ஹரி பொட்டர் 5 – திரைப்படம்

 

 

ஹரி பொட்டர் புத்தகம்தான் வாசிச்சுமுடிந்த பாடாய் இல்லை (70 வீதம் வாசிச்சாகிவிட்டது) சரி படத்தையாவது பார்த்து தொலைப்போம் என்று நேற்று டிவிடிக் கடைக்குப் போக முடிவெடுத்தேன்.

 

இங்க இருக்கிற தமிழ் பொடியள் ஹரி பெயரைக் கேட்டாலே ஓடிவிடுவாங்கள், இருக்கிற சில சிங்களப் பொடியளும் பெட்டயளும்தான் ஹரி புத்தகம் படம் என்று பைத்தியமா இருக்குங்கள். ஏற்கனவே படம் பார்த்த சில நண்பர்களிடம் கருத்துக் கேட்டபோது… It’s ok.. It’s ok macho! என்றே அவர்களது பதில் வந்தது. என்னானாலும் பார்ப்பது என்று நான் ஏற்கனவே முடிவெடுத்ததால் அதைப் பற்றி அலட்டிக்கொள்ளவில்லை.

 

இருந்தாலும் மனம் கேட்காமல் ஒரு ஹரி இரசிகையிடம் படம் எப்படி என்று கேட்டபோது.

“Oh… Mayu… Don’t watch it, it’s a total disaster. This is not what we have expected in the movie”

 என்று சொன்னார்.

 

என்னடா இது, இப்படிக் கரைச்சலாகிட்டுதே என்று நான் அரை மனதுடன் டிவிடிக் கடைக்குச் சென்று டிவிடியையும் பெற்றுக்கொண்டேன்.

 

இதற்கு முன்பு வந்த பாகங்கள் படம் பார்த்தபின்பே புத்தகம் வாசித்தேன், ஆனாலும் இந்தப் பாகம் மட்டுமே புத்தகம் வாசித்து விட்டு படம் பார்க்கப் போகின்றேன். கடைசிப் புத்தகத்தை தவிர மற்றயபுத்தகங்களுடன் ஒப்பிட்டால் 5ம் பாகமே பரபரப்புக் கூடிய பாகம். உணர்ச்சிவசப்பட வைக்கும் சம்பவங்களுக்கும் குறைவில்லை.

 

படம் தொடங்கி படபடவென்று சென்றுவிடுகின்றது. எதிர்பார்த்த பல காட்சிகள் நிறைவாக இல்லை. உதாரணத்திற்கு டிமென்டருக்கு ஹரி பெட்ரானம் மந்திரத்தைப் பாவிக்கும் காட்சிகள் ஏதோ சும்மா வந்து போனது போல இருக்கின்றது. புத்தகம் வாசிக்கும் போது நாம் ஏதோ அளவிற்கு மிஞ்சிக் கற்பனை பண்ணிவிட்டோமோ என்று எண்ணத் தோண்றுகின்றது.

 

இதைவிட படத்தில் ஹரி அதிபராக்கிரமசாலி போன்று ஒரு மாயை ஏற்படுத்தப் படுகின்றது. ஆனால் புத்தகத்தில் ஹரியை அவ்வளவு பராக்கிரமசாலியாகக் காட்டவில்லை. ஸ்னேப்புடன் எடுக்கும் ஒக்லமென்சி (மற்றவரின் ஞாபகத்தில் இருப்பவற்றை துளாவிப் பார்ப்பது, அவர் நினைவின் ஆளுமையை தன் வயப்படுத்துவது போன்ற விடயங்கள்) வகுப்பில் ஸ்னேப்பின் நினைவில் இருந்து அந்த கசப்பான நிகழ்வுகளை ஹரி காண்பதாகக் காட்டுப்படுகின்றது. ஆனால் புத்தகத்தில் டம்பிள்டோரின் நினைவுப் பேளை பென்சீவில் இருந்து களவாக ஹரி எடுத்துப் பார்ப்பதாகவே காட்டப்படுகின்றது. புத்தகம் வாசிக்கும் போது விழுந்து விழுந்து சிரிக்க வைத்த காட்சியது. ஆனால் படத்தில் சும்மா ஏதோ சாட்டுக்கு வந்து போகின்றது.

 

படத்திற்காக சில மாற்றங்களைக் கதையில் செய்துள்ளார்கள். டொலாரஸ் அம்ரிஜ் நச்சென்று நடித்திருக்கின்றார். அவர் பாத்திரம் நான் கற்பனை செய்தவாறு அவ்வாறே பொருந்தியுள்ளது. ஹக்ரிட் சும்மா வந்து தலைகாட்டிவிட்டுச் செல்கின்றார். வீஸ்லி சகோதரர்களின் கூத்துக்குக் குறைவில்லை.

 

கதையில் எதிர்பார்த்த பல விடயங்களைக் காணக்கிடைக்கவில்லை. உதாரணத்திற்கு ரீட்டாவுடனான ஹரியின் நேர்முகம், குபிலர் பத்திரிகை போன்றவை.

 

ஹரியிற்கும் சோ விற்கும் இடையிலான அந்தக் குளப்பமான காதலை இங்கே காட்டவில்லை. சும்மா அவர்கள் முத்தமிடுவதை மட்டும் காட்டி அலுப்படிக்கின்றார்கள். கதையில் சோவுடன் டேடிங் போக விரும்பி எவ்வளவு கஷ்டப்படுகின்றார் என்பதும். அதற்கு ஹர்மானியுடன் பெண்கள் பற்றிய சைக்கலாஜி படிப்பதும் என்று கலாதியாக இருக்கும்.

 

படம் பார்த்து முடித்த பின் முன்பு குறிப்பிட்ட அந்த ஹரி இரசிகைக்கு ஒரு குறுஞ்செய்தி எழுதி அனுப்பினேன்.


”As you said, it is indeed a total disaster”

 

படம் லயிக்கவில்லை. புள்ளியிடச் சொன்னால் 10 க்கு வெறும் 4 புள்ளிகளே நான் இந்தப் படத்திற்குக் கொடுப்பேன். புத்தகம் வாசித்துப் படம் பார்த்தால் இப்படியாக ஏற்படுமோ என்னவோ தெரியவில்லை!!! 🙁

 

4 thoughts on “ஹரி பொட்டர் 5 – திரைப்படம்”

 1. ஆமாம் தூயா!!!
  மொத்தத்தில் கடும் ஏமாற்றமே!!! ஏழாவது கடைசிப் புத்தகம் வாசிக்கும் போது யோசித்தேன்… இதை எப்படிப் படமாக்கித் தொலைப்பார்களோ என்று 🙁

 2. நானும் இதில் உம்முடன் ஒத்துப்போகவேண்டும் என்று நினைக்கிறேன்… பார்த்த harry potter படஙகளிலே இதுதான் மிகவும் சலிபான படமாக இருந்தது. இத்தனைக்கு நான் இதை IMAX 3D அரங்கத்தில் பார்த்திருந்தேன் (IMAX theaters have the screen of 5 story building high with 10,000W sound system. It’s a completely a different experience watching movies in IMAX. The last Harry Potter movie had a 20min 3D portion.). சிலவேளை இந்த ஏமாற்றம் இதறகு முந்திய படத்தினால் வந்ததோ தெரியாது – Harry Potter and the Goblet of the Fire was the best in the series in the theater until now.

  நான் Harry Potter நாவல்களை படித்துமுடிக்கவில்லை. கடந்த சில நாட்களாகத்தான் இந்த நாவல்களை படிக்க ஆரம்பித்திருக்கிறேன். எனது குறுகிய அனுபவங்களின்படி, படம் பார்த்தபின்புதான் நாவல்களை படிக்கவேண்டும்என்பது எப்போதும் உண்மையென்று நினைக்கிறேன். Lord of the Rings, Benhur – இரண்டு படங்களையும் பார்த்தபின்புதான் அந்த நாவல்மளைப் படித்தேன்; படங்கள், நாவல்கள் இரண்டையுமே ரசிக்கக்கூடியதாகவிருந்தது. The Da Vinci Code மறறைய முறையில் – நாவலிற்கு பிறகு படம் – படம் பெரிய ஏமாற்றமாகவிருந்தது!

  எனது கருத்துப்படி, harry potter படங்களும் நாவல்களும் தங்கள் தங்களுக்கான தனித்துவத்தை வைத்திருக்கின்றன. கதாபாத்திரங்களின் எண்ணவோட்டங்களை விவரிப்பதில் நாவல்கள் சிறந்து நின்றாலும், harry potterஇன் மந்திர உலகத்தை சித்தரிப்பதில் திரைப்படங்கள் ஒரு படி முன்னிற்கு நிற்பதை மறுக்கமுடியாது. The Order of the Phoenixதான் Harry Potter வரிசையிலே மிகவும் பெரிய புத்தகம் – 600 பக்கங்களிலும் அதிகமானது! இதை 3 மணித்தியாலப் படமாக்குவது பெரியவிடயம் (for example, the first Harry Potter book is just 300 pages.) மேலும் J.K. Rowlingஇன் அனுமதியுடன்தான் படஙகள் வெளிவருகின்றன. எனவே நாங்கள் கொஞ்சம் விட்டுப்பிடிக்கத்தான் வேண்டும் என்று நினக்கின்றேன்…

 3. //harry potterஇன் மந்திர உலகத்தை சித்தரிப்பதில் திரைப்படங்கள் ஒரு படி முன்னிற்கு நிற்பதை மறுக்கமுடியாது//
  என்னைப் பொருத்த வரையில் புத்தகங்கள் பல படி முன்னிற்கின்றன. கற்பனையில் தட்டிவிட்டுக்கொண்டு வாசிக்கும் போது வரும் சுகமே தனி சுகம் தான். 😮

  //படம் பார்த்தபின்புதான் நாவல்களை படிக்கவேண்டும்//
  இதை நானும் ஏற்றுக்கொள்கின்றேன்

  //The Order of the Phoenixதான் Harry Potter வரிசையிலே மிகவும் பெரிய புத்தகம்//
  இதைவிடக் கடசிப் புத்தகம் பெரியது. அதரடிக் காட்சிகள் நிறைந்துள்ளது. இதை எப்படப் படமாக்கத் தொலைப்பார்களோ தெரியாது 😥

Leave a Reply