Barn Buddy விளையாடுவீங்களா???

பார்ண் படி விளையாட்டு இடைமுகம்
பார்ண் படி விளையாட்டு இடைமுகம்

கொஞ்சநாளாவே பேஸ்புக்கில எங்க பாத்தாலும் Barn Buddy பேச்சுத்தான். யே! நான் இண்டைக்கு 10 கத்தரிக்கா விற்றேன். யே! நான் இண்டைக்கு 10 வெள்ளப்பூடு விற்றேன்! இப்படியே எங்க பார்த்தாலும் சந்தை போல சத்தம். என்னடாப்பா அப்பிடியொரு விளையாட்டு என்று உள்ளே நுழைந்தேன்.

சும்மா சொல்லக்கூடாது, நல்ல ஒரு விளையாட்டுத்தான். கிட்டத்தட்ட நீங்கள் ஒரு தோட்டக்காரணாகவே மாற்றும் விளையாட்டு. அதாவது உங்களுக்கு ஒரு சின்ன நிலமும் சில விதைகளும் தந்து விளையாட ஆரம்பிக்கச் சொல்கின்றார்கள். அந்த விதைகளை விதைத்து அறுவடை செய்து விற்றால் பணம்.

பணம் கண்ட மனம் சும்மா இருக்குமா? உடனே மேலும் விதை வாங்கி விதைத்து அதை விற்று பணம் செய்யச்சொல்லுமல்லவா? அதுதான் எங்கட பொடியள் எல்லாரும் தினமும் ஒருக்காலாவது பாண்படி விளையாடாமல் படுகப்போறதில்லை.

உண்மையான தோட்டம் போலவே நீரூற்றல், கிருமி நாசினி தெளித்தல், களை பிடுங்கல் என்று தோட்டம் சார்ந்த செயற்பாடுகள் வேறு உள்ளமைந்திருக்கின்றன.

தோட்டம் செய்ய கருவிகள்
தோட்டம் செய்யக் கருவிகள்

நீங்கள் நல்லா தோட்டம் செய்து சந்தையில் விற்று பணம் செய்து வந்த பணத்தை வைத்து புதிய நிலம் வாங்கி அதில் பயிரிட்டு பெரிய பணக்காரனாவதை உங்கள் பக்கத்துவீட்டுக் காரன் விரும்புவானா?? இல்லைதானே?? அதுமாதிரி இங்கையும் உங்கள் பேஸ்புக் நண்பர்கள் உங்கள் தோட்டத்தில் களவெடுக்கலாம், பூச்சிகளை அனுப்பலாம், களைகளைப் பயிரிடலாம். கவனம் இது கலிகாலம் யாரையும் நம்பக் கூடாது.

நாய் வேணுமா? அப்ப 10 பேரைச் சேருங்க!
நாய் வேணுமா? அப்ப 10 பேரைச் சேருங்க!

இவை எல்லாவற்றையும் விட தோட்டத்தை காவல் காக்க ஒரு நாய் வேண்டுமல்லவா, ஆ… அதையும் நீங்கள் வாங்கிவிடலாம். அதாவது $10 கொடுத்து நாய் வாங்கி விடலாம் அல்லது நீங்கள் 10 நண்பர்களை அழைத்து அவர்களு உங்கள் அழைப்பிதழை ஏற்றுக் கொண்டிருக்க வேண்டும். அதாவது 10 புதிய நண்பர்களை பார்ண்படி விளையாட்டுக்கு நீங்கள் அழைத்து வந்தால் உங்களுக்கு அன்பளிப்பாக ஒரு நாய் தருவார்கள். இந்த நாய் இருந்தால் உங்கள் தோட்டத்தில் களவு போதல் போன்ற செயற்பாடுகள் நடைபெற வாய்ப்பேயில்லை. 😉

ஏன் இன்னும் தயக்கம், நீங்களும் Barn Buddyயில் சேர்ந்து ஒரு தோட்டக்காரனாகுங்கள். இவ்வாறான மெய்நிகர் விளையாட்டுக்கள் இந் நாட்களில் மிகப் பிரபலமாகி வருகின்றமை யாவரும் அறிந்த விடையமே.

7 thoughts on “Barn Buddy விளையாடுவீங்களா???”

 1. இத்தனை விடயம் இருக்கா? நான் தோட்டம் வைத்திருக்கின்றேன் ஆனால் கவனிப்பதில்லை நண்பர்கள் திருடிக்கொண்டு போய்விடுகிறார்கள். இனி கொஞ்சம் விளையாடிப் பார்ப்போம். தம்பி இப்போ ரொம்ப ப்ரிபோல அடிக்கடி பதிவுகள் வருகிறது.

 2. நான் FarmVille காரன். 🙂 இங்கே களவு போகாது.. ஆனால் வேறு வேறு வழிகளில் விளையாட்டை சுவாரசியமாக்கி இருக்கிறார்கள். நீங்கள் farm Ville உம் விளையாடி இருந்தால் இரண்டையும் ஒப்பிட்டு ஒரு பதிவு போடலாம்.

 3. நான் தோட்டம் வைத்திருக்கின்றேன் ஆனால் கவனிப்பதில்லை நண்பர்கள் திருடிக்கொண்டு போய்விடுகிறார்கள்.//

  வந்தி, உங்கள் இந்த வார்த்தைகளை கேட்கும் போது கண் கலங்குகிறது.. வார்த்தைகள் வருகுதில்ல.. ;'(

 4. @வந்தி
  ஆஹா.. அருமை. நானும் அப்ப களவாடப் போறேன் 👿 👿

  அது சரி இப்படி களவாடுபவர்களை நண்பர்கள் என்று சொல்லுவீர்களா???

  //ம்பி இப்போ ரொம்ப ப்ரிபோல அடிக்கடி பதிவுகள் வருகிறது.//
  அதெல்லாத்துக்கும் காரணம் மயூரன்தான். Open-Relationship எண்டு என்னைப் போட்டு வாட்டி எடுத்ததில நான் சிங்கிளா சிங்கமா இருக்க முடிவெடுத்திட்டன். அதனால இப்ப மொபைல் பில்லும் மிச்சம், பதிவுகளும் அதிகம் 😉

  @மயூரன்
  FarmVille நான் இதுவரை விளையாடவில்லை. அதையும் ஒருக்கால் விளையாடிவிடுவோமே 😉

 5. நான் தோட்டம் வைத்திருக்கின்றேன் ஆனால் கவனிப்பதில்லை நண்பர்கள் திருடிக்கொண்டு போய்விடுகிறார்கள்.//

  காதல் என்னும் பூவை நெய்தேன்
  நண்பன் அந்த பூவைக் கொய்தான்

  என்பது இதுதானா வந்தி

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.