61 : பக்.. பக் நேர்முகத் தேர்வு

அன்று மாலை 6 மணி இருக்கும் என் செல்லிடத் தொலைபேசியில் குறுஞ்செய்தி வந்திட்டதற்கு அடையாளமாய்ச் சிணுங்கியது. ஆர்வத்துடன் எடுத்துப் பார்த்தேன். என் நண்பன் எழுதி இருந்தான்.

“டேய்.. நாளைக்கு உனக்கும் இன்டர்வியூடா. ரெடியா? உலக வர்த்தக மையம் 23 ம் மாடியில் இன்டர்வியூ நடைபெறும்”.

செய்தியைப் பார்த்ததும் ஐந்தும் கெட்டு அறிவும் கெட்டுப்போனது. கடவுளே என்ன சோதனையடா இது??? நான் நேர்முகத் தேர்விற்கு கொஞ்சம் கூடத் தயாரில்லையே?

எமது பல்கலைக்கழகத்தில் 3 மாதம் ஏதாவது ஒரு இடத்தில் மென்பொருள் எழுதுனராகப் பணி புரியவேண்டியது கட்டாயம். அதாவது இரண்டாம் ஆண்டு முடிவில் 3 மாதம் இந்தப் பயிற்சி நடைபெறும். இதற்காக எமது பல்கலைக்கழகம் தம்முடன் ஒப்பந்தம் செய்துள்ள கொம்பனிகளில் ஒன்றை எமக்குப் பரிந்துரைப்பதுடன். எமது சுயவிபரக்கோவையை அந்த நிறுவனத்திற்கு அனுப்பிவைக்கும்.

ஆனால் எனக்கு இன்னமும் இந்தக் கொம்பனி என்றுசொல்லவில்லை. அப்பிடி இருக்க என் நண்பன் அனுப்பிய செய்தி ஏன் என்று புரியவில்லையே, தலையைப் பிய்த்துக்கொண்டு அடுத்தநாள் பல்கலைக்கழகத்திற்கு ஓடினேன்.

பல்கலைக்கழகத்தில் Industrial Training க்குப் பொறுப்பான விரிவுரையாளரிடம் சென்றேன்.
“மிஸ்.. அ… எனக்கு இண்டைக்கு இன்டர்வியூவா?”

“ஓம்… உமக்குத் தெரியாதா? நான் அண்டைக்கே சொன்னனான்தானே?” மிஸ் எரிந்து விழுந்தார்.

“இல்லை.. மிஸ் நீங்க எனக்குச் சொல்லேல” நான் மறுத்தேன்.

“தம்பி… நான் சொன்னனான் சரியா?… சரி இப்ப என்ன வெளிக்கிட்டுக்கொண்டுடு இனடர்வியூவிற்குப் போம். 1 மணிக்குத் தானே இனடர்வியூ இப்ப வெளிக்கிட்டீர் என்டா நேரம் சரியா இருக்கும்” அவர் அலட்சியமாகச் சொல்லிவிட்டு போய்விட்டார்.

விரிவுரையாளரின் அறையை விட்டு வெளியே வந்த எனக்கு தலைகால் புரியாமல் கோவம் கொவமாக வந்தது. ஏதாவது சாமான் கையில கிடைச்சால் அந்த மிஸ்சை ஒரு அடி அடிச்சு விடலாமோ என்று தோன்றியது.

சரி.. இனி நடப்பதைப் பார்ப்போம் என்று தீர்மானித்தவாறே வீடு திரும்பினேன். அவசரம் அவசரமாக என் உடுப்புகளை இஸ்திரி போட்டுக்கொண்டேன். வழைமைபோல என்னுடைய விருப்பமான நிறமான நீல நிறத்தில் காற்சட்டை, சேட், டை என்பவற்றை அணிந்து கொண்டு பஸ் நிலையத்திற்குச் சென்றேன்.

மீண்டும் என் செல்லிடத் தொல்லைபேசி சிணுக்கத் தொடங்கியது. எவண்டா இவன் இந்த நேரத்தில கழுத்தறுக்கிறான்.. சினந்தவாறே சி.எல்.ஐ பார்த்தேன். முன்பு குறுஞ்செய்தி அனுப்பி என்னை உசார்ப்படுத்திய அதே நண்பன்.

“டேய் நண்பா.. மிஸ் கவுத்துட்டாள்டா.. என்னையும் இன்டர்வியூக்குப் போகச் சொல்லிட்டாள்டா” சோகமாக நண்பனிடம் கூறினேன்.

“யோசிக்காத மச்சான். எல்லாம சேப்பா முடியும், நாங்க மொத்தம் 6 பேர் அந்த கம்பனிக்குப் போகப்போறம். நாங்க எல்லாரும் கொழும்பு கோட்டை இரயில் நிலையம் முன்னால சந்திக்கிறதா இருக்கிறம். நீயும் அங்க வாறிய இல்ல நேர WTC க்குப் போறியா?”

“நான் உங்களோட வாறன் மச்சான். இன்னும் 10 நிமிசத்தில நான் இரயில் நிலையத்திற்கு வாறன்” நான் சொன்னேன்.

கடைசியாக 168 பஸ் எடுத்துச் சென்று மல்வத்த வீதியில் இறங்கி இரயில் நிலையத்தை நோக்கி நடக்கத் தொடங்கினேன். அதற்கிடையில் அவன் எப்பிடியும் சுமார் 6-7 மிஸ் கோல் போட்டுவிட்டான்.

கடைசியாக நான் இரயில் நிலையத்தை அடைந்த போது மொத்தம் ஐந்து பேர் நின்றிருந்தார்கள். எல்லாரும் நல்லாத் தயாராக இருக்கின்றார்கள் என்பது அவர்களைப் பார்த்ததுமே புரிந்தது.

நாங்கள் ஆறு பேர் இன்டர்வியூவிற்குப் போறதாக இருந்தம் அதில் நான் மட்டுமே தமிழ் மற்றவர்கள் அனைவரும் சிங்கள நண்

17 thoughts on “61 : பக்.. பக் நேர்முகத் தேர்வு”

 1. நல்ல விறுவிறுப்பாய் உள்ளது.. தொடருங்கள்

  சென்ஷி

 2. உங்கள் இன்ரவீயூ நன்றாக சென்றிருக்கும் என்று நம்புகின்றேன் :-).

 3. இண்டர்வியூன்னாலே ஒருவித படபடப்பு தான்…அதிலும் முதல்முறை என்றால்….

  இந்த தலைப்பை நகைச்சுவை என்று குறிச்சொல் இட்டிருக்கிறீர்களே.

 4. ஆமாஆமா..நகைச்சுவை தான்..முடிவு வேடிக்கையா இருக்குமோ..ஒருவேளை ஒரு கேள்வியும் அவங்க கேக்கலியோ..ஆனா, முதல் தேர்வு அனுபவம் கொஞ்சம் இப்படித்தான் இருக்கும்

 5. //நல்ல விறுவிறுப்பாய் உள்ளது.. தொடருங்கள்//
  நன்றி சென்சி.. விரைவில் அடுத்தபாகம் வரும்.

 6. //நல்ல விறுவிறுப்பாய் உள்ளது.. தொடருங்கள்//
  ம்… அப்பிடித்தான் நினைக்கிறன் டிசெ தமிழன்.

 7. //இந்த தலைப்பை நகைச்சுவை என்று குறிச்சொல் இட்டிருக்கிறீர்களே//
  பூனைக்கு விளையாட்டு சுண்டெலிக்கு உயிர்போகுது என்பார்களே அதுமாதிரி!

 8. //ஆமாஆமா..நகைச்சுவை தான்..முடிவு வேடிக்கையா இருக்குமோ..ஒருவேளை ஒரு கேள்வியும் அவங்க கேக்கலியோ..ஆனா, முதல் தேர்வு அனுபவம் கொஞ்சம் இப்படித்தான் இருக்கும்//
  ம்.. கேள்விகேக்கேலியா????
  கேள்வி கேட்கப்பட்டது! எல்லாம் அடுத்த பதிப்பில் எழுதுகின்றென்.

 9. நன்றி வடுவூர் குமார் அவர்களே!
  அடுத்தபாகத்தையும் விரைவில் வாசியுங்கள்.

 10. //Will this article continue?? or will it be other articles which are not continued..//
  நிச்சயமாத் தொரும்.. கணனிக் கன்னி சிலவேளை தொடரலாம்….

 11. அனானி நண்பரே இது கலையல்ல நிஜம்…

 12. Industrial Training ற்கு நேர்முகத்தேர்வா?
  எப்பிடி எல்லாம் நல்லா முடிஞ்சுதா?
  எனக்கு training ற்கு இன்னும் 7 மாதம் இருக்கு.
  இப்பிடியெல்லாம் திகில் கதை படிக்க பயமாயிருக்கு.

 13. பிறகு என்னதான் நடந்துது? suspense’இல விடாம சொல்லிமுடியும்!!

 14. படியாதவன். மற்றும் மணி நன்றிகள்……வருகைக்கும் கருத்துக்கும்.. அடுத்த பதிவு எழுதி உள்ளேன் வாசியங்கள்.

  படியாதவரே கவலை வேண்டாம் எல்லாம நல்லதாக முடியும்!!!!!!

Leave a Reply