வேர்ட்பிரசில் அர்த்தமுள்ள முகவரி

வேர்ட்பிரஸ்.காம் பதிவுகளைப் பார்த்தீர்கள் என்றால் உங்கள் பதிவுகளின் முகவரிகள் ஒரு அர்த்தமுள்ள முகவரிகளாக இருக்கும். அதாவது Hello World என்ற தலைப்பில் ஒரு பதிவு இட்டால் உங்கள் முகவரி பின்வருமாறு கிடைக்கும்.

உ+ம்: http://yourname.wordpress.com/Hello-world

இங்கே முகவரியைப் பார்த்ததும் என்ன உள்ளடக்கம் என்று கூறி விட முடியும். ஆனால் நீங்கள் உங்கள் வழங்கியில் நிறுவி பயன்படுத்தும் வேர்ட்பிரசானால் உங்கள் பதிவுகள் பின்வருமாறு அமையும்.

உ+ம்: http://yourname.wordpress.com/?p=23

இரண்டாவதாக வரும் முகவரி அர்த்தமற்று இருக்கின்றது அத்துடன், Page Rangeஐக் கூட்டவும் உதவாது என்று ரவி சொல்லுகின்றார்.

இரண்டாவது முறையை எவ்வாறு நீக்கி முதலாவது முறைக்கு மாறுவது என்று பார்ப்போம். இந்தப் பதிவு வழங்கிகளில் நிறுவிப் பயன்படுத்தும் பயர்களுக்கு மட்டுமே உரித்தானது.

 1. முதலில் உங்கள் வேர்ட்பிரசில் புகுபதிகை செய்துகொள்ளுங்கள்.
 2. இப்போது செல்க Options
 3. இப்போது Permalink
 4. இங்கே உங்களுக்கு விரும்பியமாதிரி உங்கள் முகவரியை மாற்றிக் கொள்ளலாம்.

Permalink ஐ எவ்வாறு பயன்படுத்துவது என்பது பற்றி இங்கே விரிவாக விளக்கியுள்ளார்கள்.
உ+ம்: http://yourname.com/post-name

என்று மட்டும் வரவைக்க விரும்பினால் /%postname% என்பதை உள்ளிடுங்கள்.
எல்லா வேலையும் முடிந்துவிட்டதா? சரி இப்போ Update permalink structure என்பதைச் சொடுக்குக.

எல்லாம் வெற்றிகரமாக முடிந்ததும் Permalink structure updated என்ற செய்தி உங்களுக்கு காட்டப்படும். இப்போது உங்கள் தளத்திற்குச் சென்று பக்கங்களை சொடுக்கிப் பாருங்கள் அர்த்தமுள்ள முகவரியுடன் உங்கள் பக்கங்கள் இருக்கும்.
சில வேளைகளில் நீங்கள் இவ்வாறு மாற்ற முயலும் போது now change the .htaccess என்ற செய்தி கிடைக்கும். இவ்வாறு தோன்றுவதற்கு காரணம் WordPress க்கு உங்கள் பதிவின் .htaccess கோப்பில் எழுத நீங்கள் அனுமதி கொடுக்கவில்லை என்பதே. சரி அனுமதி கொடுப்பது எப்படி என்கிறீர்களா? அது மிகவும் இலகுவானது. முதலில் உங்கள் வலைப்பதிவு நிறுவப்பட்டுள்ள கோப்புறைக்குள் நுழையுங்கள் அங்கே .htaccess என்ற கோப்பை வலது சொடுக்கு சொடுக்கி wirte என்ற அனுமதியைக் கொடுங்கள். இப்போது மீண்டும் வந்து Permalink இல் மாற்றத்தை ஏற்படுத்தி சேமியுங்கள். அவ்வளவுதான்!!! அர்த்தமுள்ள முகவரியுடன் உங்கள் வேர்ட்பிரஸ் தயாராகிவிடும்.

இவ்வாறு செய்வதினால் கவர்ச்சியான அர்த்தமுள்ள முகவரிகள் பதிவுகளுக்குக் கிடைக்கின்றன. அத்துடன் பதிவின் Page Rank ம் கூட வாய்ப்புள்ளது.

இதனால் தீமை என்னவெனில் பதிவுகளுக்கு தமிழ்மண பதிவுப்பட்டை நீட்சி வேலை செய்யாமல் போய்விட்டது ;). அது ஏன் என்ற ஆராய்ச்சியில் இப்போ இருக்கின்றேன்!!!

விரும்பினால் நீங்களும் செய்யலாம். நாம செஞ்சிட்டமில்ல!!!

8 thoughts on “வேர்ட்பிரசில் அர்த்தமுள்ள முகவரி”

 1. நல்ல விளக்கம் மயூ.

  Page range என்று எழுதி உள்ளீர்கள். அது Page rank. ஆனால், Page rankக்கும் இதுக்கும் தொடர்பு இல்லை. யார் எத்தனை தொடுப்புகளை எங்கிருந்து கொடுக்கிறார்கள் என்பதே Page Rankஐ நிர்ணயிக்கிறது. ஆனால், Page rankஐயும் கணக்கில் கொண்டு முடிவாகும் ஒட்டு மொத்த தேடல் முடிவுத் தரப்படுத்தல்களில் இந்த மாதிரி அர்த்தமுள்ள முகவரிகள் கொண்டு இருப்பது உதவும். இந்த அர்த்தமுள்ள முகவரிகள் தேடு சொல் சார்ந்தவை. Page rank தேடு சொல் சாராதவை.

  தமிழ்மண நீட்சி வேலை செய்யாதது முன்பே அறிந்தது தான். அந்த நீட்சியை உருவாக்கியவரிடம் கேட்டிருக்கிறேன். சரி செய்வார் என்று எதிர்ப்பார்ப்போம். இது ஏதும் சின்ன விசயமாகத் தான் இருக்கும். வேர்ட்பிரஸ் நீட்சிகள் உருவாக்கும் பகீ போன்றவர்களும் உதவலாம்.

  இந்த அர்த்தமுள்ள முகவரிகள் தொடர்பில் இன்னொரு முக்கிய குறிப்பு. பக்கத்தைப் பதிப்பிக்கும் முன் இடுகைத் தலைப்பைத் தவிர்த்த வேறு தலைப்பையும் முகவரியாகப் பெறலாம். இதற்கு page slug பயன்படுத்துங்கள். இடுகைத் தலைப்பைக் காட்டிலும் சுருக்கமான, தெளிவான முகவரிகளைப் பெற உதவும். இந்த slugஐ எத்தனை முறை வேண்டுமானாலும் மாற்றலாம். எல்லா முறையும் சரியான பக்கத்துக்குப் போகும். தவிர, இந்த அர்த்தமுள்ள முகவரிகளுக்கு மாற்றும் முன் உள்ள ?p= என்ற அடிப்படையிலான முகவரிகளும் வேலை செய்யும். எனவே, இந்த மாற்றத்தைக் குறித்துக் கவலைப்படத் தேவை இலைல.

 2. Page Rank என்பதைத்தான் Page RAnge என்று எழுதி விட்டேன். ஆங்கல அறிவு மட்டம்.. அதுதான். கண்டுக்காதீங்க!!

  மாற்றும்போது REDIRECT வேலைகளை செய்வதற்குத்தான் .htaccess கோப்பில் வேர்ட்பிரஸ் மாற்றங்களைச் செய்கின்றது~!!

  தெளிவூட்டும் மறுமொழிக்கு நன்றி ரவி!!!

 3. நிறைய பேர் ஆண்டு/மாதம்/இடுகைத் தலைப்பு என்ற முகவரியோ /இடுகைத் தலைப்பு என்ற முகவரியோ கொண்டு பார்த்திருக்கேன். நீங்க நடுவால ஆண்டுப் பெயரை மட்டும் வச்சிருக்கீங்க 🙂 யோசிச்சுக்குங்க 🙂

 4. அதாவது ஒரே பெயரில் இரு இடுகைகள் வந்தால் குளம்பலாம் என்று வேர்ட்பிரஸில் வாசித்த ஞாபகம். அதுதான் ஆண்டைப் போட்டேன்.! 😕

 5. இல்லை, ஒரே பெயரில் வரும் அடுத்தடுத்த இடுகைகளுக்குப் பின் வேர்ட்ப்ரெஸ்ஸே தானாக 2, 3 என்று எண்களைப் போட்டு புது முகவரிகளைத் தரும்.

 6. அட அப்படியா ரவி!!! நான் ஒரு மக்கு!!! 😉

  மாத்திட்டாப் போச்சு!!! வேர்ட்பிரசில பெரிய புலியாவே ஆகிட்டீங்க போல!!! 💡

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.