17 : ஹரிபோட்டர் சாக வேண்டுமாம்

ஹரி போட்டர் திரைப்படத்தில் ஹரியின் வேடத்தில் நடித்த Daniel Radcliffe தான் ஹரி போட்டர் கடைசிப் புத்தகத்திற்காக ஆவலுடன் காத்திருப்பதாகவும் தன் பாத்திரம் இந்தப் பாகத்துடன் கொல்லப்படும் என்று நம்புவதாகவும் கூறியுள்ளார்.

இதே வேளை ராவ்லிங் Harry Potter and the Deathly Hallows என்ற புத்தகத்தை எழுதி முடித்துள்ளதும் இது ஜூலை 21 வெளியாக உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

ராட்கிளிஃப் இது வரை வெளிவந்த நான்கு ஹரி போட்டர் படங்களில் நடித்துள்ளதுடன் அடுத்து வரும் 3 படங்களில் நடிக்கவும் ஒப்பந்தமாகியுள்ளார். இவர் மேலும் கருத்து தெரிவிக்கையில் இறுதிப் பாகத்தில் ஹரி இறப்பதாகவே ராவ்லிங் எழுதி இருப்பார்.. அத்துடன் ஒரு சோகமான காட்சியுடன் நான் இறப்பதாக திரைப்படம் அமையும் என்று நம்புகின்றேன்” என்று கூறினார்.

பார்ப்போம் கடைசிப் புத்தகத்தில் ஹரி இறக்கின்றாரா என்று!!!!

4 thoughts on “17 : ஹரிபோட்டர் சாக வேண்டுமாம்”

  1. :-((((( Dan Redcliffer நடித்திருக்கும் Equus பிரமாதமாக வந்திருக்கிறதாமே?

  2. Equus நான் இன்னமும் பார்க்கவில்லை செந்தில் குமரன் அவர்களே!!!

Leave a Reply