55 : புதிய பிளாக்கர் ஒரு சுகானுபம்

எனது முன்னய ஒரு பதிவில் பிளாக்கர் பீட்டாவினால் என் வலைப்பதிவை இழந்ததையும் புதிய பிளாக்கர் கணக்கை ஆரம்பித்ததைதப் பற்றியும் எழுதினேன்.

இன்று காலை நான் மீண்டும் பழைய பிளாக்கரில் இருந்து புதிய பிளாக்கருக்கு மாறினேன். பிரைச்சனை இல்லாமல் புதிய பிளாக்கருக்கு மாறியது. இதற்கு சுமார் மூன்று நிமிடங்கள் வரையே எடுத்தது.

முன்னெச்சரிக்கையாக நான் என் டெம்பிளேட்டை ஒரு கொப்பி எடுத்து வைத்திருந்தேன் ஆகவே புதிய பிளாக்கருக்கு மாறிய பின்னர் அதை மீளப் போட்டுக்கொண்டேன். ஏனெனில் இவ்வாறு மாறும் போது டெம்பிளேட்டில் இருந்த தமிழ் எழுத்துக்கள் மற்றவர்கள் கூறியது போல பூச்சி பூச்சி போல மாறிவிட்டிருந்தது.

நான் என் பாக்கப் கொப்பி டெம்பிளேடைப் போட்டு தமிழ் மணத்தில் ஒரு பதிவை ஏற்றிப் பார்த்தேன் அது பிரைச்சினை இல்லாமல் ஏறியது அத்துடன் பின்னூட்டமும் சேகரிக்கப்பட்டது.

பின்னர் புதிய டெம்பிளேட்டைப் போட்டு தமிழ் மணத்தில் கூறியவாறு புதிய கருவிப்பலகையையும் சேர்த்தேன் பிரைச்சினை இல்லாமல் சேர்ந்து கொண்டது. அப்புறம் புதிய டெம்பிளேட் சரியாக வேலை செய்கின்றதா என்று பார்க்க மீண்டும் தமிழ் மணத்திற்கு ஒரு பதிவை ஏற்றிப் பார்த்தேன். ஆகா என்ன ஒரு சந்தோஷ நிகழ்வு மீண்டும் தமிழ்மணம் பிரைச்சனை இல்லாமல் பதிவை ஏற்றுக்கொண்டது.

புதிய பிளாக்கரில் டெம்பிளேட்டை எடிட் செய்வது முன்பு போல கஷ்டமல்ல! எமக்குத் தேவையான பெட்டிகளை மிக இலகுவாகப் போட்டுக்கொள்ளலாம்!

இப்பத்தானே ஆரம்பம் போகப் போக என் சுகானுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன்.

நன்றி

அன்புடன்,
ஜெ.மயூரேசன்

7 thoughts on “55 : புதிய பிளாக்கர் ஒரு சுகானுபம்”

 1. அப்படியா!!
  பொன்ஸ்ம் எப்படி மாறுவது என்று எழுதியிருந்தார்,இருந்தாலும் மாற மனதில்லாமல் இருந்தேன்.இனிமேல் தள்ளிப்போடாமல் மாற வேண்டியது தான்.

 2. வடுவூர்குமார் அவர்களே!
  உங்கள் தளத்திற்கு வந்தேன் நீங்களும் மாறிவிட்டீர்கள் போலத் தெரிகின்றதே!

 3. வடுவூர்குமார் அவர்களே!
  உங்கள் தளத்திற்கு வந்தேன் நீங்களும் மாறிவிட்டீர்கள் போலத் தெரிகின்றதே!

 4. //ஏனெனில் இவ்வாறு மாறும் போது டெம்பிளேட்டில் இருந்த தமிழ் எழுத்துக்கள் மற்றவர்கள் கூறியது போல பூச்சி பூச்சி போல மாறிவிட்டிருந்தது.//

  இதை எப்படி சரி செய்தீர்கள்?

 5. நான் புதிய பிளாக்கருக்கு மாற முன்பு எனது டெம்பிளெட்டை ஒரு காப்பி எடுத்து வைத்திருந்தேன்…
  மாறி முடிந்ததும் மீண்டும் அதெ டெம்பிளேட்டை போட்டேன் பிரைச்சனை தீர்ந்தது..
  நீங்கள் புதிய பிளாகக்ர் டெம்பிளேட்டுக்கு மாறினாலும் அந்தப் பிரைச்சனை தீரும்…
  நீங்கள் கேட்பது மறுமொழி இட்டவர்களின் தமிழ் பெயர் பூச்சி யாகத் தெரிவதென்றால் கோபியின் வலைப்பதிவைப் பாருங்கள் தீர்வு உள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.