கடந்த செவ்வாய்க்கிழமை பேபால் தனிப்பட்ட பயனர்களின் பணப் பரிமாற்றம் இடை நிறுத்தபட்டிருந்தது. இதற்கு காரணம் இந்திய சட்டங்களுடன் ஏற்பட்ட ஒரு குழப்பமே என்றும் பேபால் அறிவித்திருந்தமை நாம் அறிந்த விடையமே.
இந்நிலையில் இந்தியாவில் பேபாலை இந்திய மத்திய ரிசர்வ் வங்கி தடை செய்துள்ளது. இதற்கு கூறப்பட்ட காரணம் பேபால் இந்திய மத்திய ரிசர்வ் வங்கியில் தன்னைப் பதிந்து கொள்ளவில்லை என்பதே.
இணையத்தில் பணப் பரிமாற்றம் செய்யும் பாதுகாப்பான முறைகளில் ஒன்றே பேபால். பாதுகாப்பு கூடிய முறை என்பதுடன் பலராலும் பரந்தளவில் பயன்படுத்தப்படும் முறையும் இதுதான் என்று கூறினால் மிகையாகாது.
இந்த தடைமூலம் இணையத்தில் பேபால் பாவிக்கும் இந்தியர்கள் பெரும் பிரைச்சனைகளை அடையப் போகின்றனர். இலங்கை போன்ற நாடுகளில் பேபால் முழுமையான சேவையை வழங்கவில்லை. இலங்கை பேபால் பயனர்கள் பணத்தை மற்ற பயனர்களுக்கு அனுப்பும் வசதியுண்டு ஆனால் அங்கிருந்து பேபால் பணத்தை பெறும் வசதியில்லை. ஆயினும் இருபக்க கொடுக்கல் வாங்கல் வசதி இந்திய பேபால் பயனர்களுக்கு வழங்கப்பட்டிருந்தமை குறிப்படித் தக்கதாகும்.
எது எவ்வாறிகினும் பேபால் தம்மை பதிவு செய்துகொண்டால் மீள இந்தியாவில் இயங்கலாம் என்று மத்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
Google Buzz பற்றி நேற்று மற்றும் இன்று இணையத்தில் பர பரப்பாகப் பேசப் படுகின்றது. அனைவரும் தமக்கும் Google Buzz உயிர்ப்பூட்டப்பட்டுவிட்டது என்று பிதற்றுவதைக் கேட்டிருக்கலாம். ஏன், நீங்கள் உங்கள் ஜிமெயில் கணக்கினுள் நுழைய முயலும் போது கூகிள் Buzz ஐ உயிர்ப்பூட்டுமாறு ஒரு செய்தி உங்களுக்கும் கிடைத்திருக்கலாம்.
கூகிள் வேவ் பற்றி பயங்கரமாக கூகிள் பிரச்சாரம் செய்தது ஆனால் அது அவ்வளவாகப் பிரபலமடையவில்லை. இம்முறை சிறிய குறுகிய அறிவித்தலுடன் கூகிள் இந்த Buzz சேவையை ஜிமெயிலினுள் அனுமதித்துள்ளது.
கூகிள் Buzz என்றால் என்ன?
கூகிள் Buzz எனப் படுவது Twitter, FaceBook, Friendfeed போன்றவற்றை பிரதி செய்து (அதாங்க, காப்பி அடிச்சு) ஜிமெயில், கூகிள் ரீடர் போன்ற கூகிளின் சேவைகளுக்குள் உள்ளமைக்கப்பட்ட ஒரு சேவையே ஆகும்.
உங்களுக்கு ட்விட்டர் பரிச்சயம் என்றால் கூகிள் பஸ் பற்றிப் புரிவதற்கு அவ்வளவு நேரம் ஆகாது. நீங்கள் இணையத்தில் பார்க்கும் விடையம் ஒன்றையோ அல்லது உங்கள் மனதில் தோன்றும் ஒரு கருத்தையோ நீங்கள் வெளியிட அதில் மற்றவர்கள் பதில் போட்டு தங்கள் கருத்தையும் தெரிவிக்க கூடிய ஒரு மேடையை அமைத்துத் தரும் தன்மையே இதன் அடிப்படைச் செயற்பாடு.
இதைவிட Flickr, Twitter போன்ற தளங்களில் நீங்கள் செய்யும் மாற்றங்களையும் நிகழ் நேரத்தில் இங்கே காட்டமுடியும்.
நீங்கள் உங்கள் ஜிமெயில் கணக்கினுள் புகுபதிகை செய்யும் போது Google Buzz ஐ உயிர்ப்பிக்குமாறு ஒரு வேண்டுகோள் வரவில்லையாயின் உங்கள் கணக்கிற்கு இன்னமும் கூகிள் பஸ் வழங்கப்படவில்லை என்று அர்த்தம்.
ட்விட்டரில் அரட்டையடித்து நேரம் வீணாக்கும் காங்கோன் போன்றவர்கள் இருக்கும் உலகில் உருப்படியான வேலைகளை செய்து பெயரெடுக்கும் நபர்களும் இருக்கத்தான் செய்கின்றார்கள்.
அமெரிக்காவில் இருக்கும் Adorian Deck எனும் 16 வயது மட்டுமே நிரம்பிய பாலகன் ட்விட்டர் கணக்கு ஒன்றை ஆரம்பித்து அதில் திகைக்கவைக்கும் தகவல்களைப் போடத்தொடங்கினான். OMGFacts (Oh My God) எனும் அடைபெயருடன் இவன் கடந்த செப்டம்பர் மாதம் ஆரம்பித்த ட்விட்டர் கணக்கில் அறிவியல், கணக்கியல், வரலாறு பூகோளம் போன்றவற்றில் இருந்து திகைக்கவைக்க கூடிய தகவல்களை வெளியிட்டு வந்தான்.
இந்த ட்விட்டர் கணக்கு பிரபலமாக பல பிரபலங்களும் இவனைப் பின்தொடரத்தொடங்கினமை மேலும் சிறப்பு. இதுவரை சுமார் 310,000 க்கும் மேற்பட்ட பின்தொடர்பவர்களைக் கொண்டுள்ள இந்தச் சிறுவன் ஒரு ட்விட்டர் நட்சத்திரம் ஆகிவிட்டான்.
OMGFacts இலச்சினை
16 வயது தம்பி போட்ட சில ட்விட்டர் சாம்பிள்களைக் கீழே பாருங்கள்
All swans in England are the property of the queen or king.
In 1770, a bill proposing that women using makeup should be punished for witchcraft was put forward to the British Parliament.
Orgies were originally religious events. They were originally offerings to the gods.
இவன் எழுதிய சில தனி நபர்கள் பற்றிய ட்விட்கள் சர்ச்சைகளையும் கிளப்பியுள்ளது.
பேச்சுரிமை, தகவல் உரிமை போன்ற விடயங்களைக் கேட்டால் சீனாவிற்கு ஆகாது. எதையும் முளையிலேயே கிள்ளி எறியும் பழக்கம் உடையது சீனா. உலகம் எங்கும் சீனாவிற்கு எதிராக மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் இருந்தாலும் சீனா எது பற்றியும் கவலைப் படுவதில்லை.
கடந்த டிசம்பர் நடுப்பகுதியில் நடந்த ஒரு நிகழ்வு சீனா மற்றும் கூகிள் இடையில் கடும் கசப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் மனித உரிமைக்கு மீறலுக்கு எதிராகச் செயற்படும் நபர்களின் ஜிமெயில் கணக்குகளைக் கூறிவைத்து சீனாவில் இருந்து இணையத் தாக்குதல் நடைபெற்றுள்ளது. இதன் மூலம் மிகவும் சீற்றம் அடைந்துள்ள கூகிள் நிறுவனம் தன் சீன அலுவலகத்தை மூட வேண்டி வந்தாலும் அதற்கு தயாராக இருப்பதாக அறிவித்துள்ளது.
2006இல் சீனாவில் தனது செயற்பாடுகளை ஆரம்பித்த கூகிள் 10 மில்லியன் பயனர்களில் இருந்து 340 மில்லியன் பயனர்களை தன்பால் மிக குறுகிய காலத்தில் ஈர்த்துக்கொண்டது. சீன அரசுடன் செய்து கொண்ட ஒப்பந்தப்படி சில தகவல்களை தேடல் முடிவுகளில் காட்டாமல் கூகிள் கவனித்துக் கொண்டது.
ஆயினும் டிசம்பர் நடுப் பகுதியில் நடந்த நிகழ்வுகள் நிலைமையைத் தலைகீழாக மாற்றியுள்ளன. இது பற்றி கூகிள் கூறுகையில்
we have evidence to suggest that a primary goal of the attackers was accessing the Gmail accounts of Chinese human rights activists. Based on our investigation to date we believe their attack did not achieve that objective. Only two Gmail accounts appear to have been accessed, and that activity was limited to account information (such as the date the account was created) and subject line, rather than the content of emails themselves.
கூகிளின் பாதுகாப்பு வளையத்தைத் தாண்டி சீன ஹக்கர்களால் ஜிமெயில் கணக்குகளை அணுக முடியாமல் போய்விட்டாலும் இதே மாதிரியான தாக்குதல் ஏனைய நிறுவனங்கள் மீதும் நடத்தப்பட்டதாக கூகிள் கூறுகின்றது.
this attack was not just on Google. As part of our investigation we have discovered that at least twenty other large companies from a wide range of businesses–including the Internet, finance, technology, media and chemical sectors–have been similarly targeted.
பெரும் தர்மசங்கடத்தை தோற்றுவித்த இந்த நிகழ்வில் சீன அரசின் நேரடிப் பங்கு இருக்கின்றதா என்று கேட்டதற்கு பதில் ஏதும் சொல்ல கூகிள் மறுத்துவிட்டது.
குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கும் பழக்கம் உடைய அமெரிக்காவும் தன் பாட்டிற்கு இந்த நிகழ்வு பெரும் சந்தேகங்களை ஏற்படுத்துவதுடன் இது பற்றி சீன அரசிடம் விளக்கம் கோரியுள்ளதாகவும் தெரிவித்தார் ஹல்லாரி கிளிண்டன்.
இந்த நிகழ்வுகளின் பின்னர் கூகிள் இனிமேல் சீனா கூகிள் நிறுவனம் தணிக்கைகள் எவற்றிலும் ஈடுபடாது எனவும் இது சம்பந்தமாக சீன அரசுடன் பேச்சுவார்த்தை நடைபெறும் என்றும் அறிவித்துள்ளது. பேச்சு வார்தை முடிவில் தமது அலுவலகத்தையும் மூடிக்கொண்டு புறபட நேரிட்டாலும் அதற்கும் தயாராக இருப்பதான தோறணையில் கூகிள் கருத்து வெளியிட்டுள்ளது.
“If, as seems likely, the government refuses to allow it to operate an uncensored service, then Google will pull out.
தகவல் சுதந்திரம் எனபது ஒவ்வொரு மனிதனிற்கும் இருக்கவேண்டியது. யாரும் சொல்பவற்றை மட்டுமே நாங்கள் நம்பவேண்டும் என்று நினைப்பது முட்டாள்தனம். சீன அரசும் ஒரு மக்கள் அரசு இப்படியான செயல்களில் இறங்கி மக்கள் எதிர்ப்பைச் சம்பாதிக்குமா?
இவ்விடயம் சம்பந்தமாக எழுதிய புதிய தகவல்களைக் கொண்ட பின்வரும் பதிவுகளையும் காணவும்.
கூகிள் வேவ் பற்றிய பதிவு ஒன்றை எழுதியிருந்தேன். அதில் மற்றவர்களால் அழைக்கப்பட்டால் மட்டுமே கூகிள் வேவ் உள்ளே உங்களால் நுழைய முடியும் என்றும் எழுதியிருந்தேன்.
இன்று அனைவரும் Google Wave பற்றிப் பேசி கொண்டு இருக்கின்றார்கள். 2009 இல் நடந்த கூகிள் ஐ/ஓ வில் இந்த தொடர்பாடல் கருவி அறிமுகப் படுத்தப்பட்டது. பொதுப்படையாகச் சொல்வதானால் கூகிள் வேவ் இணையத்தில் தொடர்பாடல் நடக்கும் விதத்தை மாற்றி அமைக்க போவதாகச் சொல்கின்றார்கள்.
அப்படி என்னதான் இந்த கூகிள் வேவில் இருக்கின்றது என்று நீங்கள் கேட்பது நியாயமானது. பொதுவாக நாங்கள் மின்னஞ்சல் அரட்டை போன்ற தொடர்பாடல் முறைகளைப் பயன்படுத்தும் போது அவை இரண்டு பக்க வழங்கிகளிலும் சேமிக்கப்படும். இப்போது ஒரு மின்னஞ்சலை நான் உங்களுக்கு அனுப்புகின்றேன். நான் அனுப்பியதன் ஒரு பிரதி எனது அஞ்சல் பெட்டியில் தங்கி விடுபதுடன் உங்கள் அஞ்சல் பெட்டிக்கு ஒரு பிரதி வந்து சேர்ந்து விடுகின்றது. நீங்கள் எனக்கு ஒரு பதில் போட்டால் மீள அதில் ஒரு பிரதி எனக்கு வந்துவிடுபதுடன் உங்கள் வழங்கியிலும் ஒரு பிரதி சேமிப்பாகிவிடும்.
கூகிள் வேவில் இப்படியாக இரண்டு பிரதிகள் இருக்காது. ஒரு மைய வழங்கியில் இருவரது மின்னஞ்சல் விபரங்களும் சேமிக்கப்படும். இருவரும் ஒன்லைனில் இருந்தால் மின்னஞ்சல் அரட்டை போல Real Time இல் நடைபெறும். உதாரணமாக நீங்கள் “அடே நண்பா” என்று தட்டச்சு செய்யும் போது அது எழுத்துக்கு எழுத்து அப்படியே உங்கள் நண்பணின் திரையிலும் தெரியும். சாதாரணமான அரட்டையில் நீங்கள் தட்டச்சிட்டு அனுப்பு எனும் பட்டனை அமுக்கும் வரை அரட்டையில் நீங்கள் என்ன தட்டச்சிட்டீர்கள் என்பதை பார்க்க முடியாது என்பதையும் இங்கு ஞாபகப் படுத்துகின்றேன்.
அட இம்புட்டுதானா? இதைத்தான் பெரிய பீலாவிட்டு பெரிய பில்ட்டப்பு கொடுத்து பெரிய சத்தம் போட்டார்கள் என்று நீங்கள் கேட்கின்றீர்களா? கொஞ்சம் பொறுங்க சேர்!
Robots, Gadgets என இரண்டு விடயங்களை கூகிள் வேவில் சேர்த்திருக்கின்றார்கள். அதன் படி றோபாட்டுக்கள் எனப்படுபவை நீங்களும் உங்கள் நண்பனும் உரையாடும் போது இடையில் வந்து உதவும் ஒரு தானியக்க தொடர்பு. உதாரணத்திற்கு உங்கள் நண்பனுக்கு ஹிந்தி மட்டுமே தெரியும். உங்களுக்கு ஆங்கிலம் மட்டுமே தெரியும். இந்த நேரத்தில் றோசி எனும் தானியக்க தொடர்பை உங்கள் உரையாடலில் சேர்த்து மொழிமாற்ற தெரிவுகளை உங்கள் தானியக்க தொடர்பிற்கு சொல்ல வெண்டும். அவ்வளவுதான் உங்கள் நண்பன் ஹிந்தியில் தட்டச்சிட தட்டச்சிட றோசி உங்களுக்கு ஆங்கிலத்தில் மொழி மாற்றிக் காட்டுவா. அப்படியே றோசிக்கு நீங்கள் ஒரு முத்தம் வைக்கலாம். 😉
கூகிள் வேவ் இடைமுகம்
இதை விட பலர் ஒன்று சேர்ந்து ஒரு ஆவணத்தை தொகுப்பது எவ்வளவு கடினமான காரணம் என்று சொல்லத்தெரிய வேண்டியதில்லை. இங்கே கூகிள் வேவ் மூலம் பலரும் ஒரே நேரத்தில் ஆவணங்களை தொகுக்கலாம். ஒருத்தர் ஆவணத்தை தொகுத்துக் கொண்டு இருக்கும் போதே மற்ற பயனரும் இவர் என்னதை தொகுக்கின்றார் என்பதை தனது திரையில் பார்க்கலாம். எல்லாம் ஒரு வீடியோ போல ஓடிக்கொண்டிருக்கும்.
இவ்வாறான பல வசதிகள் கூகிள் வேவில் உள்ளமைந்துள்ளது. எடுத்துக் காட்டிற்கு சில உதாரணங்களை உங்களுக்கு நான் எடுத்து வீசினேன்.
சில Gadgetகள்
கூகிள் மப்ஸ் செய்த சகோதரர்களே கூகிள் வேவையும் அறிமுகம் செய்துள்ளனர். கூகிள் மப்சின் வெற்றிக்க்கு காரணம் அதன் Extendability, அதாவது நீட்சிகளை அமைக்க கூடிய தன்மை. அதே மாதிரி இங்கும் API க்களை வழங்கியுள்ளனர். இதனால் நீங்களும் Robots, Gadgets போன்றவற்றை அமைத்து உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து நீங்கள் அவர்களுடன் அரட்டை அடிக்கும் விதங்களை மாற்றிவிடலாம்.
உதாரணத்திற்கு இன்று வெள்ளவத்தை லிட்டில் ஏசியா ஹோல்ட்டுக்கு வாடா மச்சான் என்று சொன்னால் என்னைப் போல கொட்டாஞ்சேனையில் இருக்கும் நண்பர்களுக்கு அது என்னவென்று புரியாது. இந் நேரத்தில் ஒரு Google Maps Gadget ஐ எங்கள் அரட்டைக்குள் இழுத்து அந்த வரைபடத்தில் எங்கே லிட்டில் ஏசியா ஹோல்ட் இருக்கு என்று காட்டிவிடலாம். அதாவது நீங்கள் கூகிள் வரைபடத்தை அசைக்கும் போது நண்பனின் கணனியிலும் அது அசைந்தாடும் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.
அடேங்கப்பா… நான் இப்பவே போயி கூகிள் வேவ் என்ன என்று பார்த்துவிட்டு வருகின்றேன் என்று நீங்கள் புறப்படுவது எனக்கு தெரிகின்றது. பொறுமை கண்ணா.. பொறுமை….! கூகிள் இப்போது குறிப்பிட்ட சில நபர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கியுள்ளது. செப்டம்பர் 30ம் திகதி சுமார் 100,000 பேரை மட்டும் கூகிள் வேவினுள் கூகிள் அனுமதித்துள்ளது. இதில் அழைக்கப்பட்ட ஒவ்வொருவருக்கும் 8 பேரை அழைக்கும் வசதி வழங்கப்பட்டுள்ளது. அதாவது 100,000 பேர் 8 பேர் வீதம் 800,000 பேரை கூகிள் வேவிற்கு அழைக்க முடியும். மற்றவர்கள் எல்லாரும் கூகிளிடம் ஒரு வேண்டுகோளை வைத்துவிட்டு காத்திருக்க வேண்டியதுதான்.
புளோரிடாவில் இருக்கும் எனது நண்பன் ஒருவனும் அதிஷ்ட வசமாக கூகிள் அழைத்த 100,000 பேரினுள் ஒருவனாக நுழைந்துவிட்டான். அவனிடம் கெஞ்சிக் கூத்தாடி அழுது இரந்து ஒரு அழைப்பிதழை எனது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப செய்துவிட்டேன் ஆனாலும் பாருங்க கூகிள் காரணுக்கு ரொம்பவுமே குசும்பு. அழைப்பு அனுப்பினாலும் அதை உடனே எங்களுக்கு கூகிள் தருவதில்லை. தனது வழங்கிகளின் நிலைமை போன்றவற்றைப் பார்த்து கைமுறையாக ஒன்றோண்றாக அனுப்புகின்றார்களாம். நண்பன் அழைப்பை அனுப்பி இன்றுடன் 3 நாட்கள் ஆகிவிட்டது ஆனாலும் அழைப்பு வந்து சேரவில்லை. கூகிளில் தேடிப் பார்த்தில் சிலருக்கு அழைப்புகள் 7 நாட்களின் பின்னரும் வந்து கிடைத்திருக்கின்றது.
அடே மயூரேசா..! எனக்கு புளோரிடாவில் நண்பன் இல்லையடா…! நான் என்ன செய்யவேணும்?? அப்படி கேட்கின்றீர்களா?? அப்படியானால் கூகிள் வேவைப் பயன்படுத்த விரும்பினால் கூகிளிடம் வேண்டுகோள் வைக்கலாம். மற்றய பயனர்களுக்க திறக்க முதல் உங்களை அழைப்பார்கள் என்று நம்பலாம். அல்லது உங்களிடம் நிறைய பணம் இருந்தால் EBay இல் விற்கும் அழைப்புகளை வாங்கலாம். ஆனால் இவ்வாறு அழைப்புகளை ஈபேயில் விற்பது கூகிள் கொள்கைகளுக்கு எதிரானது.
சரி நீங்கள் கூகிளிடம் வேண்டுகோளை வைத்துவிட்டீர்கள். கூகிள் உங்களை அழைக்கும் வரை கூகிள் வேவ் மாதிரி எதையும் பயன்படுத்திப் பார்க்கலாம் என்று நினைக்கின்றீர்களா?? அப்படியானால் நீங்கள் செல்ல வேண்டிய தளம் http://pygowave.net. கூகிள் வேவ் அடிப்படை திறந்த மூலமாக கிடைப்பதனால் யார் வேண்டுமானாலும் அவற்றை எடுத்து உங்கள் விருப்பத்திற்கேற்ற இடைமுகம் தயாரித்து உங்கள் வேலைத்தளத்திலோ நண்பர்களுடனேயோ பயன்படுத்தலாம். இந்த பைகோவேவ் காரங்களும் அதையேதான் செய்துள்ளார்கள். பைகோவேவ் இன்னமும் அல்பா பதிப்பில் உள்ளதால் பல பிழைகள் உள்ளன அத்துடன் கூகிள் வேவ் போன்று பல வசதிகளும் இங்கு இல்லை. பைகோவேவில் நீங்கள் இணைந்தால் ஒரு புதிய வேவை உருவாக்கி அதில் “mayooresan” எனும் பயனரையும் இணைத்தால் நான் வந்து டான் என்று நிற்பேன் 😉
லினக்ஸ்க்கான கூகிள் குரோம் பதிப்பில் எந்த சொருகிகளும் செயற்படுவதில்லை. இன்னமும் உத்தியோக பூர்வ பதிப்பு வெளிவராத காரணத்தால் லினக்ஸ் ஊராக்கள் Flash செயலிகள், கோப்புகளை கூகிள் குரோமில் இயக்க முடிவதில்லை. ஆனாலும் ஒரு மாற்ற வழி மூலம் கூகிள் குரோமில் Flash ஐ நிறுவலாம்.
படத்தில் காட்டியவாறு Terminal ஐ திறக்கவும்.
பின்னர் பின்வரும் கொமாண்டை டர்மினலில் இயக்கவும். இதன் மூலம் Flash plugin ஐ நிறுவிக்கொள்ளுங்கள்
sudo aptitude install flashplugin-installer
பின்னவரும் கொமாண்டை நிறுவி Flash Plugin நிறுவப் பட்டுள்ள இடத்தை அறியவும்
அடுத்த தடவை கூகிள் குரோம் இயங்கும் போது, பிளாக்கின்களை சரிபார்க்குமாறு கூறவேண்டும் அதற்கு பின்வரும்மாறு Applications மேல் வலது சொடுக்கு ஒன்று போடுங்கள். அதிலே Edit Menu என்பதை படத்தில் காட்டியவாறு தெரிவு செய்யுங்கள்.
Menu Editor இல், to Internet > Google Chrome பின்பு Properties பொத்தானை அமுக்கவும்.
Launcher Properties windowஇல், Command field இல் உள்ளதை பின்வரும் உரையில் உள்ளவாறு மாற்றியமைக்கவும்….
இப்ப Close பொத்தானை அம்முக்கி வெளியே வாருங்கள்
ஒருதடவை Log off ஆகி Log on ஆகுங்கள். இப்போது Application -> Internet ->Google Chrome என்று கூகிள் குரோமை ஆரம்பியுங்கள். YouTube போன்ற ஒரு தளத்திற்கு சென்று வீடியோக்களை இயக்குங்கள்.
மேலே பாருங்கள், உன்னைப் போல் ஒருவன் ட்ரேயிலர் என்னமா ஓடுது என்று 😉
Firefox, Opera போன்றவற்றில் சரியாக இயங்களாத Flash Contents இந்த முறைமூலம் Google Chrome இல் சரியாக இயங்குகின்றது. ஆனால் கூகிள் குரோம் தமிழ் எழுத்துக்களை சரியாக Render பண்ணுவதில்லை. தற்போதைக்கு Firefox உலாவி மட்டுமே அந்த வேலையைச் சரியாக செய்கின்றது.
இந்த கூகிள் குரோம் புண்ணியத்தால் எனது விருப்பமான விளையாட்டுக்களான FarmVille, Barn Buddy என்பவற்றை தங்குதடையின்றி விளையாடுகின்றேன். யிப்பீஈஈஈஈஈ……….!
கண்தெரியாத பலரும் Text to Speech எனும் தொழில்நுட்பம் மூலம் இணையப் பக்கங்களை வாசிப்பதுண்டு. இந்த தொழில்நுட்பம் இத்தனை காலமும் தமிழுக்கு கிடைக்கவில்லை. இன்று நிமலின் ட்விட்டின் மூலம் இந்த தொழில்நுட்பம் தமிழுக்கும் வந்துவிட்டது என்பதை அறிந்து பேருவகை கொண்டேன்.
http://mile.ee.iisc.ernet.in:8080/tts_demo/ என்ற முகவரிக்குச் சென்று அங்கே தமிழில் தட்டச்சு செய்து “Submit” எனும் பொத்தானை அமுக்குங்கள். பின்னர் வரும் சாரளத்தில் வரும் தொடுப்பை சொடுக்கி பேச்சைக் கேளுங்கள். நீங்கள் தட்டச்சு செய்ய எழுத்துக்களை ஒரு ஆண் பேசிக் காட்டுவார்.
கொஞ்சநாளாவே பேஸ்புக்கில எங்க பாத்தாலும் Barn Buddy பேச்சுத்தான். யே! நான் இண்டைக்கு 10 கத்தரிக்கா விற்றேன். யே! நான் இண்டைக்கு 10 வெள்ளப்பூடு விற்றேன்! இப்படியே எங்க பார்த்தாலும் சந்தை போல சத்தம். என்னடாப்பா அப்பிடியொரு விளையாட்டு என்று உள்ளே நுழைந்தேன்.
சும்மா சொல்லக்கூடாது, நல்ல ஒரு விளையாட்டுத்தான். கிட்டத்தட்ட நீங்கள் ஒரு தோட்டக்காரணாகவே மாற்றும் விளையாட்டு. அதாவது உங்களுக்கு ஒரு சின்ன நிலமும் சில விதைகளும் தந்து விளையாட ஆரம்பிக்கச் சொல்கின்றார்கள். அந்த விதைகளை விதைத்து அறுவடை செய்து விற்றால் பணம்.
பணம் கண்ட மனம் சும்மா இருக்குமா? உடனே மேலும் விதை வாங்கி விதைத்து அதை விற்று பணம் செய்யச்சொல்லுமல்லவா? அதுதான் எங்கட பொடியள் எல்லாரும் தினமும் ஒருக்காலாவது பாண்படி விளையாடாமல் படுகப்போறதில்லை.
உண்மையான தோட்டம் போலவே நீரூற்றல், கிருமி நாசினி தெளித்தல், களை பிடுங்கல் என்று தோட்டம் சார்ந்த செயற்பாடுகள் வேறு உள்ளமைந்திருக்கின்றன.
தோட்டம் செய்யக் கருவிகள்
நீங்கள் நல்லா தோட்டம் செய்து சந்தையில் விற்று பணம் செய்து வந்த பணத்தை வைத்து புதிய நிலம் வாங்கி அதில் பயிரிட்டு பெரிய பணக்காரனாவதை உங்கள் பக்கத்துவீட்டுக் காரன் விரும்புவானா?? இல்லைதானே?? அதுமாதிரி இங்கையும் உங்கள் பேஸ்புக் நண்பர்கள் உங்கள் தோட்டத்தில் களவெடுக்கலாம், பூச்சிகளை அனுப்பலாம், களைகளைப் பயிரிடலாம். கவனம் இது கலிகாலம் யாரையும் நம்பக் கூடாது.
நாய் வேணுமா? அப்ப 10 பேரைச் சேருங்க!
இவை எல்லாவற்றையும் விட தோட்டத்தை காவல் காக்க ஒரு நாய் வேண்டுமல்லவா, ஆ… அதையும் நீங்கள் வாங்கிவிடலாம். அதாவது $10 கொடுத்து நாய் வாங்கி விடலாம் அல்லது நீங்கள் 10 நண்பர்களை அழைத்து அவர்களு உங்கள் அழைப்பிதழை ஏற்றுக் கொண்டிருக்க வேண்டும். அதாவது 10 புதிய நண்பர்களை பார்ண்படி விளையாட்டுக்கு நீங்கள் அழைத்து வந்தால் உங்களுக்கு அன்பளிப்பாக ஒரு நாய் தருவார்கள். இந்த நாய் இருந்தால் உங்கள் தோட்டத்தில் களவு போதல் போன்ற செயற்பாடுகள் நடைபெற வாய்ப்பேயில்லை. 😉