ப்ளாக்கர் பயன்படுத்தும் நண்பர்களுக்கு தங்கள் தளத்தை நகர்பேசி அல்லது செல்பேசியில் பார்க்க அதற்கான வார்ப்புருவை முடக்கிவிடமுடியும். இதே வசதி இப்போது தனி வழங்கிகளில் வேர்பிரஸ் தளத்தை நிறுவிப் பயன்படுத்தும் நண்பர்களுக்கும் கிடைக்கின்றது.
செல்பேசியில்
ஜெட்பக் எனும் சொருகியைப்பற்றி நீங்கள் கேள்விப்ப்படிருப்பீர்கள். அனைத்து வேர்ட்பிரஸ் பயனர்களும் கட்டாயம் பாவிக்க வேண்டிய சொருகியிது. தளத்தின் புள்ளிவிபரங்கள், மறுமொழிப்பெட்டியில் பேஸ்புக், ட்விட்டர் போன்ற முறைகளில் புகுபதிகைசெய்ய உதவல் மேலும் சமூக வலைத்தளங்களில் உங்கள் பக்கத்தைப் பகிர உதவல் எனப் பல்வேறு வசதிகளை இந்த செருகி வழங்குகின்றது. இந்த வரிசையில் இப்போது செல்பேசிகளுக்கான வார்ப்புருவை இந்த சொருகி வழங்குகின்றது.
உங்கள் தளத்தில் ஜெட்பக்கை முதலில் நிறுவவும் அல்லது பிந்தைய பதிப்பிற்கு தரமுயர்த்தவும். பின்னர் ஜெட்பாக் மெனுவிற்குச் சென்று அங்கே மொபைல் தீம் என்பதை உயிரூட்டவும்.
இப்போது உங்கள் தளத்தை கைத்தொலைபேசியில் சென்று பார்த்தால் அழகாகத் தெரிய ஆரம்பிக்கும்.
அதிகமாகத் தமிழ் வாசகர்களை இழுக்க வலைப்பதிவுத் திரட்டிகள் ஒரு சிறந்த வழி என்பதை யாம் எல்லாரும் அறிவோம். திரட்டியில் சேர்த்தபின்னர் மொக்கைப் பதிவுகளுக்குக் கூட 100 ஹிட்சுக்கு அதிகமாகச் சம்பாதிக்கலாம்.
இதை நன்கே புரிந்து வைத்திருக்கும் செய்தி தளங்கள் தமிழ் மணத்தை கேவலமாகப் பயன்படுத்த தொடங்கியுள்ளனர். இவர்களை இரண்டு வகையாகப் பிரிக்கலாம்.
1. செய்தியின் ஒரு வரியைப் போட்டு மீதியை தளத்தில் படிக்கச் சொல்பவர்கள். அதாவது அசின் இன்று பிசினாகிவிட்டார். அவரின் மனேஜர் இது பற்றிக் கூறுகையில்.. என்று வாசிக்கும் போது <<மேலும்>> என்று ஒரு இணைப்பு இருக்கும். அதைக் கிளிக்கி மிகுதிச் செய்தியை அவர்களின் தளத்தில் வாசிக்க வேண்டும்.
2. இரண்டாம் இரகம் ரொம்பக் கேவலம். முன்பு கூறியபடி ஒரு செய்தியிருக்கும். மேலும் இணைப்பைக் கிளிக்கினால் ஒரு தளத்தின் முகப்பிற்கு எடுத்துச் செல்லும். அதாவது அந்த தளத்தின் சரியான செய்திக்கு இணைப்புத் தராமல் தளத்தின் ஹோம் பக்கத்திற்கு எங்களை எடுத்துச் செல்லும். தளத்தின் முகப்புப் பக்கதிற்கான வாகர் வரவை அதிகரிக்க ஒரு கேவலமான முயற்சி
தமிழ் மணத்திற்கு இது பற்றி அறிவித்தேன் ஆனாலும் அவர்களிற்கு இதுகளுக்கு நேரம் இல்லை போலும். இவ்வகையான தளங்களை இனம் கண்டி நீக்கி வாசகர்களின் வாசகப் பயனத்தை இலகுவாக்க தமிழ் மணம் நடவடிக்கை எடுக்க கோருகின்றேன்.
பல காலமாகவே பலராலும் விரும்ப பட்டாலும் காலத்தின் சில சில நெருக்கடிகளால் பலரும் இந்த முயற்சியை ஆரம்பிப்பதிலும் நடத்துவதிலும் பின்னடித்தனர். இப்போது இதற்கான கால நேரங்கள் கனிந்துவிட்டதால் இலங்கையில் நான்கு சிங்கங்கள் (அப்படித்தான் வந்தியத்தேவன் சொன்னார்) களத்தில் இறக்கி இந்த அருமையான நிகழ்வை நடத்திக் காட்டியுள்ளனர்.
இந்த நிகழ்விற்கு இன்னுமொரு சிறப்பு என்னவென்றால் இன்றய தினத்தில்தான் பிளாக்கர் தளத்தின் 10ம் பிறந்தநாள். அடப்பாவமே அதுக்கும் கேக்கு வெட்டி கொண்டாடிட்டானுகள்.
பெரும்பாலம் பலரும் தங்களது அனுபவங்களையும், கருத்துக்களையும் கலந்துகொண்டனர். பலரும் பிளாக்கரையே பயன்படுத்துவது அவர்கள் பேசும்போது தெரிந்த்து. இது என்போன்ற வேர்ட்பிரஸ் வலைப்பதிவருக்கு வருத்தமளிப்பதாக இருந்தாலும் பிளாக்கர்.காம் போல வேர்ட்பிரஸ்.காம் பல இலவச சேவைகளை தரவில்லை என்பது கவலையான உண்மையே!!! ஒரே தீர்வு தனித்தளத்தில் வேர்ட்பிரஸ் நிறுவுவதுதான்.
நிகழ்வு தொடங்கியதில் இருந்து முடியும் வரை புல்லட்டு வைத்த மொக்கைகள் தாங்காது. தொடங்கியதில் இருந்து வடை சாப்பிட வந்தவர்கள் முதல் உண்டியல் பெட்டி திறந்தமை வரை ஒரே சரவெடி. 😉
நிகழ்வில் நேரம் போதாமல் போனது கண்கூடு. நான்கூட சில கருத்துக்களைச் சொல்ல விழைந்தாலும் நேரம் இடம் கொடுக்கவில்லை. என்றாலும் அனைத்து சக வலைப்பதிவுலக உள்ளங்களை சந்தித்தமை பெரும் சந்தோஷமே.
இதைவிட யாழ்தேவி திரட்டி பற்றியும் காரசாரமாக வலைப்பதிவர்கள் முட்டி மோதிக்கொண்டார்கள். யாழ்தேவி என்ற பதம் ஒரு பிரதேசத்தை வட்டமிட்டுக் காட்டுவதாக பல வலைப்பதிவர்கள் முறைப்பட்டுக் கொண்டார்கள்.
இதைவிட வலைப்பதிவு எழுதி பொலீஸ் தன்னைப் பிடித்தது எனும் பகீர் தகவலையும் ஒரு நண்பர் வெளியிட்டு அடிவயிற்றில் புளியைக் கரைத்தார்.
இன்னுமொரு விடையம் ஆண்டு 6 கற்கும் ஒரு இளைய பதிவர் வந்து கலக்கினார். தந்தையைப் பின்பற்றி சிறுவர் வலைப்பதிவை ஆரம்பித்தாலும் இப்போது தந்தைக்கு தொழில்நுட்ப ரீதியாக உதவிசெய்யுமளவிற்கு உயர்ந்துவிட்டாராம். பெயர் ஞாபகம் இல்லை. இருந்தாலும் அவருக்கு என் வாழ்த்துக்கள்.
முக்கியமான இன்னுமொரு விடையம் ஊடக கல்லூரி மாணவர்கள் சிலர் வந்திருந்தனர். அனைவரும் வேர்ட்பிரஸ்.காம் தளத்தை வைத்திருந்தமை மனதிற்கு நிம்மதி. இணையத்தில் கட்டுரைகளை சுட்டுவிட்டு நன்றி இணையம் என்று மட்டும் போடும் பத்திரிகைகளையும் சாடி பேசிய மயூரன் இப்படி செய்யவேண்டாம் என்று ஊடக கல்லூரி மாணவர்களை கேட்டுக்கொண்டார்.
அடுத்த முறை வலைப்பதிவர் சந்திப்பு நடக்கும் போது லோஷன் சொன்னமாதிரி குளு குளு அறையில் ஒரு தொழில்நுட்பம் சார்ந்த ஒரு சந்திப்பாக இருக்கட்டும். இதன் மூலம் வலைப்பதிய புதிதாக வரும் பயனர்களுக்கு பெரும் உதவியாக இருக்கும். இதற்கான என் பங்களிப்புகள் அடுத்த முறையிருக்கும்.
பி.கு: கொட்டாஞ்சேனையில் இருந்து வெள்ளவத்தை தமிழ் சங்கம் மண்டபத்திற்கு இலவசமாக காரில் கூட்டிச்சென்ற சேது அவர்களுக்கு மிக்க நன்றி.
தமிழிஷ் இப்போது விரைவாகப் பிரபலமாகிவருகின்றது. பலரும் இதனை விரும்பி பாவிக்கத்தொடங்கியிருக்கின்றனர். இதற்கு முக்கிய காரணம் வலைப்பதிவுகள் தவிர பல்வேறு தளங்களைப் பகிர்ந்து கொள்ளக்கூடியதாக இருப்பதே.
இந்த தமிழிஷ் (Tamilish)ஐ எப்படி வலைப்பதிவுகளில் இணைப்பது என்பது பற்றி அவர்கள் தமது தளத்தில் விளக்கியுள்ளார்கள். ஆயினும் இந்த முறையில் சொந்த வழங்கியில் வலைப்பதிவு வைத்திருப்பவர்களின் பதிவுகள் வேலைசெய்யாது.
அதேபோல பழைய வார்ப்புருக்களைப் பயன்படுத்துபவர்களுக்கும் இந்த முறை பயன்படாது. எனது ஹாலிவூட் பார்வை தளத்தை எனது டொமைனில் ஏற்றிய பிறகு தமிழிஷ் வாக்கு எண்ணிக்கையைக் காட்டவில்லை. பின்னர் அவர்கள் தந்த கோடை பின்வருமாறு மாற்றியதும் ஜோராக வேலைசெய்யத்தொடங்கியது.
WordPress 2.5.1 வெளிவந்துள்ளது. இதில் முந்தய பதிப்பில் இருந்த பாதுகாப்புப் பிரைச்சனைகள் நீக்கப்பட்டதுடன், செயற்பாட்டு வினைத்திறனும் அதிகரிக்க வைக்கப்பட்டுள்ளது.
Performance improvements for the Dashboard, Write Post, and Edit Comments pages.
Better performance for those who have many categories
வழமை போல புதிய வேர்ட்பிரஸ் பதிப்பான 2.5 கிடைத்ததும் அதை இற்றைப்படுத்த முடிவெடுத்தேன். நான் பொதுவாக பன்டாடிஸ்கோ இடைமுகம் மூலம் ஒரு சொடுக்கலில் இற்றைப்படுத்திவிடுவது வழமை.
இம்முறையும் அதைப்போல தமிழ், ஆங்கிலம் இரு வலைப்பதிவுகளையும் இற்றைப்படுத்தினேன். முதலில் ஆங்கிலப் பதிவை இற்றைப்படுத்தினேன். என்னதான் ஆங்கிலப் வலைப்பதிவிற்கு அதிகமானோர் வந்தாலும் தமிழ் வலைப்பதிவு மேல் இருக்கும் அன்பு அதன் மேல் இல்லை. அதனால் சோதனை எல்லாம் ஆங்கிலப் பதிவு மேல்தான்.
ஆங்கிலப் பதிவு இற்றைப்படுத்தப்பட்டதும், தளத்தைச் சென்று பார்த்தேன் அனைத்தும் ஜோராக இருந்தது. உடனே தமிழ் பதிவையும் இற்றைப்படுத்தினேன் அங்குதான் விளைந்தது துன்பம். Continue reading WordPress 2.5 இற்றைப்படுத்தினால்…→
எனது வலைப்பதிவில் ஜோராக வேலைசெய்துகொண்டிருந்த தமி்ழ்மணம் கருவிப்பட்டை, வேர்ட்பிரஸ்பக்கங்களுக்கு அர்த்தமுள்ள முகவரி கொடுத்ததும் செயல் இழந்துவிட்டது. இதற்கு என்ன காரணமாக இருக்கும் என்று நோண்டி நோண்டி பார்த்ததில் எனக்குப் புரிந்த பிழை இதுதான். Continue reading வேர்ட்பிரசில் த.ம கருவிப் பட்டை செயல்இழப்பதேன்?→
வேர்ட்பிரஸ்.காம் பதிவுகளைப் பார்த்தீர்கள் என்றால் உங்கள் பதிவுகளின் முகவரிகள் ஒரு அர்த்தமுள்ள முகவரிகளாக இருக்கும். அதாவது Hello World என்ற தலைப்பில் ஒரு பதிவு இட்டால் உங்கள் முகவரி பின்வருமாறு கிடைக்கும்.