1 : ஹாலிவூட் பார்வை

நாம் அன்றாடம் பல்வேறு திரைப்படங்களைப் பார்க்கின்றோம். அதில் தமிழ், ஆங்கிலம், இந்தி போன்ற மொழித் திரைப்படங்கள் அடங்குகின்றன. குறிப்பாக தமிழ் திரைப்படங்களுக்கு பல்வேறு வலைப்பதிவர்கள் தொடக்கம் இணையத்தளங்கள் வரை தமிழில் விமர்சனம் செய்கின்றனர். ஆனால் ஹாலிவூட் திரைப்படங்களிற்கு இவ்வாறான விமர்சனங்கள் தமிழில் வருவது மிகக் குறைவு.

இதை நிவர்த்தி செய்யுமுகமாக நான் பார்க்கும் ஹாலிவூட் திரைப்படங்களிற்கு விமர்சனத்தை எழுதும் நோக்கில் இந்த வலைப்பதிவை ஆரம்பிக்கின்றேன். பழையது புதியது என பல்வேறு ஹாலிவூட் திரைப்படங்களின் விமர்சனமும் இங்கு இடம் பெற இருக்கின்றது என்பதை அறியத்தருகின்றேன்.

எனது மற்றய வலைப்பதிவான தமிழ் வலைப்பதிவில் இருக்கும் ஹாலிவூட் திரைப்பட விமர்சனங்களை முதற்கட்டமாக இங்கே நகர்த்துகின்றேன். பின்னர் புதியதாக எழுதும் விமர்சனங்கள் இங்கேயே இடம்பெறும்.

ஹாலிவூட் திரைப்படங்கள் முதல் ஹாலிவூட் கிசு கிசு வரை எழுதுவதாக உத்தேசம்…….என்ன உங்களிற்கு சம்மதம் தானே???? ஆம் என்றால் இன்னும் என்ன தயக்கம் வாங்க ஹாலிவூட் போகலாம்!

2 thoughts on “1 : ஹாலிவூட் பார்வை”

  1. சம்மதம்…சம்மதம்…சம்மதம்…எழுதுங்கய்யா எழுதுங்க….ஆங்கிலப் படங்களுக்கும் நல்ல அறிமுகம் கிடைக்குமே!

Leave a Reply