300 – திரைவிமர்சனம்

விமர்சனத்தை வாசிக்க முன்னர் மேலே உள்ள ரெயிலரை ஒரு தடவை பாருங்கள். ரெயிலரைப் பார்த்தால் தெரியும் படம் எவ்வளவு அகோரமாகன சண்டைக் காட்சிகள் நிறைந்தது என்பது.

 

ஒரு நாள் ஸ்பாட்டா வீரர்களின் நகருக்கு வரும் பாரசீகச் செய்தித் தூதுவன் ஸ்பாட்டாவைச் சரணடையுமாறு வேண்டுகின்றான். இதனால் ஆத்திரம் கொள்ளும் ஸ்பாட்டா அரசன் செய்திகொண்டு வந்த தூதுவர்களை கொலை செய்வதுடன் யுத்தத்திற்குத் தயாராகின்றான்.

 

ஸ்பாட்டாக்கள் என்பவர்கள் பிறவியிலேயே வீரர்கள், யுத்தத்திற்காகப் பயிற்றுவிக்கப்ட்டவர்கள். இரக்கம், மரணம் பற்றியெல்லாம் அக்கறைப்படாதவர்கள். சிறுவயதில் இருந்தே இதற்கான பயிற்சி இவர்களுக்கு வழங்கப்படுகின்றது.

 

யுத்தத்திற்குச் செல்ல முதல் அரசன் கெட்ட சக்திகளை பிரார்த்தித்து அவர்களின் அனுமதியுடனேயே யுத்தத்திற்குச் செல்ல வேண்டும் ஸ்பாட்டாக்களின் பாரம்பரியம். மன்னனால் கூட அதை மீற முடியாது. அவர்களிடம் அரசன் திட்டத்தை விளக்குகின்றான். ஆனாலும் அந்த மத குருமார்கள் ஒராக்கிள் எனும் பெண்ணிடம் கேட்க வேண்டும் என்கின்றனர். ஒராக்கிள் என்ற பெயரில் நகரில் இருக்கும் அழகான பெண்ணை இந்த குருமார்கள் பெற்றுவிடுவர். அவளின் அழகே அவளுக்கு சாபமாகும். இந்த மத குருமார் பாரசீகத்திடம் பணம் வாங்கிக்கொண்டு சண்டைக்குப் போக ஒராக்கிள் அனுமதிக்கவில்லை என்று கூறிவிடுகின்றனர்.

 

இதனால் மன்னன் தன் படையை யுத்தத்திற்கு வழிநடத்திச் செல்ல முடியாத நிலை ஏற்படுகின்றது. இதன்போது மன்னன் ஒரு மாற்றுவழியையும் கண்டுகொள்கின்றான்.

 

ஒரு நாள் திடீரென்று தேர்தெடுத்த 300 வீரருடன் ஸ்பாட்டா அரசன் பாரசீகப் படையை எதிர்க்கச் செல்கின்றான். நகர நிர்வாகத்திற்கு அவர்கள் தன் தனிப்பட்ட பாதுகாவலர்கள் என்றும் தான் வடக்கு நோக்கிச் செல்வதாகவும் கூறிவிட்டு நகர்கின்றான். பாரசீகப் படையோ ஒரு மில்லியன் எண்ணிக்கையில் இருக்கும் போது இவர்களின் படை வெறும் 300 வீரர்களுடன் நகர்கின்றது.

 

ஒரு கணவாய் வாயிலில் வைத்து பாரசீகப் படையை கிரேக்கத்தினுள் நுழையவிடாமல் ஸ்பாட்டா படையும், உதவிக்குச் சேர்ந்த வேறு நகரப் படையொன்றும் எதிர்க்கின்றன. அதாவது இரண்டு மலைகளுக்கிடையான பகுதியூடாகவே பாரசீகப் படைகள் கிரேக்கத்திற்குள் நுழைய வேண்டும் ஆனாலும் இந்த மலையிடைவெளியினுள் காத்திருக்கும் ஸ்பாட்டா அந்த குறைந்த இடைவெளியில் பாரசீகப் படைகளை வேட்டையாடுகின்றன. இடைவெளியினுள் அதிகளவு படை ஒரேதடவையில் நுழைய முடியாது என்பது ஸ்பாட்டாக்களுக்கு சார்பான புள்ளி.

 

சண்டைக் காட்சியில் எது கிராபிக்ஸ், எது நிஜம் என்று தெரியாத அளவிற்குப் படமாக்கியுள்ளார்கள். ஸ்பாட்டாக்கள் சுழன்று சுழன்று பாரசீகப் படைகளை வேட்டையாடும் காட்சி கதிரை நுனியில் நிமிர்ந்து உட்கார வைக்கின்றது. மயிர்கூச்செறியும் சண்டைக் காட்சிகள் நிறைந்தது.

 

பாரசீகத்தில் கிட்டத்தட்ட ஆசியாவின் விதம் விதமான பல பல படையணிகள் எல்லாம் வருகின்றன. ஆனாலும் ஸ்பாட்டாக்கள் அனைத்தையும் தீரத்துடனும், விவேகத்துடனும் எதிர்கொள்கின்றனர். யானை, காண்டாமிருகம், குதிரை, காலாட்படை அனைத்தையும் எதிர்கொள்கின்றனர். இவற்றைவிட பாரசீகத்தின் சிறப்புப் படையான மரணமற்றவர்கள் எனும் படையுடனும் ஸ்பாட்டாக்கள் மோதுகின்றனர். இதில் மரணமற்றவர்கள் எனும் பெயரை ஸ்பாட்டாக்கள் மாற்றிக்காட்டுகின்றனர். இரவில் மங்கலான ஒளியில் இந்த சண்டைக் காட்சி நடக்கும். அருமை.. அருமை…!!!

 

மாட்ரிக்ஸ் பட அமைப்பு இங்கேயும் பிரதிபலிக்கின்றது. உதாரணமாக ஸ்பாட்டா கப்டனின் மகனும் இன்னொரு ஸ்பாட்டா வீரரும் சேர்ந்து எண்ணற்ற பாரசீகப் படைகளை அடித்துச் சாய்ப்பது அருமையான ஒரு சண்டைக் காட்சி. வன்முறை நிறைந்திருக்கின்றது என்பதில் மறு பேச்சுக்கிடமில்லை. ஆனாலும் இப்படியான ஒருதிரைப்படத்திற்கு வன்முறை அவசியமாகச் சேர்க்கவேண்டும்.

 

பாரசீகப் படையின் முன்னேற்ற வேகத்தை குறைக்கும் வேளையில் கிரேக்கம் ஒன்று சேர்ந்து தம் உட்பகைகளை மறந்து உதவிக்கு வரும் என்பதே அரசனின் எதிர்பார்ப்பு. அரசனின் எதிர்பார்ப்பு நிறைவேறியதா. போரிடச் சென்ற 300 ஸ்பாட்டாக்களில் எத்தனை பேர் உயிர் தப்பினார்கள் என்பது மிகுதிக்கதை.

 

மீண்டும் முக்கியமான விடயம்.. குளந்தைகளுக்கு ஏற்றபடம் இதுவல்ல. விரும்பியனால் வயது வந்தவர்கள் பார்க்கவலாம் சில காட்சிகள் வயது வந்தவர்களுக்கு மட்டும் ஏற்றது. அதைவிட இப்படியான வன்முறை நிறைந்த படங்களை சிறுவர்களைப் பார்க்க அனுமதிப்பது அவ்வளவு சிறந்ததில்லை.

 

நேரம் போகாமல் அவஸ்தைப் படுகின்றீர்கள். அல்லது வார இறுதியைக் கழிக்க நல்ல படம் ஒன்று தேடுகின்றீர்கள் என்றால் இந்தப் படத்தை எடுத்துப் பாருங்கள். நண்பர்களோடு சேர்ந்து பார்த்து இரசிக்க நல்ல படம், கவனிக்க குடும்பத்தோடு பார்ப்பதைவிட நண்பர்களோடு சேர்ந்து இரசிக்க நல்லபடம். இப்படியான வன்முறை நிறைந்த படங்களை பெண்கள் இரசிக்கமாட்டார்கள் என்பது நான் சொல்லியா தெரியவேணும். 😉

24 thoughts on “300 – திரைவிமர்சனம்”

 1. மயூரேசன்,

  விளக்கமான பதிவு!

  // சண்டைக் காட்சியில் எது கிராபிக்ஸ், எது நிஜம் என்று தெரியாத அளவிற்குப் படமாக்கியுள்ளார்கள். //

  படம் முழுவதும், நடிகர்களைத் தவிர மற்ற அனைத்துமே கிராபிக்ஸில் எடுக்கப்பட்டவை. குதிரைகள் ஓடும் ஒரே ஒரு காட்சி மட்டுமே வெளிப்புறப் படப்பிடிப்பில் எடுக்கப்பட்டது என படித்தேன்.

 2. இத நட்சத்திர வாரத்தில போட்டிருக்கலாமே? exclusive trailer எல்லாம் போட்டு தமிழ் வலைப்பதிவுலகை அடுத்த கட்டத்துக்கு கொண்டு போறீங்க 😉 உண்மையிலயே அவன் என்ன ஆனான்னு எனக்கு இப்ப திகிலா இருக்கு..உங்க வீட்டுக்குப் பக்கத்தில ஓசி டிவிடி கடை ஏதும் இருக்கா..படமா பார்த்து தள்ளுறீங்க 😉 நான் முழு மூச்சா படிப்பில கவனம் செலுத்துலாம்னா விட மாட்டேங்கிறீங்களே 😉 ஸ்பைடர்மேன்-3, ஓசன்-13 பார்த்தாச்சா?

 3. மயூரேசா, படத்தை நான் பார்த்து விட்டேன். என்னுடைய கருத்துப்படி படம் வீண். மட்டம்.

  // யுத்தத்திற்குச் செல்ல முதல் அரசன் கெட்ட சக்திகளை பிரார்த்தித்து அவர்களின் அனுமதியுடனேயே யுத்தத்திற்குச் செல்ல வேண்டும் ஸ்பாட்டாக்களின் பாரம்பரியம். //

  படத்துல கெட்ட சக்தின்னு சொல்றாங்க. அது கிரேக்கக் கடவுள்கள். இப்படிச் சொல்ல வெச்சது படம் எடுத்தவங்க கொழுப்பு.

  அதுவுமில்லாம ஆசியர்களை அருவெறுப்பாகச் சித்தரித்தமை. அவர்களுடைய வாழ்க்கை முறையை மிகவும் கேவலமாகக் காட்டியமை என்று படத்தின் குறைகளை அடுக்கிக்கொண்டே போகலாம்.

  அளவுக்கு மீறிய வன்முறை படத்தின் பலவீனம். என்னைக் கேட்டால் இந்தப் படத்தைப் பார்க்காமல் இருப்பது மூளைக்கு நல்லது.

 4. ஆஹா!!!
  நீங்க என்ன 300 படத்தின் விளம்பரப்பிரிவில் வேலை செய்கிறீர்களா??
  உங்களுக்கு அவர்கள் எவ்வளவு கொடுத்தாலும் தகும்!!
  எனக்கு வன்முறை நிறம்பிய படங்களை பார்க்க விருப்பமில்லை என்பதால் இந்த படத்தை பார்க்காமல் இருந்தேன்.
  ஆனால் என்னை பார்க்க வைத்து விடுவீர்கள் போல இருக்கிறதே! 🙂

 5. உண்மைதான் படத்தில் வன்முறை அதிகம்தான். ஆனால் Lord of the Rings, Troy போன்ற படம் பார்க்க விரும்புபவர்களிற்கு, வெகு நிச்சயமாக இந்த படம் பிடிக்கும் என்று நினைக்கிறேன்.

  நண்பர்களுடன் சேர்ந்து பார்க்க ஒரு சிறந்த படம். படத்தின் முடிவு எனக்கு மிக பிடித்திருந்தது.

 6. // on 20 Jun 2007 at 9:46 am5நந்தா
  உண்மைதான் படத்தில் வன்முறை அதிகம்தான். ஆனால் Lord of the Rings, Troy போன்ற படம் பார்க்க விரும்புபவர்களிற்கு, வெகு நிச்சயமாக இந்த படம் பிடிக்கும் என்று நினைக்கிறேன். //

  இல்லை நந்தா இல்லை. Lord of the rings and Troy are my fav movies….but certainly not 300.

 7. //படம் முழுவதும், நடிகர்களைத் தவிர மற்ற அனைத்துமே கிராபிக்ஸில் எடுக்கப்பட்டவை. குதிரைகள் ஓடும் ஒரே ஒரு காட்சி மட்டுமே வெளிப்புறப் படப்பிடிப்பில் எடுக்கப்பட்டது என படித்தேன்.//
  நன்றி இளவஞ்சி…!!!
  ஆமாம் அப்படித்தான் என் நண்பன் ஒருவன் சொன்னான்!!! 🙂

 8. //அடுத்த கட்டத்துக்கு கொண்டு போறீங்க//
  எந்தக் கட்டத்துக்கு… 😉
  //இத நட்சத்திர வாரத்தில போட்டிருக்கலாமே? //
  ஆமா.. போட்டிருக்கலாம் ஆனா அப்போது இதை எழுதியிருக்கவில்லையே??
  //ஓசி டிவிடி கடை ஏதும் இருக்கா..படமா பார்த்து தள்ளுறீங்க 😉 நான் முழு மூச்சா படிப்பில கவனம் செலுத்துலாம்னா விட மாட்டேங்கிறீங்களே 😉 ஸ்பைடர்மேன்-3, ஓசன்-13 பார்த்தாச்சா?//
  கடை இருக்கு ஆனா ஓசியில்லைங்கோ..!!! 🙂
  ஸ்பைடி பார்த்தாச்சு ஆனாலும் இன்னமும் ஓசன் பார்க்கவில்லை!!! ;(

 9. இராகவன் அண்ணா.. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.. சிலருக்குப் பிடிப்பது சிலருக்கு அருவருப்பாக இருப்பது இயல்புதானே?? 🙂 அதுதான் இங்கே நடந்துள்ளது.

  மற்றும் படி நீங்கள் சொன்னபடி கிரேக்கக்கடவுள்களை தீய சக்கதிகள் என்று காட்டியவிடயங்கள் அவர்கள் விட்ட பிழையே!!! அதில் எனக்கு மாற்றுக் கருத்து இல்லை!

 10. CVR வருகைக்கும் கருத்துக்கும் நன்றி… ஹி..ஹி.. அப்புறம் படம் பார்த்தீர்களா?? எல்லாம் மார்க்கெட்டிங் படித்ததால வந்த விளைவு! 🙂

 11. //உண்மைதான் படத்தில் வன்முறை அதிகம்தான். ஆனால் Lord of the Rings, Troy போன்ற படம் பார்க்க விரும்புபவர்களிற்கு, வெகு நிச்சயமாக இந்த படம் பிடிக்கும் என்று நினைக்கிறேன்//
  இரு கதைகளுக்கும் வித்தியாசம் உள்ளது. முன்னயவை வன்முறை குறைந்த படங்கள். இது அளவிற்கு மீறிய வன்முறை நிறைந்தது. அத்துடன் சில காட்சிகளும் குடும்பத்துடன் பார்க்க முடியாதவை!
  //நண்பர்களுடன் சேர்ந்து பார்க்க ஒரு சிறந்த படம். படத்தின் முடிவு எனக்கு மிக பிடித்திருந்தது.//
  ஆமாம் இதில் மாற்றுக் கருத்துக்கு இடம் இல்லை!!! 🙂

 12. கீழ்க்கண்டது ஆங்கிலத்தில் 300 பற்றி நான் எழுதிய விமர்சனக் குறிப்பு… என் கருத்தை அதில் காண்க!

  நிற்க, “வயதுக்கு வந்தவர்கள்” பார்க்க வேண்டிய படத்தை மயூரேசன் கண்டது எங்ஙனம்??? இந்த வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப் பட வேண்டும் என்று தாழ்மையுடன் மிரட்டிக் கொள்கிறேன்.

  அன்புடன்,
  பிரதீப்

  I have nothing to comment on the story line as I know not much about the greek history. But the screen play was decent and a few dialogues were sharp. The greatness of the movie lies in the portrayal of individual characters – even a small one like the hunchback. Yes, almost all the star crew did what they were supposed to do – neither more nor less. The picturization and classic locations with mammoth sets were breath-taking. Credit should be given to the war scenes even we could not think about the logic. The back ground score was excellent.

  I saw this on a normal screen from a decently middle row, but still felt uneasy as there were lot of grains as if we were watching TV on old DD days with an antenna. I consider this a fault of Prasads and give the benefit of doubt to the cine-makers. The cinematographer was supposedly too much conscious about the periodicity of the movie in choosing filters, lighting and colors. After watching movies like Alexander, this does not count much. And, even without knowing much about the story beforehand, I was able to guess quite a few scenes further.

  Overall I give 90 for 300… Oh Yeah! I should be more clear. It is 90/300

 13. எட்டு விளையாட்டு தெரியும்ல? வாங்க வந்து எட்டுபோடுங்க… லைசென்ஸ் கிடைக்குதா பாப்போம்…

 14. எட்டு விளையாட்டுக்கு ரெடியா? என்னோட லேட்டஸ்ட் பதிவை பாருங்க…உங்களை அழைச்சிருக்கேன்..

 15. 2006 இல் வந்த படங்களுள் unknown ஒரு நல்ல படம் , நீங்கள் குறிப்பிட்ட படங்களைப் போல் நல்ல ரசிகனைக் கவரக்கூடியது,
  Breach கூட true story ஐ அடிப்படையாகக் கொண்ட நல்ல படம் , தவற விடாதீர்கள்.

 16. ஐயொ பிரதீப் அண்ணா…
  நான் இன்னமும் சின்னப் புள்ளை என்று நினைப்பா… வயதுக்கு வந்தோர் படம் பார்க்க எனக்கு இப்போ வயது சரி1!!!! 😉

 17. அருள் உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்நன்றி..
  நீங்கள் சொன்ன படத்தையும் விரைவில் பார்த்துவிடுகின்றேன்….
  நின் பணி படம் பார்த்துக் கிடப்பதே!!!!! 🙂

 18. //“We Spartans Never retreat; Never Surrender”//
  ஸ்பாட்டா தலைவர் சொல்லும் போது மயிர்கூச்செறியும் காட்சி வசனம் இது!!!

 19. அத்தனையும் கிராப்பிகஸ் . சும்மா.
  troy படத்துக்கு equal கிடையாது

 20. @jaisankarj
  உண்மையை சொல்வதானால் எனக்கு Troy திரைப்படம் அவளவாகப் பிடிக்கவில்லை!!!! இது பரவாயில்லை!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.