72 : பெரு மூச்சு விடுகின்றேன்!!

பேச மனம் துடிக்கும்…
கடைக் கண் பார்வைக்கு
மனம் ஏங்கும்!

ஏளனச் சிரிப்பைக் கூட
எனக்காக உதிர்த்தாளோ என
எண்ணத் தோன்றும்!!

நண்பியுடன் பேசத் திரும்பினால்
என்னைப் பார்க்கத்
திரும்பியதாகத் தோன்றும்

கடந்து செல்கையில்
மல்லிகைப மலர்கள்
கடந்து சென்றதாகத் தோன்றும்

உன் நீல விழி பார்க்கையில்
நீல வானம் உனக்கு
மண்டியிட்டதாகத் தோன்றும்

அவள் சுட்டு விரல்
உயர்த்துவதைப் பார்க்கையில்
சுக்கிரன் கூட
பணிந்துவிட்டதாகத் தோன்றும்

என்னவளின் வேல் விழிகளில்
கோடி மின்னல் காண்பேன்
அந்த மின்னல் வந்து
இதயத்தைத் தாக்குவதையும்
வெண் மேகம் போல இரசிப்பேன்

அவள் நடந்து வரும் பாணியில்
அன்னத்தைக் காண்பேன்,

நீ யாருடனோ சிரித்து பேசும் போது
நானும் என்னுள்ளே சிரித்துக்கொள்வேன்

பேசும் போது புரியாது
ஆனால் சரி சரி என்று தலையாட்டுவேன்

ஒரு ஓரப் பார்வைக்காக
நாள் முழுதும் அலைவேன்
நாள் முடிந்த பி்ன்பும்
உன் நினைவில் கனவில் அலைவேன்

கண்ணாடி முன் நின்று
உன் கூடப் பல கதை பேசுவேன்

நீ நடந்த இடத்தில்
உன் காலடித் தடம் தேடுவேன்
முடியாவிட்டால் காற்றலையில்
முகர்ந்து திரிவேன்
அப்படியாவது உன் வாசனையை
நுகர முடியுமல்லவா?

ஒரு நாளாவது உன் அருகில்
இருக்க சந்தர்ப்பம் தேடுவேன்
சந்தர்ப்பம் வாய்த்ததும்
சங்கடத்துடன் விலகிச்செல்வேன்

நான் என்ன பைத்தியமா?
இல்லை என்னை புரியாத
நீ பைத்தியமா?
நான்தான் முட்டாள்
என்றும் உண்மை
என்று ஒன்று இருக்கின்றது

நான் ஒரு சூழ்நிலைக் கைதி
விதியின் கிறுக்கல் கையெழுத்து
பாலைவனத்தில் பறக்கும் ஒற்றைப் பறவை
நடுக்கடலின் மணல் திட்டு

அனைத்தும் நிசத்தில் நிழல்
என்பது உறைத்ததும்
கரும் புகையாய்
காற்று வெளியில் கலந்துவிடுவேன்

மறுமுறை உன்னைக் கண்டதும்
அனைத்தும் மறந்து
நினைவு இழந்து
மீண்டும் கனவு காண்பேன்
நான் அடிப்படையில்
சாதாரண இளைஞன்தானே?

10 thoughts on “72 : பெரு மூச்சு விடுகின்றேன்!!”

 1. இது harry potter நாயகி குறித்து எழுதியதா 😉

 2. //என்ன ஆச்சு மயுரேசன் Are you okay? //
  ஹி.. ஹி.. பயப்படாதீங்க.. ஐ அம் பெர்ஃபக்ட்லி ஆல் ரைட்.!!!

  சும்மா ஒரு முயற்சி அவ்வளவுதான்!!!

 3. //இது harry potter நாயகி குறித்து எழுதியதா ;)//
  யரைச் சொல்றீங்க நாயகி என்று??
  ஹர்மானி?? ஜின்னி? சோ???
  அவர்கள் எட்ட முடியா தூரத்தில் உள்ள தாரகைகள் ஆச்சே!!! பார்க்கத்தான் முடியும்!

 4. நல்லாயிருக்கு, எல்லாத்துக்கும் ஆண்டவன் வழிவிடுவான் 😉

 5. //priya said…
  Hey Mayu!
  what is this,i can”t belive that.
  but very nice…..//

  வேற வழியில்லை நீங்கள் belive பண்ணித்தான் ஆகவேண்டும்

 6. //வேற வழியில்லை நீங்கள் belive பண்ணித்தான் ஆகவேண்டும் //
  பிரபா ஏன் இந்த மூர்க்கம்!!!!!
  வேணாம்… வேணாம்!!!!!

 7. //நல்லாயிருக்கு, எல்லாத்துக்கும் ஆண்டவன் வழிவிடுவான் 😉 //
  ஓம்.. ஓம்.. நான் யோசிக்கெல!!

 8. //Hey Mayu!
  what is this,i can”t belive that.
  but very nice…..//
  அதுதான் கானா பிரபாவே சொல்லியிருக்கிறார்!!!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.