுவார்கள். இவ்வாறு இரண்டு பாகமாக திரைப்படம் ஆக்கினால் பல சம்பவங்களை நிச்சயமாக உள்ளடக்கலாம்.

<hr>

பெரும் எதிர்பார்ப்புடன் கடந்த சனிக்கிழமை ஹைதராபாத் அண்ணா தயவில் திரைப்படத்திற்குப் போனோம். ஏற்கனவே டெக்கான் குரோனிகல்ஸில் விமர்சனம் படித்த அண்ணா இந்த திரைப்படம் சிறுவர்களுக்குப் பெருத்தமில்லாத பல காட்சிகளைக் கொண்டிருப்பதாகக் கூறினார். நாங்கதான் பெரியவங்க ஆச்சே, பார்த்துட்டாப் போச்சு என்று புறப்பட்டாகிவிட்டது.

திரைப்படம் PG 13 என்று வகைப்படுத்தப்பட்டு இருந்தாலும் பல சிறுசுகள் திரையரங்கு எங்கும் ஓடித் திரிந்தன. கொரிக்க பண்டங்களை வாங்கி உள்ளே நுழைந்தோம். கடைசில் திரைப்படமும் ஆரம்பமாகியது.

புத்தகம் கிடைத்தவுடன் ஆரம்பிக்கும் பரபரப்புடன் திரைப்படத்தை பார்த்தால் ஒரே அறுவை. ரொம்பவும் நொந்து போயிட்டோம். புத்தகத்தில் நடக்கும் மயிர்கூச்செறியும் மந்திரச் சண்டையெல்லாம் உப்புச் சப்பில்லாமல் இருந்தது.

நமக்குப் பிடித்த பாத்திரம் மடியும் போது மிகவும் மனம் உடைந்துவிடுவது வழமை அல்லவா. புத்தகம் வாசிக்குப் போது நான் அழுது இருக்கின்றேன். நம்பினால் நம்புங்கள் திரைப்படத்தில் அப்படி ஒரு உணர்வுமே இல்லை. எல்லாம் வெறுமையாக இருக்கின்றது.

முன்னைய பாகங்களில் கலக்கிய ஹரி இப்பாகத்தில் ரொம்பவும் சுமாராகவே நடிக்கின்றார். ரொன் அதைவிடக் கேவலம். ஹார்மானி.. அப்பா.. அவர் இப்போது ஹர்மானியாக நடிப்பதை விட ஒரு நாயகியாக நடிப்பதற்குத் தயாராகி விட்டதாகத் தெரிகின்றது. ரொம்பவுமே ஒல்லியாக அசிங்கமாக இருக்கின்றார். எனக் கென்றால் பிடிக்கவில்லை. ஒரு காலத்தில் மூர்க்கத்தனமாக எம்மா வாட்சன் பின்னால் எப்படிச் சுத்தினேன் என்று ஓவியனிடமும், அன்பு இரசிகனிடமும் கேட்டால் சொல்வார்கள். அந்தப் பெட்டை இப்ப இல்லை.

திரைப்படத்தில் வரும் காட்சிகள் நிச்சயமாகச் சிறுவர்களுக்கு ஏற்ற திரைப்படம் அல்ல என்று சொல்லுகின்றது. குறிப்பாக சில வன்முறை நிறைந்த காட்சிகள். அதைவிட அரை நிர்வாணக் காட்சிகளும் வந்து சேர்ந்துவிடுகின்றது.

காட்சி அமைப்புகள், ஒளியமைப்புகள் பிரமாதம். அவற்றைக் குறைசொல்வதற்கில்லை. நிலவறை போன்ற காட்சிகள் அபாரமாக உள்ளது. ஆனால் யாருக்கு தங்கத் தட்டில் வைத்த தவளைக் கறி பிடிக்கும்???

எதற்காகவோ தெரியவில்லை ஹரி போட்டர் என்ற பெயரிற்காக இருக்கலாம், உலகம் எங்கும் திரைப்படம் நன்றாகவே ஓடுகின்றது. முதல் வாரத்தில் உலகம் எங்கும் $US205 million பணத்தை வாரியுள்ளது திரைப்படம். ஜமாக்சில் பார்த்த முதல் மொக்கைத் திரைப்படம் இதுதான்.

இப்படியான ஒரு அருமையான புத்தகத்தை இப்படியா சீரழிக்க வேண்டும். நீங்கள் ஹரி புத்தக இரசிகரானால் தயவு செய்து இந்த திரைப்படத்தைப் பார்க்க வேண்டாம்.

விரிவான விமர்சனம் எழுதவும் ஏதோ பிடிக்கவில்லை.

ஹரிபாட்டர் 6ம் பாகம் இறுதியில் வெளியாகின்றது


கடந்த வருடமே வெளியாகியிருக்க வேண்டிய திரைப்படம் (Harry Potter and the Half-Blood Prince) கடைசியாக இம்மாதம் வெளிவர உள்ளது. இன்று நடிகர்கள் பிருத்தானியாவில் சிவப்பு கம்பள நாடகத்தை நடத்தி முடித்தனர். கொட்டும் மழையிலும் பல்லாயிரக்கணக்கான இரசிகர்கள் திரண்டு தம் சந்தோஷத்தை தெரிவித்தனர்.

திரைப்பட வரிசையில் ஆறாம் திரைப்படமான இந்த திரைப்படம் ஜே.கே.ராவ்லிங்கின் புத்தகத்தைத் தழுவி திரைப்படம் ஆக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பாவில் ஜூலை 15ம் திகதியும் வட அமெரிக்கா மற்றும் ஜப்பானில் இரண்டு நாட்கள் கழித்தும் இந்த திரைப்படம் வெளியிடப்படவுள்ளது.

அனைவராலும் பேசப்படும் ரான் வீஸ்லி கதாபாத்திரத்தில் நடிக்கும் Rupert Grint பன்றிக் காய்ச்சலுக்கு ஆளானபோதும் அதில் இருந்து மீண்டுவந்து இரசிகர்களை மகிழ்வித்தார். “Swine flu is nothing really, I found out. It’s just like normal flu, it’s just that you are in bed for a while,”என்று பீலா கூட விட்டுள்ளார்.

வழமைபோல இலங்கையில் இந்த திரைப்படம் வெளியாகும் என்று நான் நினைக்கவேயில்லை. திருட்டு டிவிடிதான் தஞ்சம் 😉

22 : ஹரி போட்டர் ரெயிலர் (Harry Potter Trailor)

டம்பிள் டோரின் சிறப்புப் படையணி!

ஹரி போட்டர் அன்ட் த ஆடர் ஆப் பீனிக்ஸ் ஜூலை வர இருப்பது தெரிந்ததே! அந்த ரெயிலர் இன்று ஒரு தளத்தில் பார்த்தேன்..

காட்சியில் ஹரி செள வை முத்தமிடும் காட்சியையும் சேர்த்திருக்கார்கள். டப் என்று வந்து மறைகின்றது.

கதை வாசித்தவர்களுக்கு காட்சிகள் என்ன என்ன வென்று புரியும் என்னைமாதிரி இதுவரை முக்கால்வாசி வாசித்தவர்களுக்கே ரெயிலரில் முக்காவாசி புரிகின்றது போய்த்தான் பாருங்களேன்.!

http://www.harrypotterorderofthephoenix.com/

17 : ஹரிபோட்டர் சாக வேண்டுமாம்

ஹரி போட்டர் திரைப்படத்தில் ஹரியின் வேடத்தில் நடித்த Daniel Radcliffe தான் ஹரி போட்டர் கடைசிப் புத்தகத்திற்காக ஆவலுடன் காத்திருப்பதாகவும் தன் பாத்திரம் இந்தப் பாகத்துடன் கொல்லப்படும் என்று நம்புவதாகவும் கூறியுள்ளார்.

இதே வேளை ராவ்லிங் Harry Potter and the Deathly Hallows என்ற புத்தகத்தை எழுதி முடித்துள்ளதும் இது ஜூலை 21 வெளியாக உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

ராட்கிளிஃப் இது வரை வெளிவந்த நான்கு ஹரி போட்டர் படங்களில் நடித்துள்ளதுடன் அடுத்து வரும் 3 படங்களில் நடிக்கவும் ஒப்பந்தமாகியுள்ளார். இவர் மேலும் கருத்து தெரிவிக்கையில் இறுதிப் பாகத்தில் ஹரி இறப்பதாகவே ராவ்லிங் எழுதி இருப்பார்.. அத்துடன் ஒரு சோகமான காட்சியுடன் நான் இறப்பதாக திரைப்படம் அமையும் என்று நம்புகின்றேன்” என்று கூறினார்.

பார்ப்போம் கடைசிப் புத்தகத்தில் ஹரி இறக்கின்றாரா என்று!!!!