7 : விடைபெறும் வின்டோஸ் 98


உலகம் முழுவதிலும் இப்போதும் 70 பயனர்கள் வின்டோஸ் 98 ஐ பாவித்துக் கொண்டு இருக்கின்ற வேளையில் மைக்ரோசாப்ட் 11 ஜூலை முதல் தனது வின்டோஸ் 98 வாடிக்கையாளருக்கான சேவையை நிறுத்துவதாக அறிவித்துள்ளது. அத்துடன் பாதுகாப்பு ஓட்டைகளை தடுப்பதற்கான தர முயர்த்திகளையும் வின்டோஸ் 98 றிற்காகத் தயாரிக்கப் பேவதில்லை என்று அறிவித்துள்ளது.

உண்மையில் இதே செயற்பாட்டை 2003 ல் மைக்ரோசாப்ட் எடுக்க முனைந்தாலும் வாடிக்கையாளர்களின் கடும் எதிர்ப்புக் காரணமாகத் தள்ளிப் போட்டது.

மைக்ரோசாப்ட் கருத்துத் தெரிவிக்கையில் தாம் சேவையை நிறுத்தக் காரணம் அந்த இயங்கு தளம் பழைய இயங்குதளம் என்பதோடு வின்டோஸ் 98 பயனர்களை பாதுகாப்பற்ற நிலைக்கு அழைத்துச் செல்லக் கூடியதுமாகும் என்று தெரிவித்தனர்.

அத்துடன் மைக்ரோசாப்ட் அனைவரையும் வின்டோஸ் எக்ஸ்.பி போன்ற இயங்குதளத்திற்கு மாறுமாறு பரிந்துரைத்துள்ளது. அதாவது புது இயங்கு தளத்தை வாங்குங்கள். எக்ஸ்.பீ க்கு மாறினாலும் அதற்கேற்றவாறு வன் பொருள் மற்றும் கருவிகளைத் தரம் உயர்த்த வேண்டி இருக்கும்.

திருட்டு மென்பொருள் பயன் படுத்துபவர்களுக்கு எந்தப் பிரைச்சனையும் இல்லை. வழமைபோல பயனர் உதவி கிடைத்தால் என்ன கிடைக்காவிட்டால் என்ன என்று சொல்லிக் கொண்டு இருக்கலாம் 🙂

மேலதிக தகவலுக்கு…

அன்பின்,
மயூரேசன்.

Leave a Reply