5 : விஸ்டாவால் சூழல் பிரைச்சனைகள்


சூழலியல் நிபுனர்கள் விஸ்டாவினால் பெருமளவு சூழல் பிரைச்சனைகள் ஏற்படப் போவதாகக் கூறியுள்ளனர். இதற்குக் காரணம் விஸ்டாவினால் பல கணனிகள் பயனற்றுப் போய் கழக்கப்பட வேண்டி உள்ளமையாகும்.

விஸ்டாவில் பயன்படும் Encryption முறை பழைய கணனிகளில் பயன்படப் போவதில்லையாம் அத்துடன் விஸ்டாவில் பயன்படும் உயர் திறனுடன் கூடிய வரைகலை இடைமுகப்பு காரணமாகப் பழைய கணனிகளில் விஸ்டாவைப் பயன்படுத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

வணிகத் துறையில் பயன்படும் கணனிகளில் சுமார் அரைவாசிப் பங்கு கணனிகள் இந்த விஸ்டா மாற்றத்தினால் கழிக்க வேண்டி ஏற்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய இராச்சியத்தில் மட்டும் சுமார் 10 மில்லியன் கணனிகள் கழிக்கப்பட வேண்டி உள்ளது.

பசுமைப் புரட்சி இயக்கத்தினர் (Green Peace) இந்த முயற்சியின் மூலம் மின்-கழிவுகள் பெருமளவில் அதிகரிக்கும் என்று எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். இதேவேளை மைக்ராசாப்ட் தான் எதிர்பார்த்தபடி விஸ்டா மற்றும் ஆபீஸ் 2007 க்கு வணிகத் துறையில் இருந்து பெருமளவு வரவேற்புக் கிடைத்துள்ளதாகச் சொல்லியுள்ளது.

அண்மையில் அப்பிள் கணனிகளுக்கான ஆபீஸ் 2007 பதிப்பு ஆபீஸ் 2008 என்ற பெயருடன் வெளியிட இருப்பதாக மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளதும் இங்கே குறிப்பிடத்தக்கது. இது சண்சொலாரிஸ, மற்றும் இன்டெல் ஆக்கிடெக்சரில் இயங்கக் கூடியதாக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

4 thoughts on “5 : விஸ்டாவால் சூழல் பிரைச்சனைகள்”

 1. மயுரேசன், Screen shot எடுப்பது எப்படியென்றும், அதைச் சேமிப்பது, வலையில் பதிவது எப்படியென்ற தொழில் நுட்ப விவரங்களை ஒரு பதிவாகப் போடுங்களேன்!
  அன்புடன்
  SP.VR.சுப்பையா

 2. இது எதிர்பார்த்தது தான்.
  3 வருடத்துக்கு முன்பு வாங்கிய கணினி பாகங்கள் வழக்கொழிந்து போகிறது,வேறு வழியில்லாமல் மாற வேண்டியிருக்கிறது.
  மயூரன் சொல்லிக்கொடுப்பார்,சுப்பையா சார்.
  நீங்கள் கேட்பது வின்டோஸிலா? லினக்ஸிலா.
  வின்டோஸ் என்றால் உங்களிடம் ஆபீஸ் மென்பொருள் இருந்தால் வசதி.
  மீதி அவர் சொல்வார்.

 3. திரு சுப்பையா அவர்களே ஸ்கரீன் ஷொட் பற்றி ஒரு பதிவு போட்டுள்ளோம் வாசிக்குக!!! 🙂

 4. வடுவூர் குமார் அவர்களே கட்டுரை எழுதியுள்ளேன் அத்துடன் வின்டோஸ்சை மையமாகக் கொண்டே எழுதி யுள்ளேன். லினக்சில் எனக்குப் பரீச்சயம் இல்லை… 🙁

Leave a Reply