Category Archives: தமிழ் சினிமா

இந்தியா சுற்றிய தமிழ்ப் பாடல்

இசைஞாணி இளையராஜா 80களில் கொடுத்த ஒரு மெகா ஹிட் பாடல்தான் சங்கத்தில் பாடாத கவிதை. 84இல் வெளியான இந்தப்பாடல் கிட்டத்தட்ட என்னுடைய வயதை உடையது. காலத்தைத் தாண்டி இன்றும் கேட்போர் மனதைக்கொள்ளை கொள்ளும் இந்தப் பாடல் இந்தியா முழுவதும் பல மொழிகளில் பாடப்பட்டதை அறிவீர்களா.

முதலில் தமிழ்ப் பாடல் சங்கத்தில் பாடாத கவிதை
படம்: ஆட்டோ ராஜா

பாலு மகேந்திரா இசையால் மயங்கி இதை தனது மலையாளப்படத்தில் பாவிக்கின்றார். தும்பி வா என்று இன்றுவரை பலர் இந்தப்பாடலை சிலாகித்துக் கேட்பதைக் கேட்கலாம். அண்மையில் நீ தான் என் பொன்வசந்தம் திரைப்படப் பாடல்கள் வெளியீட்டு விழாவிலும் பாலுமகேந்திராவிடம் ராஜாவின் பிடித்த பாடல் ஒன்றைச் சொல்லுமாறு கேட்டதும் இந்தப்பாடலைத்தான் சொன்னார். அழகான மொழி மலையாளத்தில் அருமையாக ஒலிக்கின்றது ஜானகி அவர்களின் குரல். தமிழிற்கு முன்னர் மலையாளத்தில் இந்தப்பாடல் வெளியானது.

தெலுங்கில் ஆகாசம் ஏனாடிடோ என்று ஒலிக்கின்றது. சுந்தரத் தெலுங்கில் ஜானகி அவர்கள் குரலை ராஜா குழைத்து எடுத்தால் எப்படி இருக்கும்? நீங்களே கேட்டுப் பாருங்கள்.

மொழிமாற்றும் விளையாட்டுக்கள் அக்காலத்திலே தொடங்கிவிட்டது. அப்படியே அந்தப் படத்தை தமிழில் மொழிமாற்றும் போது மொழி மாறிய பாடல்தான் நீர்வீழ்ச்சி தீ மூட்டுதே. சுமார் 4 வருடங்களின் பின்னர் இந்த மெட்டு தமிழில் மீளவும் பிரசவிக்கின்றது.

இந்தியா முழுக்க சுற்றியதானால் ஹிந்தியிலும் வரவேண்டும் தானே? 1996 தென்னிந்தியாவின் ஒரு தலைசிறந்த இயக்குனரான பாலு மகேந்திராவின் ஹிந்தித் திரைப்படமான அவுர் ஏக் ப்ரேம் கஹானி எனும் திரைப்படத்தில் இந்தப் பாடல் இடம்பெறுகின்றது. ஹீரா, ரேவதி, ரமேஷ் அரவிந்த் போன்ற பல தென்னிந்திய திரைப்பட நட்சத்திரங்கள் இந்த திரைப்படம் மூலம் ஹிந்தித்திரையுலகிற்கு அறிமுகம் ஆகினர்.

இதைத் தொடர்ந்து அண்மையில் வெளியான பா திரைப்படத்தில் இந்தப் பாடல் மறுபடியும். அமிதாப்பும் அவர் தனையன் அபிஷேக்கும் நடித்த பா திரைப்படத்தில் ஹிந்தியில் இந்தப் பாடல் கும் சும் கும். தற்காலத்திற்கு ஏற்ற மெருகூட்டப்பட்ட அமைப்புடன் லயிக்க வைக்கின்றது ஹிந்தியில்.

ஏனோ வயது ஏற ஏற மற்ற இசையமைப்பாளர்களின் பாடல்களை விட ராஜாவின் பாடல்கள் இலயிக்க வைக்கின்றது. மெல்ல நகர்ந்து செல்லும் இளமையை இரைமீட்க வைப்பது ராஜா பாடல்கள் மட்டுமே.

நான் மகான் அல்ல – விமர்சனம்

கார்த்தி & கஜல் அகர்வால்

காதல் கதையா க்ரைம் கதையா என்று யோசித்து முடிப்பதற்குள் படம் முடிந்து விடுகின்றது. முதல் பாகம் காதல் கதையாகவும் கார்த்தியின் கிளு கிளு காதல் நகர்வுகளுடன் நகர்கின்றது. அதே முரட்டுப் பொடியனாகத்தான் இன்னமும் கார்த்தி வலம் வருகின்றார்.

இரண்டாம் பாதி வன்முறையில் நனைகின்றது. முதல் பாதியிலேயே வன்முறை தொடங்கிவிட்டாலும் இரண்டாம் பாகத்தில் முற்றிவிடுகின்றது.

கதை என்னவென்றால் கல்லூரி மாணவர்கள் மது, போதை வஸ்துக்கள் மற்றும் பெண்களைக் கற்பழிப்பு என்று அலைகின்றது. இவ்வாறு பாதிகப்பட்ட ஒரு பெண்ணைக் கடத்த அதை கார்த்தியின் தகப்பனார் பார்த்துவிடுகின்றார்.

பொடியள் பட்டாளம் கொலைக்குச் சாட்சியான கார்த்தியின் தந்தையை போட்டுத்தள்ள முயல்கின்றார்கள். போட்டுத் தள்ளினார்களா?? கார்த்தி அந்த பாவிகளை என்ன செய்தார்?? பொலிஸ் என்ன செய்தது?? என்பவற்றிற்கு விடை திருட்டு விசிடியிலோ அல்லது அருகில் உள்ள திரையரங்கிலோ கிடைக்கலாம்.

இயக்குனர் சுசீந்திரன் புதிய கள்ளை பழைய மொந்தையில் தந்துள்ளார். ஆனாலும் படம் மோசமில்லை. படம் ஆரம்பித்து முடிக்கும் வரை விறு விறு என்று கதை நகர்கின்றது. கிளைமாக்ஸ் சண்டைக் காட்சிகள் ஒரு கட்டத்திற்கு மேல் வெறுப்பேற்றுகின்றது. முடிவு அடியேனுக்குப் பிடித்திருந்ததே.

கஜல் அகர்வால் படத்தில் என்ன செய்கின்றார் என்று யாராவது சொன்னால் ஒரு இலட்சம் பரிசு வழங்கப்படும். சும்மா ஏதோ ஒரு கதாநாயகி தேவை என்பதற்காக வந்து போகின்றார். சில சிலுமிசங்கள் மட்டுமே கார்த்தியுடன் செய்து விட்டு மறைந்து போய்விடுகின்றார்.

யுவனின் இசை இலயிக்கின்றது. கார்த்தி கோபம் கொள்ளும் கிளைமாக்ஸ் காட்சிகளில் ராக் இசை அபாரம். அதைவிட “இறகைப் போல” பாடல் மனதில் நச் என்று பதிந்து விடுகின்றது.

கண்ணோரம் காதல் வந்தால் கண்ணீரும் தித்திப்பாகும்
வேறொன்றும் தேவையில்லை நீ மட்டும் போதும் போதும்
என்னோடு நீயும் வந்தால் எல்லாமே கையில் சேரும்
வேறொன்றும் தேவையில்லை நீ மட்டும் போதும் போதும்

காட்சியமைப்புகள், சண்டைக் காட்சிகளும் அருமை. மொத்தத்தில் கார்த்தி அண்ணனை விஞ்சப்போகும் பந்தையக் குதிரை. சூரியா உங்கள் கதிரையை இறுக்கிப் பிடித்துக் கொள்ளுங்கள்.

சுறா ரியாக்சன் – இணையத்தில் விமர்சனங்கள்

ட்விட்டர்

சுறா விசய்

@webalfee naan avan illai – சமாதானமா போக புறா இல்ல சுறா vs சமாதானமா போக சாமி இல்ல ஸ் வாமி.. http://bit.ly/aOznOS

@TBCD வசனம் பேசுவதில் ஒரு ங்கொன்னியா மாதிரி வேற குரலில் பேசுவாரே, அதை படம் முழுக்க செஞ்சி நம்மை சோதிக்கிறார் “சுறா”

@dynobuoy @penathal சுறா மேரி… எங்க பேச்சை நாங்களே நோ லிசனிங்! அதுக்குதான் ஆயிரக்கணக்கான மாக்காள் இருக்காங்களே?

scanman #சுறா படு கேவலம். தயவு செய்து காசையும் நேரத்தையும் வீனாக்காதேன்னு நண்பன் ஒருவன் கோவையிலிருந்து கூப்பிட்டு சொன்னான்.

@TBCD @nandhakumar மிகவும் மோசமென்று சொல்ல முடியாது. சுறா தப்பிக்கும் !

@nattanu சுறா செம கடி கடிக்குதாமே? 20 $ ஆப்பா இன்னிக்கு நைட் 🙁

nandhakumar சுறா போய் விட்டு வந்து 20 நிமிடத்தில் வெளி வந்து விட்டேன். இவ்வளவு மொக்கையாக விஜய் படம் இது வரை வந்ததில்லை என்றே சொல்லலாம்

@dakannan கதைதான் ரீமேக் என்றால் பாடல்களுமா என்ற அலுப்புதான் மிஞ்சுகிறது – “சுறா” : திரை விமர்சனம்

@subankan சுறா விமர்சனங்களோட தொல்லை தாங்காம தமிழ்மணமே ஸ்டக்கிடுச்சுடா #தளபதி வாழ்க

@nirujah டிஷானும் அவுட்…! சுறா பாக்கிறதை விட சிறிகட் பாக்கலாம் போல இருக்கு 😉

மேலும் ட்வடிட்டர் நச் காண…

பீட்டர் தளங்கள்

http://www.tamilstudios.com
He sings and dances with elan, wears stylish costumes to make a point to his colleagues and audiences alike and, as expected of any Tamil super-hero, fights every evil-doer in the vicinity with single-handed panache.

தமிழ் விமர்சனங்கள்

அகசியம்

தமானா சகிதம் விஜய்

கிராமத்து ஒவ்வொரு வீடுகளின் பிள்ளையாகவும் திகழும் விஜய், அவர்களின் கஸ்டங்களைப் போக்கிய பின்பே திருமணம் செய்வது என்ற ஐடியாவில் இருக்கின்றார். (அது ஒரு வசனத்தோட சரி). இந்தவேளை ஹீரோயின் அறிமுகம். தன் நாய்க்குட்டி இறந்ததற்காக கடலிலுள் தற்கொலை செய்யவரும் தமன்னாவை விஜய் காப்பாற்றுகின்றார். அதன் பின் விஜயின் நல்ல குணங்களை பார்த்து காதலிக்கின்றார். ஆடல், பாடல் கொண்டாட்டம் ஒருபுறம்.

சாத்தூர் மாக்கான்
எப்படியாப்பட்ட பெரிய நடிகரும், ‘இது மக்களுக்குப் பிடிக்குமா… நிராகரித்து விடுவார்களோ’ என்ற பயத்துடன், பார்த்துப் பார்த்து படங்கள் செய்யும் காலம் இது. ஆனால் விஜய் போன்றவர்களுக்கு அந்தக் கவலை கிஞ்சித்தும் இல்லை.

கோழிப் பையன்
மீனவ குப்பத்தை காலிசெய்து அதில் தீம் பார்க் ஒன்றை கட்ட நினைக்கும் ‘ரவுடி’ மந்திரி குப்பத்தை தீவைத்து கொளுத்த அதில் ஹீரோவை சிக்கவைத்து இறந்துவிட்டதாக நம்பவைத்து குப்பத்து மக்களை வேறிடம் சென்று தங்க ஏற்பாடு செய்யும் வேளையில் தீயிலிருந்து ஹீரோ வெளிவருகிறார்.

“எம்மேல கை வைக்கிறதுக்கு முன்னால ஒரு தடவைக்கு ரெண்டுதடவை யோசிச்சு வை. வச்சிட்டா அப்புறம் யோசிக்க நீ இருக்க மாட்டே.”

தமயந்தி
இம‌ய‌ம‌லைல‌ ரூம் போட்டா ம‌ட்டுமே இதெல்லாம் யோசிக்க‌வே வ‌ரும்.அப்புற‌ம் த‌ம‌ன்னா..என்ன‌ ஒரு நிற‌ம். ப‌ட் அவ‌ங்க‌ வாய் ம‌ட்டும் ஏன் இந்த‌ காதுக்கும் அந்த‌ காதுக்கும் வ‌ரை பால‌ம் போடுதுனு ச‌த்திய‌மா புரிய‌ல‌.க‌ட‌வுள்ட்ட‌ ச‌த்திய‌மா கேக்க‌ வேண்டிய‌ கேள்வி.ம‌ணிச‌ர்மா இசைல‌ “த‌ஞ்சாவூர் ஜில்லாகாரி ” பாட்டு அதிர‌ வைக்குது.

சாளரம்
சட்டை பட்டனை போடாமல் திறந்த மார்போடு அதே திருமலை விஜய். ஆனால் இதுவரை போடாத கலர்களில் இருக்கின்றன அவர் அணியும் சட்டைகள். படத்தின் இரண்டாம் வித்தியாசம் அவரின் வீடு. கடற்கரையோரம் இருக்கிறது. இதுவரை எந்த விஜய் படத்திலும் இப்படி இருந்ததில்லை. அந்த குப்பத்தில் ஒரு போட்டி. யார் கடலின் நடுவே சென்று நிறைய மீன் பிடித்து வருகிறார்கள் என்ற போட்டி. வழக்கமாய் ரன்னிங் ரேஸ், கார் ரேஸ் என்றுதான் இருக்கும். ஆனால் இதில் வித்தியாசமாய் கடலில் ஒரு போட்டி. வழக்கம் போல் விஜய்தான் ஜெயிக்கிறார். ஜெயித்தவுடன் பாடல்.

Shockan
விஜய் நன்றாக நடனம் ஆடுகிறார்… வழக்கம் போல சண்டை போடுகிறார்… ஏகப்பட்ட பஞ்ச் வசனங்களைப் பேசுகிறார். மீனவர் உரிமை, இலங்கைத் தமிழர் பிரச்சனையெல்லாம் தொடுகிறார்… !

கூகிள் பஸ்

பவானந்தன்
சுறா படம் வெளிவருவதற்கு முன்னர் வரை ஒரே நேரத்தில் பத்துப் பதினைந்து படங்களில் நடித்துவந்த வடிவேலு சுறா படத்தின் முதலாவது காட்சிக்குப்பிறகு படங்களிலிருந்து தடாலடியாக நீக்கப்பட்டு, அந்த இடத்திற்கு விஜய் போடப்பட்டதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலதிக விபரங்களுக்கு பஸ்சுடன் இணைந்திருங்கள்..:p

பையா விமர்சனம்

வழமை போல எல்லாரும் எழுதி முடித்த பின்னரே நான் இந்த திரைப்பட விமர்சனத்தை எழுத ஆரம்பிக்கின்றேன். புதுவருட விடுமுறைக்கு யாழ் சென்று சும்மா ஆணி புடுங்கிக்கொண்டு இருந்த வேளையில் சோதரன் அழைக்கவே யாழ் நகர் சென்று பையா படம் பார்க்கச் சென்றேன்.

அதிகமாக எதிர்பார்ப்பு வைத்திருக்கவில்லை காரணம் ஏற்கனவே பலரும் பல விதமான விமர்சனங்களை முன்வைத்திருந்தமையே. சூப்பர் என்று சிலரும் மொக்கை என்று சிலரும் சொல்லி வைத்திருந்த காரணத்தால் நானே சென்று பார்த்து முடிவெடுப்பதாக இருந்தேன்.

திரைப்படம் தொடங்கியதில் இருந்து திரைப்படம் முடியும் வரை நாயகன் ஓடு ஓடு என்று ஓடுவார் அவர் கூட நாயகியும் ஓடுவார். வில்லனும் விதியும் விடாமல் துரத்தும். அவ்வகையான திரைப்படங்களை நாம் இது வரை பார்த்திருக்கின்றோம். அவ்வகையைச் சார்த்த திரைப்படம்தான் இந்த திரைப்படம்.

கார்த்தி பொறுப்பற்ற ஒரு இளைஞன். வாழ்வில் வித்தியாசமாக எதையும் முயற்சித்து காலம் கடத்துபவன். விதியின் செயலால் கட்டாயத் திருமணத்தில் இருந்து தமனாவைக் காப்பாற்றும் ஒரு பொறுப்பில் வீழ்கின்றான்.

கிடைத்த இரவல் காரில் தமானாவை ஏற்றிக் கொண்டு ஊர் ஊராக ஓடுவதும் பின்னால் இரண்டு ரவுடிக் கும்பல் துரத்துவதுமாகக் கதை. இடையில் சொல்ல நினைத்தும் சொல்லாமல் தவிக்கும் ஒரு காதல் வேற.

திரைப்படத்தில் என்ன சிறப்பு என்று கேட்டீர்களானால் என்னைப் பொறுத்தவரையில் பிண்ணனி இசை மற்றும் இரண்டு பாடல்கள். சண்டைக் காட்சியில் வரும் இலக்ரோனிக் கிட்டார் இசை எங்கள் மீசையையும் முறுக்க வைக்கின்றது. என் காதல் சொல்ல நேரம் இல்லை மற்றும் துளி துளி மழைத்துளியாய் வந்தாளே பாடல்கள் மனதில் நச்சென்று பதிந்து விடுகின்றன. மற்றய பாடல்கள் ஒட்டவில்லை.

லொஜிக் இல்லாத மொக்கை சண்டைகளுக்கு குறைவில்லை. இருபது முப்பது பேரை கார்த்தி ஒத்தையாளாக அடித்து வீழ்த்தும் போது.. ஷப்பா… ஆரம்பிச்சுட்டாங்கையா என்றுதான் சொல்லத் தோன்றுகின்றது. ஆனால் தியட்டரில் அந்த சண்டைக் காட்சிகளை விசிலடிச்சு இரசிக்கவும் ஒரு கூட்டம் இருக்கின்றது என்பதே உண்மை.

கார்த்தி நடிப்பு ஓ.கே. தமானா நடிப்பு என்று ஒன்றும் இல்லை ஆனால் கியூட்டா இருந்தாங்க. என்றாலும் கார்த்திதான் பெஸ்ட். 😉

கார்த்தியின் நடிப்பு ஆயிரத்தில் ஒருவன் மற்றும் பருத்தி வீரன் போன்ற திரைப்படங்களுடன் ஒப்பிடும் போது சுமார்தான். கார்த்தி சில இடங்களில் சூர்யாவையும் சில இடங்களில் சிவ குமாரையும் ஞாபகப் படுத்துகின்றார். இன்னும் சிறப்பாக எதிர் வரும் படங்களில் நடிப்பார் என்று நம்பலாம்.

படம் சூப்பரா இல்லை மொக்கையா என்று என்னிடம் கேட்டால் என் பதில் இரண்டும் இல்லை என்பதுதான். ஒரு தடவை தியட்டரில் பார்த்து இரசிக்க கூடிய திரைப்படம். திருட்டு வீசீடியில் பார்ப்பதற்கு இந்த திரைப்படத்தில் ஒன்றும் இல்லை.

அது சரி எதற்காக இந்த திரைப்படத்திற்கு “பையா” என்று பெயர் வைத்தனர்??? பேசாமல் பெங்களூரில் இருந்து மும்பாய் வரை என்று ஒரு பெயர் வைத்திருக்கலாம்.  வர வர லிங்குசாமியிடம் சரக்கு குறைந்து போகின்றதோ என்று எண்ணத் தோன்றுகின்றது.

வில்லு ஒரே லொள்ளு – விமர்சனம்

வில்லுவில் வரும் லொள்ளு விஜய்
வில்லுவில் வரும் லொள்ளு விஜய்

நேற்றய தினம் கடும் பண நெருக்கடி மத்தியிலும் ஹிந்தி கஜனி திரைப்படம் பார்த்துவிடும் திட சங்கர்ப்பத்துடன் மருதானை சினி சிட்டி திரையரங்குக்கு சென்றேன். வாசலில் ஒரே கூட்டம், என்னடா இது கஜனி படத்திற்கு இவ்வளவு கூட்டமா? பரவாயில்லை அமீர்கானுக்கு இப்ப தமிழ் இளசுகள் மட்டத்திலயும் நல்ல ஆதரவு இருக்கு என்று நினைத்துக்கொண்டு கிட்ட போனபோது தான் தெரிந்த்து, இளய தளபதி விசய் அவர்களின் திரைப்படம் வில்லு வெளியாகின்றது என்று.

என்னதானானாலும் கஜனி பார்த்துவிடும் வேகத்தில் உள்ளே சென்ற எனக்கு ஒரே ஏமாற்றம் காத்திருந்தது. அதிகமானோர் வில்லு பார்க்க வந்துள்ளதால் கஜனியை நிப்பாட்டி விட்டார்கள். அங்கே கஜனி பார்க்க சென்றது நானும் ஒரு சர்தார் ஜீயும்.

சர்தாரோ வாசலில் நிற்கும் காவலாளியிடம் ‘கஜனி நஹீ?’ என்று கேட்க அவனும் ‘நஹீ சார்’ என்றான்.

சரி வந்ததுதான் வந்தம் வில்லைப்பார்ரப்பம் என்று லைனில நின்று டிக்கட் எடுத்து உள்ளே சென்றேன். வழமை போல ஒரே இளைஞர் கூட்டம், சில இளைஞி இரசிகர்களும் இருந்தார்கள்.

படம் தொடங்கியதும் ஒரே விசில் சத்தம், அப்புறமாக எப்படா விஜய் வருவார் வருவார் என்று ஏங்கி இருந்த போது இறுதியாக விசய் வந்து சேர்ந்தார். என்ன கொடுமை சார், ஹூரோ அறிமுகம், விஜய் சேலை போர்த்திக்கொண்டு அறிமுகமாகின்றார். ஏதோ அவரை கற்பழிப்பது போல வில்லனுகள் துகிலுரிகின்றார்கள். அப்பவே எழுந்து போய் விடலாமா என்று இருந்த்து, என்றாலும் கொடுத்த 300 ரூபா இழுத்து உட்கார வைத்தது.

படம் தொடர்கிறது, எரிச்சல் அளவு கடந்து திரையைப் பார்க்காமல் அங்கும் இங்கும் பார்த்துக் கொண்டிருந்தேன். என் கெட்ட காலம் ஒரு அழகான பெட்டை கூட பக்கத்தில் இல்லை இல்லாவிட்டால் அத சரி நோட்டம் விட்டு நேரத்தைக் கடத்தியிருக்கலாம்.

படத்தில் விஜயை காட்டி அதில் ஒரு பிளாஷ் பேக் வேற, மகன் விஜயின் அநியாயம் தாங்காமல் தவிக்கும் நேரத்தில் அப்பா விசயையும் காட்டி நோகடித்தார்கள். ஏதோ பல்லிக்கு மீசை வைத்தது போல ஒரு உருவத்துடன் வருகின்றார் விஜய். அதில் உச்சகட்டம் அவர் இராணுவ அதிகாரியாம். அவர் எந்த ஆபரேஷன் போனாலும் தனியாத்தான் போவாராம். இரண்டு கையிலயும் இரண்டு A.K. 47 வைத்து சுடுவாராம். பாக்கிறவன் கேனை என்டா எருமையும் ஏரோபிளேன் ஓட்டும்.

சத்தியமாக சொல்லுகின்றேன், விஜய், சூர்யா, விக்ரம் போன்ற சக நடிகர்களைப் பார்த்து எவ்வாறு பாத்திரத்துக்கேற்றவாறு மாறுவது என்று தெரிந்து கொள்வது நலம்.

விஜய் இப்படி என்றால், நாயன்தாரா…. ஐயோ..! அவருக்கு பிங்கினி போடுவதை தவிர வேற எதுவுமே இந்தப் படத்தில் இல்லை.

வடிவேல் மட்டுமே திரைப்படத்தில் ஒரே ஆறுதல். நல்ல நகைச்சுவை. ஹூரோ அறிமுகத்தை விட வடிவேல் அறிமுகம் அபாரம்.

என்னைப்போல பல நொந்த உள்ளங்கள் உலகம் முழுதும் இருக்கும் என்று நம்புகின்றேன். ஒரு இரசிகனை இந்தளவுக்கு பேச வைத்திருக்கிறார் விசய் அவர்கள்.

இந்தப் பதிவில் ஒரு சத்தியம் எடுக்கின்றேன், ‘இனிமேல் விஜய் படங்களுக்கு, அந்தப் படம் பற்றி அறியாமல் உள்ளயே போகமாட்டேன்‘.

Channel [V] இல் முதல் தடவையாத் தமிழ் பாடல்

சானல் வீ இல் முதல் தடவையாக ஒரு தமிழ் பாடல் ஒளிபரப்பாகியுள்ளது. வாரணாயிரம் திரைப்படத்தில் வரும் அடியே கொல்லுதே எனும் பாடலே இவ்வாறு ஒளிபரப்பாகியுள்ளது. பொதுவாக சானல் வீயில் ஹிந்திப் பாடல்கள் மட்டுமே ஒளிபரப்பாகும். இந்த நேரத்தில் இவ்வாறு முதல் தடவையாக தமிழ் பாடல் ஒளிபரப்பாகியமை ஒரு நல்லவிடையம். தெற்கில் இருக்கும் திறமைகளுக்கும் சானல் வீ அங்கீகாரம் வழங்குகின்றமை அருமையான விடையமே.

Vaaranamiyram Movie Poster

பாடல்

வீடியோ அமைக்கும் காட்சி

தசாவதாரம் (2008) விமர்சனம்

ஏற்கனவே முடிவு செய்தபடி இன்று மதியக் காட்சிக்குச் சென்று தசாவதாரம் திரைப்படம் பார்த்தாகிவிட்டது. 2.30 காட்சிக்கு 12.30 க்கே சென்று வெயிலில் காய்ந்ததும், உள்ளே நுழைய முயற்சிக்கையில் மோர் கடைபடுவது போல ஒரேயடியாக நசுங்கி பொசுங்கியதும் வேறு கதை. அடித்துப் பிடித்து மரதானை சினி சிட்டியினுள் நுழைந்து ஒரு சீட்டுப் புடிச்சு உட்கார்ந்தாகிவிட்டது.

வழமை போல விளம்பரங்களுடன் காட்சி ஆரம்பமாகியது. உள்ளே வந்த சந்தோஷத்தில் இரசிகர்கள் திரையில் காட்டுவது எல்லாத்த்துக்கும் விசில் அடித்துக்கொண்டிருந்தார்கள். ஒரேயடியாக வெயிலில் நின்று சடார் என்று ஏ/சி க்குள் விட்டால் இப்படித்தான் மண்டை குளம்புமாக்கும். விளம்பரங்களை அடுத்து சத்தியம் திரைப்பட ட்ரேயிலரும் போட்டுக் காட்டினார்கள். விஷால் கலக்கலாக அக்சன் காட்சிகளில் கலக்கியிருப்பதாகத் தெரிகின்றது.

எல்லாம் முடிந்து திரைப்படம் தொடங்கியது. கதையின் ஆரம்பம் தமிழ்நாட்டில். குலோத்தூங்க சோழனுக்கும் ஒரு விஷ்ணு பக்தருக்கும் இடையில் ஏற்படும் கல கலப்பு. சைவமா வைனவமா சிறப்பானது என்பதில் கமலுக்கும் (ராமானுஜன்) நெப்போலியனுக்கும் (குலோத்தூங்க சோழன்) கல கலப்பு. 12 ம் நூற்றாண்டில் நடந்த இந்த நிகழ்ச்சி அழகாக படமாக்கி திரைக்கதையிற்கு ஒரு தொடுப்பும் கொடுத்திருக்கின்றார்கள். இந்த காட்சிகளைப் பார்க்கும் போது பொன்னியின் செல்வனை நிச்சயமாகத் தமிழில் எடுக்கலாம் என்ற நம்பிக்கை என் மனதில் அடியில் ஊற்றுப் பெற்றது.

மொத்தம் பத்து வேடத்தில் கமல் நடித்திருந்தார். பத்து வேடமும் என்ன என்ன என்பது எனக்கு கூட ஞாபகத்தில் நின்ற பாடில்லை எப்படித்தான் கமல் ஞாபகத்தில் வைத்து நடித்தாரே?? 😉

திரைப்படத்தைப் பார்ப்பதாக இருந்தால் இதற்கு மேல் வாசிக்க வேண்டாம்…

நாயகன் கமல் அமெரிக்காவில் நுன் உயிரியலில் பி.எச்.டி பட்டம் பெற்று ஒரு ஆய்வு கூடத்தில் விஞ்ஞானியாகப் பணியாற்றுகின்றார். இவர்கள் கண்டுபிடிக்கும் ஒரு உயிரியல் ஆயுதம் ஒரு பிரதேசத்தையே அழிக்க கூடியது. இதை நடுநிலைப் படுத்த NaCl பயன்படுத்த வேண்டும். அதாவது உப்பு நீர்.

இதை களவாடி வேற்றார் கையில் விற்க அதே ஆய்வு கூடத்தில் முயற்சி நடக்கிறது. இதையறிந்து அந்த உயிரியல் ஆயுதத்தை களவாடி FBI கையில் ஒப்படைக்க கமல் முயற்சிக்கின்றார். ஆனால் விதி வேறு விதமாக விளையாடி இவரை இந்தியாவிற்கு அந்த உயரியல் ஆயுதத்துடன் வர வழைத்துவிடுகின்றது. அங்கே நம்ம அசின் பொண்ணை வேறு சந்தித்து தொலைத்து விடுகின்றார்.

இந்த உயிரியல் ஆயுதத்தைக் கைப்பற்ற அமெரிக்காவில் இருந்து கமலை விடாமல் ஒரு வெள்ளைக்கார வில்லன் துரத்துகின்றார். அந்த வெள்ளைக்கார வில்லனும் கமல்தான். இந்த வெள்ளைக்கார வில்லன் கமலைத் துரத்தும் போது கமலின் நண்பன் ஒருவனின் ஜப்பானிய மனைவியைக் கொலை செய்துவிடுகின்றான். இதனால் கோவமடையும் அந்த ஜப்பானிய நங்கையின் அண்ணா வில்லன் கமலை இறுதியில் ஒன்டிக்கு ஒன்டியாக சந்திப்பது வேறு கதை. இந்த ஜப்பானிய பாத்திரமும் கமல்தான்.

இந்தியாவை வந்தடையும் கமல் அங்கே பொலீசாரால் கைது செய்யப்படுகின்றார். இவரைக் கைது செய்யும் ஒரு தெலுங்கு காரப் பொலீஸ்காரன் அடிக்கும் கூத்து ஒரே ரகளை. தெலுங்கு பேசுபவர்களின் உச்சரிப்பில் இவர் பேசும் தமிழ் ஜோராக இருந்தது. இந்த பொலீஸ் அதிகாரியும் ஒரு கமல்தான். இந்தியாவில அதிகமாக பேசப்படுற மொழி ஹிந்தி, அதுக்கடுத்ததாக பேசப்படுறது தெலுங்கு, அதுக்கடுத்ததுதான் தமிழ். இப்படியா இருக்கையில் தெலுங்கு காரனான நானே தமிழைப் படித்து பேசும் போது நீ என்ன இங்கிலீசில பேசுறாய் என்று கேட்பது நச்.

இதைவிட பாட்டி, தலித்து, புஷ், சர்தர் ஜூ என்று பல வேடங்களில் கமல். அந்த உயிரியல் குண்டு வெடித்ததா இல்லையா என்பதுதான் மிகுதிக் கதை. திரைப்படத்தில் கதை என்று சொல்வதற்கு பெரிதாக இல்லை என்பது என் தாழ்மையான கருத்து. பிரமாண்டம், மற்றும் கமலின் புதுமையான நடிப்பு. குறிப்பாக பாத்திரத்திற்கு பாத்திரம் வேறுபடுத்தி நடிக்கும் நடிப்பு திரைப்படத்தை இலயித்து பார்க்க வைக்கின்றது.

மல்லிகா ஷெரவாத் ஒரேயடிக காற்று வாங்கிக் கொண்டே நடித்திருக்கின்றார். சில வேளைகளில் அந்நேரத்தில் இந்தியாவில் வெயில் அதிகமாக இருந்ததால் அப்படியாக உடை அணிந்தாரோ தெரியவில்லை.

சில கொலை நடக்கும் காட்சிகள் சிறுவர்களுடன் பார்க்க தகுந்தது என்று நான் நினைக்கவில்லை. ஆகவே சிறுவர்களை அழைத்துச் செல்வதானால் யோசித்துச் செல்லுங்கள். கடைசி வந்தாலும் திருட்டு சீடியில் இந்த திரைப்படத்தைப் பார்க்காதீர்கள். தியட்டர் காட்சியமைப்பு, ஒளி, ஒலி அமைப்பில் பார்க்காவிட்டால் இந்த திரைப்படம் சப்பையாக இருக்கும்.

மொத்தத்தில் கமல் தான் ஒரு வண் மான் ஆர்மி என்பதை நிரூபித்திருக்கின்றார். ஆகா ஓகே பேஷ் பலே என்றேல்லாம் பாராட்ட மாட்டேன். ஆனால் வித்தாயாசமான இந்த முயற்சியை திரையில் கண்டு களிக்கலாம்.

தமிழகம் வந்து மனம் நொந்த ஜாக்கி

200px}}Image via Wikipedia

பாவப் பட்ட ஜக்கி சான், உலகில் எத்தனையோ நகரங்கள் இருக்க எங்கட சென்னைக்கு வந்தார். தசாவதாரம் இசை வெளியீட்டு விழாவிலும் குடு குடு என்று சிறு பிள்ளை போல கலக்கினார். இருந்ததவர்களை எல்லாம் தன் கள்ளம் கபடமற்ற செயல்களால் சிரிக்க வைத்தார். வணக்கம் என தமிழில் சொல்லி பேசத் தொடங்கினார்.

எல்லாம் முடிந்து ஊர் திரும்பினால் அவருக்கு துன்பம் காத்திருந்தது. இவர் இந்தியாவில் மற்றய இந்தியக் கலைஞர்களை மதிக்கவில்லை, இந்தியாவின் தண்ணீர் போத்தலில் தண்ணி குடிக்கவில்லை, என்றெல்லாம் சில ஊடகங்கள் இவரை வைதுள்ளன. இதனால் மனமுடைந்த ஜாக்கி இது பற்றி தனது தளத்தில் மனமுருகி எழுதியுள்ளார்.

ஏன்தான் நம் ஊர் காரங்களுக்கு இந்த கோணல் புத்தியோ?

கலைஞரில் மண் திரைப்படம்

இன்று மாலை தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந்தபோது, வரும் ஞாயிற்றுக் கிழமை கலைஞர் தொலைக்காட்சியில் மண் திரைப்படம் ஒளிபரப்பப்பட உள்ளது என்பதை அறிந்து கொண்டேன். வழமையான பீடிகையுடன் இந்தியத் தொலைக்காட்சிகளில் முதன் முறையாக…. என்று தொடங்கினார்கள்.

ஏற்கனவே இந்த மண் திரைப்படத்தின் விமர்சனம் எழுதியிருந்தேன். சிலர் ஆமோதித்தனர் சிலர் இல்லை என்றிருந்தனர். இதைவிடப் பலர் குறுவட்டு கிடைக்காத காரணத்தால் திரைப்படத்தைப் பார்க்க முடியவில்லை என்றும் கூறியிருந்தனர். இந்த சந்தர்ப்பத்தில் இந்த அர்த்தமற்ற அல்லது காலத்தின் தேவைக்கு உதவாத தமிழ் திரைப்படத்தினை உலகத் தமிழர்கள் பார்கும் வாய்ப்புக் கிடைத்துள்ளது.

அனைவரும் பாருங்கள், ஆனால் அதில் வருவதை பார்த்து படத்தில் என்ன கருத்து சொல்ல வருகின்றார்கள் என்று குழம்பாதீர்கள்!! 😯

அன்புடன்,
மயூ

கல்லூரி விமர்சனம்

திரைப்படம் என்றால் அழகான ஹீரோ இருக்க வேண்டும், அழகான துணை நடிகர்கள் இருக்க வேண்டும், பெரிய செட்டுகள் இருக்க வேண்டும், ஹிப் ஹொப் பாடல்கள் இருக்க வேண்டும், நமீதா வந்து குத்துப் போட வேண்டும் என்றெல்லாம் நம்மவர்கள் எதிர்பார்ப்பர்.இப்படியான எதிர்பார்ப்புகளால் இத்தனை நாள் பார்க்காமல் இருந்த திரைப்படம்தான் கல்லூரி. நேற்று நேரம் போக்க சும்மா பார்ப்போம் என்று நினைத்து இந்தப் படத்தைப் பார்த்தேன். ஆரம்பித்ததில் இருந்து முடியும் வரை நிறுத்த முடியாமல் பார்த்து முடித்தேன்.

கதைக்களம் சிறிய நகரம் ஒன்றில் உள்ள கல்லூரி. ஒரு நண்பர்கள் வட்டத்தைக் காட்டுவதுடன் ஆரம்பிக்கின்றது. இந்த நண்பர்கள் வட்டத்துடன் பெங்களூரில் வரும் கதையின் நாயகி ஷோபனா இணைந்து கொள்கின்றாள். இந்தக் குழுவில் இருக்கும் முத்து எனும் பையனுக்கும், இந்த அழகான நாயகி ஷோபனாக்கும் காதல் பிறக்கின்றது. இவர்களின் காதலுக்கு என்னானது என்பதே மீதிக்கதை.

கதையைப் பின்னிச்செல்லும் விதம் அருமை. திரைக் கதையுடன் நாம் இணைந்து விடுவது நிச்சயம். ஒவ்வொரு பாத்திரமும் அழகாக காட்டப் பட்டுள்ளது. காட்டப்பட்டுள்ளது என்பதை விட வேறுபடுத்திக் காட்டப்பட்டுள்ளது. நகைச்சுவைக் காட்சிகள் பரவாயில்லை. குறிப்பாக இரட்டைச் சகோதரர்கள் அடிக்கும் லூட்டி, ஆங்கில வாத்தியின் வியாபார முயற்சி.

சில இடங்களில் நாயகன் நடிப்பில் கொஞ்சம் திணறுகின்றார். என்றாலும் மொத்தத்தில் நல்ல நடிப்பு. ஷோபனா, முத்து காதல் வளரும் விதம் அழகாகக் காட்டப் பட்டுள்ளது. நட்பில் வரும் ஊடல்களும் விபரிக்கப் பட்டுள்ளது.

இசையமைப்பு சுமார், ஒரு பாடல் மட்டும் தேனாய் இனிக்கின்றது. உன்னருகில் வருகையில் என்பதே அந்தப்பாடல். இந்தப் பாடலில் தொகுப்பு சுமார் என்றாலும் காட்சிக் கோர்வை கலக்கலாக உள்ளது. மீராவிற்கு பின்னர் என்னைக் கவர்ந்த நாயகி இவர்தான். சிரிக்கும் போது அப்படியே மனதை வருடிச் செல்கின்றார்.

இவ்வழவு அழகாக திரைப்படத்தை எடுத்துவிட்டு அதில் இப்படி ஒரு சப்பை முடிவை வைத்திருக்க வேண்டாம். முடிவு படு சொதப்பல்.

இது வரை இத்திரைப்படத்தைப் பார்க்காவிட்டால் கட்டாயம் பாருங்கள். உங்கள் கல்லூரி வாழ்க்கையின் ஒரு அத்தியாயமாவது இருக்கும். நினைவுகளை மீட்ட வைக்கும் ஒரு அழகான திரைப்படம்.