Category Archives: வேர்ட்பிரஸ்

வேர்ட்பிரசிற்கான மொபைல் தீம்

ப்ளாக்கர் பயன்படுத்தும் நண்பர்களுக்கு தங்கள் தளத்தை நகர்பேசி அல்லது செல்பேசியில் பார்க்க அதற்கான வார்ப்புருவை முடக்கிவிடமுடியும். இதே வசதி இப்போது தனி வழங்கிகளில் வேர்பிரஸ் தளத்தை நிறுவிப் பயன்படுத்தும் நண்பர்களுக்கும் கிடைக்கின்றது.

செல்பேசியில்

ஜெட்பக் எனும் சொருகியைப்பற்றி நீங்கள் கேள்விப்ப்படிருப்பீர்கள். அனைத்து வேர்ட்பிரஸ் பயனர்களும் கட்டாயம் பாவிக்க வேண்டிய சொருகியிது. தளத்தின் புள்ளிவிபரங்கள், மறுமொழிப்பெட்டியில் பேஸ்புக், ட்விட்டர் போன்ற முறைகளில் புகுபதிகைசெய்ய உதவல் மேலும் சமூக வலைத்தளங்களில் உங்கள் பக்கத்தைப் பகிர உதவல் எனப் பல்வேறு வசதிகளை இந்த செருகி வழங்குகின்றது. இந்த வரிசையில் இப்போது செல்பேசிகளுக்கான வார்ப்புருவை இந்த சொருகி வழங்குகின்றது.

உங்கள் தளத்தில் ஜெட்பக்கை முதலில் நிறுவவும் அல்லது பிந்தைய பதிப்பிற்கு தரமுயர்த்தவும். பின்னர் ஜெட்பாக் மெனுவிற்குச் சென்று அங்கே மொபைல் தீம் என்பதை உயிரூட்டவும்.

இப்போது உங்கள் தளத்தை கைத்தொலைபேசியில் சென்று பார்த்தால் அழகாகத் தெரிய ஆரம்பிக்கும்.

வேர்ட்பிரஸ் 2.7.1

வேர்ட்பிரஸ் 2.7.1 வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம் 68 டிக்கட்டுகள் மூலம் எழுப்பப்பட்ட பிரைச்சனைகளை தீர்த்துள்ளார்கள்.

தரம் உயர்த்த நீங்கள் வேர்ட்பிரஸ்.org அல்லது Tools -> Upgrade என்ற முறையில் தானியக்கமாகவும் தரமுயர்த்தலாம்.

எல்லாரும் கொஞ்சம் பொறுங்க கேள்விப்பட்டதும் ரவி உடனடியாக தரமுயர்த்துவார். அவருக்குப் பிரைச்சனை இல்லாட்டி நாங்களும் தரமுயர்த்தலாம் 😉

வேர்ட்பிரஸ் 2.5.1 வெளியாகிவிட்டது

WordPress 2.5.1 வெளிவந்துள்ளது. இதில் முந்தய பதிப்பில் இருந்த பாதுகாப்புப் பிரைச்சனைகள் நீக்கப்பட்டதுடன், செயற்பாட்டு வினைத்திறனும் அதிகரிக்க வைக்கப்பட்டுள்ளது.

  • Performance improvements for the Dashboard, Write Post, and Edit Comments pages.
  • Better performance for those who have many categories
  • Media Uploader fixes
  • An upgrade to TinyMCE 3.0.7
  • Widget Administration fixes
  • Various usability improvements
  • Layout fixes for IE

WordPress 2.5 இற்றைப்படுத்தினால்…

வழமை போல புதிய வேர்ட்பிரஸ் பதிப்பான 2.5 கிடைத்ததும் அதை இற்றைப்படுத்த முடிவெடுத்தேன். நான் பொதுவாக பன்டாடிஸ்கோ இடைமுகம் மூலம் ஒரு சொடுக்கலில் இற்றைப்படுத்திவிடுவது வழமை.

இம்முறையும் அதைப்போல தமிழ், ஆங்கிலம் இரு வலைப்பதிவுகளையும் இற்றைப்படுத்தினேன். முதலில் ஆங்கிலப் பதிவை இற்றைப்படுத்தினேன். என்னதான் ஆங்கிலப் வலைப்பதிவிற்கு அதிகமானோர் வந்தாலும் தமிழ் வலைப்பதிவு மேல் இருக்கும் அன்பு அதன் மேல் இல்லை. அதனால் சோதனை எல்லாம் ஆங்கிலப் பதிவு மேல்தான்.

ஆங்கிலப் பதிவு இற்றைப்படுத்தப்பட்டதும், தளத்தைச் சென்று பார்த்தேன் அனைத்தும் ஜோராக இருந்தது. உடனே தமிழ் பதிவையும் இற்றைப்படுத்தினேன் அங்குதான் விளைந்தது துன்பம். Continue reading WordPress 2.5 இற்றைப்படுத்தினால்…

வேர்ட்பிரசில் த.ம கருவிப் பட்டை செயல்இழப்பதேன்?

எனது வலைப்பதிவில் ஜோராக வேலைசெய்துகொண்டிருந்த தமி்ழ்மணம் கருவிப்பட்டை, வேர்ட்பிரஸ்பக்கங்களுக்கு அர்த்தமுள்ள முகவரி கொடுத்ததும் செயல் இழந்துவிட்டது. இதற்கு என்ன காரணமாக இருக்கும் என்று நோண்டி நோண்டி பார்த்ததில் எனக்குப் புரிந்த பிழை இதுதான். Continue reading வேர்ட்பிரசில் த.ம கருவிப் பட்டை செயல்இழப்பதேன்?

வேர்ட்பிரசில் அர்த்தமுள்ள முகவரி

வேர்ட்பிரஸ்.காம் பதிவுகளைப் பார்த்தீர்கள் என்றால் உங்கள் பதிவுகளின் முகவரிகள் ஒரு அர்த்தமுள்ள முகவரிகளாக இருக்கும். அதாவது Hello World என்ற தலைப்பில் ஒரு பதிவு இட்டால் உங்கள் முகவரி பின்வருமாறு கிடைக்கும்.

உ+ம்: http://yourname.wordpress.com/Hello-world Continue reading வேர்ட்பிரசில் அர்த்தமுள்ள முகவரி

தமிழ் வேர்ட்பிரஸ் வந்தார்

தமிழ் கூறும் நல்லுலகம் இறுதியாக ஒன்றிணைந்து ஒரு நல்ல நிகழ்வினை நடத்தி முடித்துள்ளது. தமிழில் வேர்ட்பிரஸ் இடைமுகம் வழங்கப்பட்டுவிட்டது.

அங்கங்கே பிழைகள், ஒரு சொல்லுக்கு வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு சொற்கள் பயன்படுத்தப்பட்டமை போன்ற பிரைச்சனைகள் உள்ளன. ஆயினும் எமது கூட்டுமுயற்சியின் வீரியத்தின் முன்னால் இவையனைத்தும் எதுவமேயல்ல.

 அடுத்த பதிப்பில் இந்தக் குறைகளையும் களைய வேண்டும். எத்தனையே தடவை முக்கி முக்கி வேண்டியபோதும் பிளாக்கருக்கு தமிழ் இடைமுகம் வழங்காமல் பிகுபண்ணும் கூகுகிள் இதைப் பார்த்தாவது இடைமுகம் வழங்கட்டும்.

http://ta.wordpress.com என்ற முகவரிக்குச் சென்று தமிழ் வேர்ட்பிரசைக் காணுங்கள்!!!

 இத்திட்டத்தை முன்னின்று நடத்திய அனைவருக்கும் என் நன்றிகள்.

வாழ்க தமிழ்! வாழிய தமிழ் கணனியியல்!!!

தமிழ்மணம் கருவிப்பட்டையும் வேர்ட்பிரசும்

நீங்கள் தனியாக ஒரு முகவரியில் வேர்ட்பிரசை நிறுவிப் பயன்படுத்துபவரானால் ஒவ்வொரு தடவை தீமை மாற்றும் போதும் நீங்கள் அங்கு கருவிப்பட்டைக்காக மாற்றங்களைச் செய்ய வேண்டும். 🙁

இதற்காக ஒரு நீட்சி இருந்தால் எப்படி இருக்கும். அதாவது நீட்சியை நீங்கள் நிறுவிவிடுங்கள் பின்னர் உங்கள் இஷ்டத்திற்கு தீம்களை மாற்றுங்கள். ஒவ்வொரு தடவை தீமை மாற்றும் போதும் நீங்கள் அதற்காக மாற்றங்களை செய்யத் தேவையில்லை. நீட்சியே எல்லா வேலையையும் செய்துவிடும். 🙂

நிசத்தில் இப்படி ஒரு நீட்சியை ஒரு தமிழ் அன்பர் எழுதியுள்ளார். சென்று பெற்றுப் பயனடையுங்கள்.  நான் இப்போ அந்த நீட்சியைத்தான் பயன்படுத்துகின்றேன்…!!! 😉

சொடுக்கிப் பெறுக நீட்சியை 🙂

அன்புடன்,
மயூரேசன். 🙂