69 : ஹரி பொட்டர் கடைசிப் புத்தகம்

ஹரி பொட்டர் தொடரில் கடைசியும் ஏழாவதுமான ஹரி பொட்டர் அன்ட் டெத்லி ஹலோவ்ஸ் வரும் ஜூலை மாதத்தில் வெளி வர உள்ளமை அனைவரும் அறிந்ததே. இந்தப் புத்தகத்தின் அட்டைப் படத்தை இணைத்துள்ளேன் பாருங்கள்.

இந்தப் புத்தகத்தில் ஹரி கொலை செய்யப்படுவார் என்று பலர் பேசிக்கொள்கின்றனர். இதற்கு முக்கிய காரணம் எழுத்தாளர் ரெளலிங் தான் இந்தக் ஹரி பொட்டர் தொடரை இதற்கு மேல் தொடர விருப்பம் இல்லை என்று சொல்லியுள்ளார். அத்துடன் இக் கதையை எதிர்காலத்தில் வேறு யாரும் தொடராமல் இருக்க ஹரியின் பாத்திரத்தைக் கொலை செய்வது அவசியம் ஆகின்றது.

ரெளலிங் மேலும் கூறுகையில் இந்தக் கதையின் கடைசிச் சொல்லு Scar என்று முடியும் என்பதாகும். அதாவது ஹரியின் நெற்றியிலே இருக்கும் வடுவைக் குறிப்பிடுவதாக இருக்குமோ என்று பலர் எண்ணுகின்றனர். எது எதுவாயினும் என்னையும் சேர்த்து உலகெங்குமுள்ள ஹரி இரசிகர்கள் ஹரி இறப்பதை விரும்ப மாட்டார்கள்.

இது இப்படி இருக்க கதையின் வில்லனான வால்டமோட்டின் உயிருடன் ஹரியின் உயர் கலப்பதாகக் கதை முடியும் என்று இன்னுமொரு பக்கம் சில விசர் சனங்கள் கதைத்துத் திரிகின்றது!!!!

நீங்களும் ஹரியிற்காக இறைவனை வேண்டுங்கள்.!!!!!!

8 thoughts on “69 : ஹரி பொட்டர் கடைசிப் புத்தகம்”

 1. ஹாரி சாக மாட்டான். வால்டமார்ட்டுடனான போரில் யாரேனும் ஒருவர் பிழைப்பார் என்ற ப்ராபஸியை மறந்துவிட்டீர்களா?

  என் ஊகம்:

  ஹாரி வால்டமார்ட்டை வீழ்த்தி, பிறகு மக்கிள்ஸோடு மக்கிளாக முடிவு செய்துவிடுவான்.

  the only memories of his wizardhood id his scar என்று முடியும் :-))

 2. ////
  ஹாரி வால்டமார்ட்டை வீழ்த்தி, பிறகு மக்கிள்ஸோடு மக்கிளாக முடிவு செய்துவிடுவான்.
  ////

  அப்படி மக்கிள்ஸாகவோ பக்கிள்ஸாகவோ வாழ்ந்து விட்டால் பரவாயில்லையே..

  இன்னும் அவன் இறந்து விடுவதாகத்தான் யூகங்கள் பறந்து கொண்டிருக்கின்றன.

  பைதிவே இப்படிக் கதாபாத்திரங்களைக் கொல்வது ஷெர்லக் ஹோம்ஸ் காலத்தில் இருந்து சுஜாதா (ஜீனோ) காலம் வரை நடந்து கொண்டுதான் இருக்கிறது. எழுத வேண்டும் என்று முடிவெடுத்துவிட்டால் நானே கூட ஹாரியை உயிர்ப்பித்து விடுவேன்.

  யார் படிப்பார்கள் என்பது வேறு விஷயம்.. ஹி ஹி

 3. //ஹாரி சாக மாட்டான். வால்டமார்ட்டுடனான போரில் யாரேனும் ஒருவர் பிழைப்பார் என்ற ப்ராபஸியை மறந்துவிட்டீர்களா?//
  நான் மறக்க வில்லை… பிரைச்சனை என்ன வென்றால் ஒருத்தர் வாழும்போது மற்றவர் வாழ முடியாது என்று சொல்கின்றனர்.. ஆகவே இருவரும் மடிவதற்கான சந்தர்ப்பம் உள்ளதல்லவா????

  உங்கள் ஊகம் வித்தியாசமாக உள்ளது…. ஜூலை மாதம் தான் தெரியும். நன்றி பி. சுரேஷ்.

 4. ஜின்னி இறக்கலாம் என்பதற்கான சான்று!!!!

  go to page 310 of the chamber of secrets
  read the third paragraph on the page…

  “If i say it myself Harry, I’ve always been able to charm the people I needed. So Ginny poured out her soul to me, and her soul happened to be exactly what I wanted…I grew stronger and stronger on a diet of her deepest fears, her darkest secrets. I grew powerful, far more powerful than little Miss Weasley. Powerful enough to start feeding Miss Weasley a few of my secrets, to start pouring a little of MY soul back into HER…”

  ஆங்கிலத்திற்கு மன்னிக்கவும். ஒரு ஆங்கிலத்தளத்தில் இருந்து எடுத்தது!!!

  அப்போ கடைசி புத்தகத்தில் இறக்கப் போகின்ற பாத்திரங்களில் ஜின்னி ஒன்றாக இருக்கலாம்.. காதலியுடன் சேர்ந்து ஹரியும் இறக்க வேண்டி ஏற்படுமோ???

 5. //யார் படிப்பார்கள் என்பது வேறு விஷயம்.. ஹி ஹி//
  யாரும் படிக்காவிட்டால் என்ன செய்வது. இ-மெயிலில் அனுப்புங்க நான் படிக்கிறன்… ஹி.. ஹி…

 6. சில வெப்தளங்களின் கருத்துப்படி ஸ்னேப் நல்லவர் என்றே சொல்லப்படுகின்றது….!!!!!

  பார்ப்போம் என்ன நடக்கின்றது என்று!!!

 7. நானும் ஸ்னேப் நல்லவர் என்றுதான் நினைக்கிறேன். டம்பிள்டோருக்கும் ஸ்னேப்புக்கும் ஏதோ உள்குத்து இருக்கு!

  ஆனா ஜின்னி சாகறதுக்கான வாய்ப்பு கொஞ்சம் கம்மிதான். ஒருவேளை ஹாரியைக் கொல்லவே கூடாதுன்னு முடிவெடுத்துட்டா அந்த ரோலிங் கிழவி ஜின்னியைப் போட்டுத் தள்ளிருவாங்க.

 8. ஸ்னேப்பு நல்லவரா கெட்டவரா????
  இங்க பதில் இருக்கு பாருங்க!!!
  http://www.beyondhogwarts.com/harry-potter/articles/snape-clues.html

  ஆனாலும் டம்பிள்டோரை முடித்துவிட்டதாக ரெளலிங்கே நேரடியாகச் சொல்லியிருக்கின்றாராமே!!!!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.