Category Archives: வெளிவரஉள்ளவை

அவதார் பாகம் II விரைவில்


உலகம் எங்கும் சக்கைபோடும் அவதார் திரைப்படம் பற்றி நமது வலையுலக நண்பர்கள் பதிவிட்டு பிய்த்து மேய்ந்துவிட்டதால் அந்த முயற்சியில் இறங்க அடியேன் முயற்சிக்கவில்லை. ஆயினும் இன்றுதான் அடியேனுக்கு அவதார் திரையரங்கில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. டிசம்பர் 23ம் திகதியே கொழும்பில் அவதார் வெளியிடப்பட்டு வைக்கப்பட்டாலும் சன நெருக்கடி காரணமாக இன்றுதான் சென்று பார்க்க கிடைத்தது.

ஒரு மணி நேரத்திற்கும் மேலாக காய்க்கும் வெயிலில் நின்றுதான் திரைப்படம் பார்க்கவேண்டியிருந்தது. கொழும்பின் மேட்டுக்குடிகளும் காய்ச்சும் வெயிலிலும் காத்து நின்று திரைப்படம் பார்த்தது வியப்பாக இருந்தது. திடீர் என்று எங்கோ இருந்து முளைத்த சிறிய பொண்ணு ஒன்று “So you all wanna see some freaky aliens..huh?” என்று நீண்டு நெளிந்து வளைந்து சென்ற வரிசையைப் பார்த்து சொல்லிக்கொண்டு சென்றது.

அட சரி அதை விடுங்க மாட்டருக்கு வாங்க. அவதார் படம் வெளியிடப்படும் போது அவதார் 3 பாகங்களை எடுக்குமளவிற்கு தன்னிடம் கதையிருப்பதாக ஜேம்ஸ் கமரோன் தெரிவித்திருந்தார் ஆயினும் அப்போது அந்த திரைப்படம் எப்படி ஓடப்போகின்றது என்பதெல்லாம் தெரிந்திருக்கவில்லை. இன்றய தேதியில் அவதார் திரைப்படம் வசூலை அநியாயத்திற்கு அள்ளிவாரிவிட்டது (சுமார் $1,131,752464).

இந்த வேளையில் ஜேம்ஸ் கமரோன் “Yes, there’ll be another.” என்று நான்கு வார்த்தையில் பல இரசிகர்கள் வயிற்றில் பால் வார்த்துவிட்டார்.

அடுத்த பாகத்தில் கதை என்னவாக இருக்கும் என்று அமெரிக்க தொலைக்காட்சிகளும் வலைத்தளங்களும் யோசிக்கத் தொடங்கியுள்ளன. இதில் சிலர் அடுத்த பாகம் பன்டோராவைவிட்டு அதன் வெளியே நடக்கும் என்று கூறியுள்ளனர். குறிப்பாக பண்டோராவின் சந்திரன்களின் நடைபெறலாம் என்று கூறுகின்றனர்.

சிலர் கருத்து தெரிவிக்கையில், முதலாம் பாகத்தில் மரத்தில் வாழும் நாவி இனத்தவரைத்தான் இந்த திரைப்படத்தில் காட்டுகின்றார்கள். ஆனாலும் இறுதி யுத்தத்தில் பல உள்ளூர் நாவி இனத்தவர்கள் ஒன்றினைகின்றனர். உதாரணமாக குதிரை வீரர்கள், பறவைகளில் பறந்து வரும் இனம் என்று பல இருக்கின்றனர். இவர்களின் உள்ளூர் அரசியல் என்ன போன்றவை பற்றி பாகம் ஒன்றில் குறிப்பிடப்படவில்லை ஆகவே இது பற்றி இரண்டாம் பாகத்தில் மேலும் கூறப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

இதைவிட தோற்று ஓடிய மனித குலமும் RDA வும் மீள பண்டோராவிற்கு வரலாம். அவர்கள் நாவி இனம் மீது தொடுத்த போரின் நோக்கமே அங்கிருக்கும் சில கணிமங்களைத் திருடவே. அதைப் பெற படை பெருக்கிக்கொண்டு மீள மனிதர்கள் வந்து நாவிகளைத் தாக்கலாம்.

எது எப்படியோ இனி ஜேம்ஸ் கமரோன் விட்ட வழியேதான். அவர் என்ன செய்து காட்டப்போகின்றார் என்று பொறுத்திருந்து பார்க்க வேண்டியதுதான்.

I loved the first film and I hope the sequel will be just as good.

ஹரிபாட்டர் 6ம் பாகம் இறுதியில் வெளியாகின்றது


கடந்த வருடமே வெளியாகியிருக்க வேண்டிய திரைப்படம் (Harry Potter and the Half-Blood Prince) கடைசியாக இம்மாதம் வெளிவர உள்ளது. இன்று நடிகர்கள் பிருத்தானியாவில் சிவப்பு கம்பள நாடகத்தை நடத்தி முடித்தனர். கொட்டும் மழையிலும் பல்லாயிரக்கணக்கான இரசிகர்கள் திரண்டு தம் சந்தோஷத்தை தெரிவித்தனர்.

திரைப்பட வரிசையில் ஆறாம் திரைப்படமான இந்த திரைப்படம் ஜே.கே.ராவ்லிங்கின் புத்தகத்தைத் தழுவி திரைப்படம் ஆக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பாவில் ஜூலை 15ம் திகதியும் வட அமெரிக்கா மற்றும் ஜப்பானில் இரண்டு நாட்கள் கழித்தும் இந்த திரைப்படம் வெளியிடப்படவுள்ளது.

அனைவராலும் பேசப்படும் ரான் வீஸ்லி கதாபாத்திரத்தில் நடிக்கும் Rupert Grint பன்றிக் காய்ச்சலுக்கு ஆளானபோதும் அதில் இருந்து மீண்டுவந்து இரசிகர்களை மகிழ்வித்தார். “Swine flu is nothing really, I found out. It’s just like normal flu, it’s just that you are in bed for a while,”என்று பீலா கூட விட்டுள்ளார்.

வழமைபோல இலங்கையில் இந்த திரைப்படம் வெளியாகும் என்று நான் நினைக்கவேயில்லை. திருட்டு டிவிடிதான் தஞ்சம் 😉

Mission: Impossible 4 தயாரிக்கப்பட உள்ளது


டாம் குரூசை உலகம் எங்கும் ஒரு நடிகராக பிரபலப்படுத்திய பெருமை இந்த மிசன் இம்பொசிபிள் தொடர்களுக்கு உண்டு. 2012ம் ஆண்டில் MI4 இந்த திரைப்படம் வெளிவர உள்ளது. மூன்றாம் பாகத்தின் இயக்குனரான J.J. Abrams இந்த திரைப்படத்தையும் இயக்கவுள்ளார்.

ஈதன் ஹன்ட் பாத்திரத்தில் டாம் குரூஸ் நடிக்கவுள்ளார். முதலில் அந்தப் பாத்திரத்தில் பிரட்பிட் நடிப்பதாக கிசு கிசு வெளிவந்தாலும் இப்போதைக்கு டாம் குரூஸ் நடிப்பதாக உள்ளது.

இன்னமும் திரைக்கதை போன்றவையும் தயாரிகப்படாமல் உள்ளமை குறிப்பிடவேண்டும்.

ஹரி போட்டரை காப்பியடித்த ஹரி புட்டர்

பிரபலமான ஹரி போட்டர் திரைப்படத்தைப் பின்பற்றி எடுக்கப்பட்ட பொலிவூட் திரைப்படம் ஹரி புட்டர் சட்டப் பிரைச்சனைகளில் பிடிபட்டுள்ளது.

வேர்ணர் பிரதர்ஸ் இந்த திரைப்படத்தை தடைசெய்யச் சொல்லி நீதி மன்று சென்றது. அதன் பிரகாரம் இந்த திரைப்படம் வெளிவருவதை பின்தள்ளுமாறு நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.
இந்திய சினிமாவில் ஹொலி்வூட் கதைகளைக் காப்பி அடிப்பது இதுதான் முதல் முறையா என்ன???

Quantum of Solace – புதிய 007 திரைப்படம்


யுகேயில் அக்டோபர் 31ம் திகதி இந்த திரைப்படம் வெளியடப்படவுள்ளது. அமெரிக்காவிலும் உலகெங்கும் இதை தொடர்ந்து வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப் படுகின்றது.

திரைப்படத்திற்கான ட்ரெயிலர் உத்தியோக பூர்வமாக வெளியிடப்படமுன்னரே இணையத்தில் யூடியூப் போன்ற தளங்களில் வெளியாகிவிட்டது.

முந்தய பொண்ட் திரைப்படமான கசினோ ரோயலுடன் தொடர்புள்ளதாக இருப்பதுடன், விமானம், கார், விசைப்படகு என பல துரத்தல் காட்சிகளும் திரைப்படத்தில் இருப்பதை ட்ரெயிலர் ஊடாக காணக்கூடியதாக உள்ளது.

புதிய X-Files திரைப்படம் விரைவில்

இரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட எக்ஸ்-ஃபைல்ஸ் திரைப்படம் 25 ஜூலை, 2008 வெளியாக உள்ளது. அண்மையில் அமெரிக்காவில் நடைபெற்ற லெஸ் ஏஞ்சல்ஸ் திரைப்பட விழாவில் இந்த திரைப்படத்தின் சில காட்சிகள் போட்டுக் காட்டப்பட்டன.

அனைவரது விருப்பமான பாத்திரங்களான ஸ்களி, மேல்டர் ஆகிய இருவரும் இருக்கின்றனர். இரசிக உள்ளங்களுக்கு இது ஒரு விருந்தாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

திரைப்பட தயாரிப்பாளர் காட்டர், இந்த திரைப்படம் வெற்றி அளித்தால் இரசிகர்கள் அடுத்த பாகத்தையும் எதிர்பார்க்கலாம் என்று கூறியுள்ளார்.

The Hobbit திரைப்படம் விரைவில்

Description unavailableImage by dolanh via FlickrLord of the Rings கதாசிரியரின் இன்னுமொரு நாவலான The Hobbit விரைவில் திரைப்படமாக வெளிவர உள்ளது. உண்மையில் இந்தக் கதை LOTR இல் வரும் நாயகன் புரோடோவின் உறவினரான பில்போ பாக்கின்சின் வீர விளையாட்டுக்களை உள்ளடக்கியது. இந்தக் கதையிலேயே அவர் கொலமிடம் இருந்து அந்த மந்திர மோதிரத்தை எடுக்கின்றார்.

இந்த திரைப்படத்தில் LOTR இல் கன்டால்ப் ஆக நடித்த பிருத்தானிய நடிகர் McKellen மீண்டும் கன்டால்ப்பாக நடிக்க உள்ளார்.

2009 ல் படப்பிடிப்பு ஆரம்பிக்க உள்ளது. முதல் பாகம் 2010 இலும் இரண்டாம் பாகம் 2011 இலும் முறையே வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

IRON MAN வருகின்றார்

IRON MAN என்கிற இந்த திரைப்படம் வரும் மே மாதம் முதலாம் திகதி உலகம் எங்கும் வெளியாக உள்ளது. இது ஸ்பைடர்மான், பன்டாஸ்டிக் போர், போன்ற திரைப்படங்களைப் போல மார்வல் கொமிக்ஸை தழுவி எடுக்கப் பட்டுள்ளது.

I Am Legend – மாற்று முடிவு (Robert Neville உயிருடன் இருக்கின்றார்!)

I Am legend திரைப்படம் மார்ச் 13 DVD ஆக வந்தடைய உள்ளது. இதில் திரைப்படத்திற்கு புது முடிவு சேர்த்துள்ளார்களாம்!!! நீங்கள் அந்த முடிவைப் பார்க்க விரும்பினால் இந்த யூடியூப் வீடியோவைப் பாருங்கள்

கி.மு 10,000

கி.மு 10000 ம் ஆண்டில் நடப்பது போல ஒரு திரைப்படம் எடுத்து வருகின்றார்கள். இதில் வரும் காட்சிகள் அருமையாக உள்ளது. ரெயிலரைக் காணுங்கள். மார்ச் 7 ம் திகதி உலகத் திரையரங்குகளில் இந்த திரைப்படம் திரையிடப்பட உள்ளது.