39 : சுவிட்சர்லாந்தின் கழிவறை

வெளிப்புறம்

உட்புறம் சென்றபிறகு

என்ன பார்த்தபின்பு இதற்காகவாவது சுவிற்சர்லாந்து போகலாம் போல இருக்குதா???

13 thoughts on “39 : சுவிட்சர்லாந்தின் கழிவறை”

 1. //என்ன பார்த்தபின்பு இதற்காகவாவது சுவிற்சர்லாந்து போகலாம் போல இருக்குதா???//

  ம் போனால் சுவட்சர்லாந்த் போயி போகனும் !
  🙂

 2. //ம் போனால் சுவட்சர்லாந்த் போயி போகனும் !//

  😉

 3. //என்ன பார்த்தபின்பு இதற்காகவாவது சுவிற்சர்லாந்து போகலாம் போல இருக்குதா??? //

  இல்லை இந்தியாவை சுவிட்சர்லாந்து ஆக்கலாமான்னு இருக்குது..

 4. என்றோ ஒரு நாள் ஆகத்தானுங்கோ போகுது!!
  இலங்கை மட்டும் சத்தியமா இப்பிடியெல்லாம் ஆகாது!!!

 5. சுவிட்சர் லாந்தில் “தோழர்கள்” இல்லையா…இது போன்ற வெட்டிச் சலவுகள் செய்வதை விடுத்து இரண்டாவது கார் இல்லாமல் இருக்கும் “ஏழை” களுக்கு கார் வாங்க அரசு உதவவேண்டும் என்று கோஷம் போட்டு ரயில் மரியல் பண்றதுக்கு..!

 6. இதெல்லாம் நமக்கு சரி பட்டு வராதுங்க.
  தரை பூரா பாசி இருக்கணும். சுவரெல்லாம் அழுக்கா இருக்கணும்.
  மூலையில் துடைப்பம் இருக்கணும்.

  முக்கியமா, சுத்தம் பண்ண ஒரு பாட்டி வேணும்.

  நம்ப கலாசாரத்துக்கு இந்த சுத்தமான விஷயம் எல்லாம் சரி பட்டு வராதுங்க!

 7. //சுவிட்சர் லாந்தில் “தோழர்கள்” இல்லையா…இது போன்ற வெட்டிச் சலவுகள் செய்வதை விடுத்து இரண்டாவது கார் இல்லாமல் இருக்கும் “ஏழை” களுக்கு கார் வாங்க அரசு உதவவேண்டும் என்று கோஷம் போட்டு ரயில் மரியல் பண்றதுக்கு..!//
  அவர்கள் ஒன்றும் எங்களைப் போல வேலை வெட்டி அற்றவர்கள் அல்லவே!
  அவர்களூரில் யார் அதிபர் என்றே அவர்கள் அலட்டிக்கொள்வதில்லையாம்.

 8. //இதெல்லாம் நமக்கு சரி பட்டு வராதுங்க.
  தரை பூரா பாசி இருக்கணும். சுவரெல்லாம் அழுக்கா இருக்கணும்.
  மூலையில் துடைப்பம் இருக்கணும்.

  முக்கியமா, சுத்தம் பண்ண ஒரு பாட்டி வேணும்.

  நம்ப கலாசாரத்துக்கு இந்த சுத்தமான விஷயம் எல்லாம் சரி பட்டு வராதுங்க!//

  உங்கள் ஆதங்கம் புரிகின்றது. ஆனானும் இந்தியா கலாமின் கனவிற்கேற்ப ஒரு நாள் வல்லரசாகும். அன்று இதுவெல்லாம் நிஜத்தில் இருக்கும் நம்புங்கள் நாளை நமதே!

 9. மயூரேசனன்!

  நீங்கள் படத்தில் சுட்டியிருப்பது, சுவிற்சர்லாந்தில் புதிதாக அறிமுகஞ்செய்யப்பட்டிருக்கும் பொது கழிப்பறைதான், அவை அழகாகவும் துப்பரவாகவும் இருக்கின்றன என்பதும் உண்மைதான். இவற்றைவிடக் கட்டணக்கழிப்பறைகள் இன்னமும் துப்பரவாக இருக்கும். ஆனால் இங்கும் அசிங்கமான கழிப்பறைகள் பெருந்தெருக்களின் பாதையில் இருக்கின்றன. ஆனால் அவற்றின் துப்பரவீனத்துக்குப் பெரும்பாலும் வெளிநாட்டவர்களே காரணமாயிருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 10. போன இடத்திலும் அழுக்குப் பண்ணுகின்ற நம்மவர்களை என்ன செய்வது. இப்ப சுவிசில தமிழர்கள் எப்பிடி???

 11. // போன இடத்திலும் அழுக்குப் பண்ணுகின்ற நம்மவர்களை என்ன செய்வது. இப்ப சுவிசில தமிழர்கள் எப்பிடி??? //

  மயுரேசன்!

  நான் வெளிநாட்டவர்கள் எனக்குறிப்பிட்டது தமிழர்களைக் குறிப்பதாக நினைத்து விட்டீர்கள் போலும். தமிழர்களைவிடவும் மோசமாக பொதுச்சொத்துக்களுக்குச் சேதம் விளைவிக்கும் வேறுபல வெளிநாட்டவர்களை இங்கு கண்டிருக்கின்றேன். வெ ள்ளைத்தோல் மனித சமூகங்கள் பலவற்றில் மோசமான நடத்தைகள் பலவுண்டு. ஆனால் கறுத்தத தோல் மனிதர்கள் என்றாலே சீரற்றவர்கள் என்ற பொதுக்கருத்து ஒன்று உருவாக்கப்பட்டுவிட்டது.

  சுவிற்சர்லாந்தில் தமிழர்கள் பற்றி ஆரம்பகாலங்களில் பலவித வேறுபாடான அபிப்பிராயங்கள் இருந்த போதும், தற்போது திருப்திகரமான நிலையே உள்ளது. எமது சமூகம் குறித்த இந்த மாறுபாடான சிந்தனை தோற்றம்பெற இங்கு வாழும், உங்களைப்போன்ற இளைய தலமுறையும் காரணம். இதுபற்றி விரிவாக ஒருபதிவில் குறிப்பிடலாமென நினைக்கின்றேன்.
  தங்கள் ஆர்வத்துக்குப் பாராட்டுக்கள்.

 12. வருகைக்கும் விரிவான கருத்துக்கும் நன்றி மலைநாடான் அவர்களே… எமது தமிழர்கள் திருந்தி நடக்கின்றார்கள் என்பதைக் கேட்கும் போது மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. உதவ வந்தவர்களுக்கு உபத்திரவம் செய்யக்கூடாது என்பதே என் கருத்து.

  அன்புடன்,
  ஜெ.மயூரேசன்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.