புதுவீட்டில் பால் காய்ச்சலாம் வாங்க!!

வருக வருக என்று என் புது வீட்டுக்கு வரவேற்கின்றேன்!!! 🙂
முதலில் அறிமுகம்…..


இப்போ எல்லாரும் ஒலிப்பதிவு போடுறாங்க.. என்னோட புது வீட்டில் முதலாவது பதிவு இந்த ஒலிப்பதிவாகும்!!!

சரி புது வீட்டுக்கு வந்துட்டு பால் குடிக்காமல் போகலாமா???… பாலையும் குடித்துவிட்டுப்போங்க…

நன்றி.

அன்புடன்,
மயூரேசன் 😉

17 thoughts on “புதுவீட்டில் பால் காய்ச்சலாம் வாங்க!!”

 1. மயூ,

  குரல் நல்லா இருக்கு..தொடர்ந்து ஒலிப்பதிவு போடுங்க..புதுத் தனி மனைல இருக்கிறதே ஒரு மகிழ்ச்சி தான் 🙂

  இப்படித் தனி மனைக்கு மாறுற போக்கு இனித் தமிழ் வலைப்பதிவுகள்ல பரவும்னு எதிர்ப்பார்ப்போம் !

 2. நன்றி ரவி… தொடர்ந்து எழுதுகின்றேன்!!! சீ… பேசுகின்றேன்.. நன்றி ரவி!!!

 3. .
  புதுமனை புகுவிழா வாழ்த்துக்கள்.

  புதுபக்கம் அருமையாக உள்ளது.
  பக்கத்தின் கவர்ச்சியைக்கூட்ட
  பக்க அமைப்பில் கூடுதலான கவனத்தைச் செலுத்துங்கள்.

  எங்கிருந்தாலும் வாழ்க…!

 4. கலக்கிப் போட்டே ராஜா…
  புது வீடு அருமையாக இருக்கு.
  மின்னணு பால்தான் என்னால் குடிக்க முடியலை 🙁
  வாழ்த்துகள்.

 5. ஆமா, கேக்க மறந்துட்டேன்.
  கடைசியா எவ்வளவு செலவு ஆச்சு, இந்த வலைத்தளத்துக்கு???
  எங்கே வாங்கினாய்? கிரெடிட் கார்டுகள் ஏமாற்று ஏதேனும் நடந்ததா என்று தெரிவிக்கவும்…

 6. மயூரேசன்,

  புதுவீடு நல்லாயிருக்கு. வாழ்த்துகள்! பால்காச்சி எங்களுக்கும் குடுத்ததுக்கு நன்றி.

  குரற்பதிவு நல்லாயிருக்கு. தொடர்ந்தும் செய்வீர்களென்று எதிர்பார்க்கிறேன். முக்கியமாக, நீங்கள் வழமையாக எழுதும் திரைப்பட இடுகைகளைக் குரற்பதிவாகப் போட முயற்சி செய்யுங்களேன்.

  -மதி

 7. இன்னொரு பின்னூட்டம்: கொழுவி அண்ணை பிசி போலக்கிடக்கு. அவரின்ர சார்பில நானொரு பின்னூட்டம் போட்டு விடுறன். சரியா..

  மயூரேசன்: பாட்டுப்போட்டு பிலிம் காட்டுற ஆக்களுக்கும் சொதி பற்றிக் கதைச்சு சொதி வேலை செய்யுற ஆக்களுக்கு ஆப்பு வைக்க வந்த உங்களை அண்ணன் கொழுவியின் சார்பாக வருக வருகவென்று வரவேற்கிறேன்! 😉

  -மதி

 8. மயூரேசன்,

  ஒண்டு சொல்ல விட்டுப்போச்சு. இதைச் சொல்ல எனக்கொரு தகுதியும் இல்லையெண்டாலும் சொல்லோணுமெண்டு தோணிச்சு..

  நீங்களும் என்னை மாதிரி சில காலமாவது தமிழகத்தில் வாழ்ந்தவரா என்று தெரியவில்லை.

  உங்களின் குரற்பதிவைக் கேட்கும்போது ஏன் மக்கள் என்னிடம் ஒண்டு நம்மட தமிழ் கதை இல்லையெண்டா தமிழ்நாட்டுத் தமிழ் கதை. இரண்டையும் போட்டுக்குழப்பாத எண்டு சொல்லீனமெண்டு விளங்குது.

  உங்கட முதற்பதிவு பிரச்சினையில்லை. இரண்டாவது பதிவு அவ்வளவா வாய்க்கேல்ல. சோத்துக்குள்ள கல்லுக் கடி படுற மாதிரி இருந்துது..

  சோல்லோணுமெண்டு இருந்துது. சொல்லிட்டன். மனம் கோணாத வகையில் சொல்லியிருக்கிறேன் என்று நம்புகிறேன். இல்லையென்றால் மன்னியுங்கள்.

  -மதி

 9. //புதுமனை புகுவிழா வாழ்த்துக்கள்.

  புதுபக்கம் அருமையாக உள்ளது.
  பக்கத்தின் கவர்ச்சியைக்கூட்ட
  பக்க அமைப்பில் கூடுதலான கவனத்தைச் செலுத்துங்கள்.

  எங்கிருந்தாலும் வாழ்க…!//
  நன்றி.. சாமி.. உங்கள் அன்புக்கு நன்றி… எல்லாம் இணையத்தில் எடுத் தீம்தான்… இனிமேல் வாரத்துக்கு ஒரு தீம் மாற்றலாம்.. இங்க தீம் மாற்றுவது அவ்வளவு கடினமான வேலை இல்லை!!!

 10. //கலக்கிப் போட்டே ராஜா…
  புது வீடு அருமையாக இருக்கு.//
  நன்றி அண்ணா!!! 🙂

  //மின்னணு பால்தான் என்னால் குடிக்க முடியலை
  வாழ்த்துகள்.//
  நக்கலு விட்டுப்போகல பார்த்தீங்களா?? 😉

 11. //ஆமா, கேக்க மறந்துட்டேன்.
  கடைசியா எவ்வளவு செலவு ஆச்சு, இந்த வலைத்தளத்துக்கு???//
  டொமைன் வாங்க 9$ ஆச்சு.. அப்புறம் ஹோஸ்டிங்.. http://webspace2host.com/ இல் வாங்கினேன்.. 50 எம்.பி. 750 ரூபாய் (இந்திய ரூபா)

  //எங்கே வாங்கினாய்? கிரெடிட் கார்டுகள் ஏமாற்று ஏதேனும் நடந்ததா என்று தெரிவிக்கவும்…//
  கிரடிட் காட் வைச்சிருக்க இன்னும் அந்தளவுக்கு வருமானம் இல்லை..இங்க வங்கியில் Web purchasing Card என்று எடுக்கலாம்.. விசா கடனட்டைபோல பயன்படுத்தலாம். ஆனால் பணம் முற்செலுத்த வேண்டும்.

 12. //புதுவீடு நல்லாயிருக்கு. வாழ்த்துகள்! பால்காச்சி எங்களுக்கும் குடுத்ததுக்கு நன்றி.

  குரற்பதிவு நல்லாயிருக்கு. தொடர்ந்தும் செய்வீர்களென்று எதிர்பார்க்கிறேன். முக்கியமாக, நீங்கள் வழமையாக எழுதும் திரைப்பட இடுகைகளைக் குரற்பதிவாகப் போட முயற்சி செய்யுங்களேன்//
  வருகைக்கும் புதிய எண்ணங்களுக்கும் நன்றி.. 🙂
  அப்படியே ஆகட்டும்!!! 🙂

 13. //மயூரேசன்: பாட்டுப்போட்டு பிலிம் காட்டுற ஆக்களுக்கும் சொதி பற்றிக் கதைச்சு சொதி வேலை செய்யுற ஆக்களுக்கு ஆப்பு வைக்க வந்த உங்களை அண்ணன் கொழுவியின் சார்பாக வருக வருகவென்று வரவேற்கிறேன்! //
  என்ன மதி..
  மதி சொதி என்று ஒரேயடியாகக் குளப்புகின்றீர்களே??? 🙁

 14. //உங்களின் குரற்பதிவைக் கேட்கும்போது ஏன் மக்கள் என்னிடம் ஒண்டு நம்மட தமிழ் கதை இல்லையெண்டா தமிழ்நாட்டுத் தமிழ் கதை. இரண்டையும் போட்டுக்குழப்பாத எண்டு சொல்லீனமெண்டு விளங்குது//
  நீங்கள் சொல்ல வந்ததை தயங்காமல் சொல்லலாம்.. விமர்சனங்களை நான் ஏற்கத் தயங்குவதில்லை..

  எனது தமிழ் அப்படி இருக்கக் காரணம்… இணையத்தில் அதிகளவு இந்திய நண்பர்களுடன் உரையாடுவதுதான்.. இந்தியத் தமிழ் பேசுவதில் நாக்கிற்கு ஒரு இதம் இருக்கின்றது. மற்றும் படி நான் வேண்டும் என்று இந்தியத் தமிழில் பேச முயலவில்லை.. அதே வேளை உங்கள் கருத்துக்கு நன்றி…

  உங்கள் மனம் கோணாத படி பதில் போட்டுள்ளேன் அல்லவா? 🙂 😉

 15. நீங்களும் புளொக்கரைக் கைவிட்டிட்டியளே? நல்ல முடிவு.

  புதுவீடு நன்றாக இருக்கின்றது, வாழ்த்துக்கள்.

  சில சனம் கொழுவி சார்பில வந்து உங்களைக் குளப்பி போடுவினம் கவனம் 😉

 16. இங்க உள்ள கொழுவி அன்பர்கள் எல்லாம் கொழுவியையும் கூண்டோடு wordpressக்கு இடம்பெயர்த்துக் கொண்டு வர வேண்டுகிறேன்..

  இப்படிக்கு,
  தமிழ்ப் பதிவுலக wordpress கொ.ப.செ 😉

 17. வணக்கம் மயூரன்,
  உங்கள் அறிமுகமே மிக நன்றாக இருக்கின்றது. வாழ்த்துக்கள்.
  தூயா

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.