Category Archives: கவிதை

எனக்கு வெட்கம்

நாலரை மணி வகுப்பு
மூன்று மணிக்கே வகுப்பில்
காதலுக்காக
ஒரு மணி நேரம்
செலவழித்தால் என்ன?

நாலரை மணி
நத்தையாய் வருகின்றது
நாலரை வருடம்
கடந்துவிட்டதாய் உணர்வு
என்னவள் வரவில்லை

காத்திருக்கின்றேன்
காதலியே
காலமெல்லாம் காத்திருபராம்
காதலர்கள்
ஒரு மணிநேரம் காக்க
மாட்டேனே என்னவளே!

நாலரை மணிக்கு
நாதஸ்வர இசைபோல
நகர்ந்து வருகின்றாள்

வைத்த கண்ணை
எடுக்க முடியவி்ல்லை
என்னதான்
நவ நாகரீகப் பெண்கள்
புரட்சி படைத்தாலும்
இவளின்
பாவாடைத் தாவணியின்
பரம இரசிகன் நான்

ஒரு பார்வை வீசி
அப்பால் நகர்கின்றாள்
அது
அன்பா? பரிவா?
இல்லை
நக்கலா?
நிச்சயம் புரியவில்லை

உயிரியல் கற்பிற்கின்றார்
ஆசிரியர்
உயிர்தாண்டி வலிக்கின்றது
அவள் நினைவு

கவனமெல்லாம் அவள்மேல்
பாடம் பப்படம் ஆகின்றது
கனவில் படம்
அவள் என்னருகில்
என் கை அவள் தோள் மேல்
கை கோர்த்து நடக்கின்றோம்
பாபிலோன் தோட்டத்தில்
என் மார்பில் முகம் பதித்து
பல கதை பேசுகின்றாள்
விழிகளில் ஏக்கத்துடன்
நோக்குகி்ன்றாள்

கண்விழித்து எழுகின்றேன்
ஒலிக்கின்றது
ஆசிரியரின் திட்டல்
அதனாலும் ஒரு நன்மை
இப்போது அவள் பார்வை
நூறு வீதம் என்மேல்

ம்ஹூம்
துணிவில்லை
நேருக்கு நேர்
அவள் கண்ணைப் பார்க்க

ஓரக் கண்ணால்
ஓரமாய்ப் பார்க்கின்றேன்
அவளும்
ஒய்யாரமாய் உட்கார்ந்து
ஓரமாய்ப் பார்க்கின்றாள்

எப்போதும் பார்க்கின்றாள்
பேச மட்டும்
மறுக்கின்றாள்
ஒரு புன்னகையாவது
உதிரக் கூடாதா??
ஒரு நேர்ப் பார்வை
வீசக் கூடாதா??
நான் என்ன படுபாதகனா?
இல்லை கொலைகாரனா?

ஆசை அவளுக்குமோ?
மனம் படபடக்கின்றது
கைகள் வியர்க்கின்றது
இதயம் சில்லிடுகின்றது
இரத்தம் பாய்கின்றது
புதுவீச்சுடன்

இன்று எப்படியும்
பேசுவது
உள்மனது வீரியம் கொள்கின்றது
அருகில் நகர்கின்றேன்
தொண்டை குழியல்
அனைத்தும் வற்றிவிடுகின்றது

கண்ணாடி முன்னாடி நின்றபோது
பேசியவை
கண்ணடித்து விட்டு மறந்துவிட்டன
மீண்டும் அவ்விடம் விட்டு நகர்கின்றேன்

ஆனால் அவளிடம்
சென்று பேச மட்டும்
என்னால் முடியாது
மனதில் இருப்பதை
அவளிடம் சொல்ல முடியாது
ஏனெனில்
எனக்கு வெட்கம்
ஆனால் நண்பர்கள் பார்வையில்
எனக்கு ஈகோ!

சுமார் இரண்டு வருடங்களுக்கும் முன்பு எழுதியது. கவிதை போல இருந்தாலும் கவிதைதான் என்று உறுதி தரவேண்டியது உங்கள் பொறுப்பு. இப்போதெல்லாம் இப்படியான கவிதைகள் வருவதில்லை. வயதாகிவிட்டது போலும்.

இதுவே போதும்

வளி மண்டலத்தில் உந்தன் வாசம்

நாசி வழியே சுவாசிக்கின்றேன்

உள்ளே சென்ற சுவாசம்

வெளியே வர மறுக்கின்றது

மூச்சடைத்து செத்தாலும் பரவாயில்லை

உன் வாசமே இத்தனை அழகென்றால்

நீ எப்படி இருப்பாய்

 

 

மீண்டும் உன் வாசம்

காற்று வழியே வருகின்றது

வந்த திசை நோக்கிப் பறக்கின்றேன்

தூரத்தில் தெரிகின்றாய்

மஞ்சளாய், அழகாய் கலகலவென்று

 

உன் அருகில் வந்துவிட்டேன்

பேச நினைத்தவை அனைத்தும்

தொண்டைக் குழியில் வற்றுகின்றது

எங்கிருந்தோ வந்து

தாழ்வு மனப்பாண்மை ஒட்டுகின்றது

வாய் திறந்து

ஒரு வார்த்தைகூடப் பேச முடியவில்லை.

 

நலமா?

இறுதியாகக் கேட்கிறேன்

சிறிய விழிகளை உயர்த்தி என்ன வென்கிறாள்

ஓ… உனக்குத் தமிழ் தெரியாதல்லவா

ஹா.. பரவாயில்லை

விழிகள் பேச மொழி எதற்கு

 

இந்தச் சின்ன விழியாலே

இத்தனை கதை பேசுகின்றாய்

கஞ்சன் கடவுள்

பானுப்பிரியாவின் கண்ணைத் தரவில்லை

 

கண்கள் பேசிக்கொள்கின்றன

வார்த்தைகள் மூடிக்கொள்கின்றன

பேச வேண்டியவை அனைத்தையும்

கண்களே பேசுகின்றன

அப்பப்போ சில சிரிப்புகள்

அங்காடிகள், பீச்சுகள், பஸ்கள்

எல்லாம் கடந்து செல்கின்றன

நடப்பவை எல்லாவற்றையும்

நம்பவே முடியவில்லை

 

எல்லாவற்றிற்கும் முடிவுண்டு

இன்னமும் இரண்டு மாதங்கள்

அதன் பின்பு உன்னை

நான் காணப்போவதில்லை

பரவாயில்லை இந்த சில நிமிடங்களே

எனக்குப் போதும்

 

 

காத்திருக்கின்றேன் காதலனே

null

உறுமிக்கொண்டு நகரும் கரு மேகம்
கதறிக்கொண்டு நகரும் புகையிரதம்
அமைதியாக அலரும் என் இதயம்

கடைசி முத்தம் நீ தந்து
நகர்ந்து விட்டாய் புகையிரதத்துள்
காத்திருக்கின்றேன் காதலனே

சொட்டும் ஒவ்வொரு மழைத்துளியும்
உன் பெயரைச் சொல்கின்றன
அவை பூமியில் பட்டுத் தெறிக்கயில்
நம் முத்தச் சத்தம் கேட்கிறதே
உனக்கும் அது கேட்குமா?
காத்திருக்கின்றேன் காதலனே

காதலனே நீ காவியனாகிவிடுவாயா
இல்லை காதலியைக் காண வருவாயா?
காத்திருக்கின்றேன்.. காத்திருப்பேன்
காதலியாக காலம் கடந்தாலும்
காத்திருக்கின்றேன் காதலனே

தமிழ்மன்றம்.காம் இல் ஒரு கவிதைப் போட்டிக்காக எழுதியது… ஏதோ கவிதை என்ற பெயரில் நான் இந்தப் படத்தைப பார்த்து கிறுக்கிய வரிகளுக்கு உங்கள் பின்னூட்டங்களை இட்டு எதிர்காலத்தில் உண்மையான கவிஞராக உதவி புரியுங்கோ!!!

72 : பெரு மூச்சு விடுகின்றேன்!!

பேச மனம் துடிக்கும்…
கடைக் கண் பார்வைக்கு
மனம் ஏங்கும்!

ஏளனச் சிரிப்பைக் கூட
எனக்காக உதிர்த்தாளோ என
எண்ணத் தோன்றும்!!

நண்பியுடன் பேசத் திரும்பினால்
என்னைப் பார்க்கத்
திரும்பியதாகத் தோன்றும்

கடந்து செல்கையில்
மல்லிகைப மலர்கள்
கடந்து சென்றதாகத் தோன்றும்

உன் நீல விழி பார்க்கையில்
நீல வானம் உனக்கு
மண்டியிட்டதாகத் தோன்றும்

அவள் சுட்டு விரல்
உயர்த்துவதைப் பார்க்கையில்
சுக்கிரன் கூட
பணிந்துவிட்டதாகத் தோன்றும்

என்னவளின் வேல் விழிகளில்
கோடி மின்னல் காண்பேன்
அந்த மின்னல் வந்து
இதயத்தைத் தாக்குவதையும்
வெண் மேகம் போல இரசிப்பேன்

அவள் நடந்து வரும் பாணியில்
அன்னத்தைக் காண்பேன்,

நீ யாருடனோ சிரித்து பேசும் போது
நானும் என்னுள்ளே சிரித்துக்கொள்வேன்

பேசும் போது புரியாது
ஆனால் சரி சரி என்று தலையாட்டுவேன்

ஒரு ஓரப் பார்வைக்காக
நாள் முழுதும் அலைவேன்
நாள் முடிந்த பி்ன்பும்
உன் நினைவில் கனவில் அலைவேன்

கண்ணாடி முன் நின்று
உன் கூடப் பல கதை பேசுவேன்

நீ நடந்த இடத்தில்
உன் காலடித் தடம் தேடுவேன்
முடியாவிட்டால் காற்றலையில்
முகர்ந்து திரிவேன்
அப்படியாவது உன் வாசனையை
நுகர முடியுமல்லவா?

ஒரு நாளாவது உன் அருகில்
இருக்க சந்தர்ப்பம் தேடுவேன்
சந்தர்ப்பம் வாய்த்ததும்
சங்கடத்துடன் விலகிச்செல்வேன்

நான் என்ன பைத்தியமா?
இல்லை என்னை புரியாத
நீ பைத்தியமா?
நான்தான் முட்டாள்
என்றும் உண்மை
என்று ஒன்று இருக்கின்றது

நான் ஒரு சூழ்நிலைக் கைதி
விதியின் கிறுக்கல் கையெழுத்து
பாலைவனத்தில் பறக்கும் ஒற்றைப் பறவை
நடுக்கடலின் மணல் திட்டு

அனைத்தும் நிசத்தில் நிழல்
என்பது உறைத்ததும்
கரும் புகையாய்
காற்று வெளியில் கலந்துவிடுவேன்

மறுமுறை உன்னைக் கண்டதும்
அனைத்தும் மறந்து
நினைவு இழந்து
மீண்டும் கனவு காண்பேன்
நான் அடிப்படையில்
சாதாரண இளைஞன்தானே?

நண்பன் தனேஷின் கவிதைகள்

“செருப்பில்லாமல் நடக்கும் போதுதான்
முள் குத்துகிறது,
நீ இல்லாமல் நடக்கும் போதுதான்
வாழ்க்கையே குத்துகிறது முள்ளாய்!”
“மரணப்பொழுதில்,
என் கண்கள் வாங்கிக்கொண்டு போகும்
கடைசிப் பரிசு
உன் முகமாக இருக்கட்டுமே!”

“நான் : போ! போ! போறதுக்கு முன்னாடி எனக்கு ஒரு காரியம் பண்ணிட்டுப்போ
நீ : என்ன?
நான் : அதான் …….. காரியம்”
உன் கால் தடம் எனும் கவிதைக்கு
இசை அமைத்துக்கொண்டு போகிறது
உன் கொலுசு !!!
நீ வாழ்வதால்தான்
இது பூவுலகம்
இல்லையென்றால்
வெறும் உலகம் !!!

நெடு நேரமாக என் பாடப்புத்தகத்தின்
ஒரே பக்கத்தில் நிற்கின்றேன்
அதில் உன் புகைப்படத்தை
வைத்திருப்பதால் !!!!

எனது பல்கலைக்கழக நண்பனின் காதல் கவிதை இங்கே அரங்கேறுகின்றது….