வின்டோஸ் பிரிவின் தலைவர் மைக்ராசாப்டில் இருந்து விலகினார்

கடந்த மாதம் மைக்ரோசாப்ட் தனது புதிய இயங்குதளமான வின்டோஸ் 8 ஐ அறிமுகப் படுத்தியது. இணைய உலகிலே கூகிளும் அப்பிளும் மைக்கரோசாப்டின் பங்கை புடுங்கிச் சாப்பிட்டுக்கொண்டிருக்கும் வேளையில் இந்த இயங்குதளம் மைக்ரோசாப்டிற்கு மீள புத்துயிர் ஊட்டும் என்று எதிர்பார்க்கப்பட்டது. வின்டோசைச் சுற்றியே முன்பு ஒரு தடவை நான் எழுதிய சேர்பஸ் டால்டும் வெளியிடப்பட்டது. வின்டோஸ் இயங்குதளம் கைபேசி, மேசைக் கணனி, மடிக் கணனி, டாப்லெட் என்று பல முனைகளில் வெளியிடப்பட்டது.

ஆயினும் திடீரென்று இந்த வின்டோஸ் பிரிவின் தலைமைத்துவம் நிறுவனத்தில் இருந்து விலகிவிட்டமை மைக்ரோசாப்ட் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்திவிட்டது. செய்தி வெளியே தெரிந்ததும் பங்குச் சந்தையில் மைக்ரோசாப்டின் பங்கு சர சரவெனச் சரியத் தொடங்கியது.

ஸ்டீவ் சினோவ்ஸ்கி
முன்னாள் வின்டோஸ் தலைவர்

இதற்கான காரணம் என்ன என்று இது வரை அறிவிக்கப்படவில்லை ஆயினும் உள்வீட்டுத் தகவல்களின் படி மைக்ரோசாப்டின் நிறைவேற்று அதிகாரி ஸ்டீவ் பால்மரிற்கும் வின்டோஸ் பிரிவின் முன்னாள் தலைவர் ஸ்டீவன் சினோவ்ஸ்கியிற்கும் இடைய்யில் தகறாறுதான் காரணம் என்று சொல்லப்படுகின்றது. 23 வருடங்கள் மைக்ரோசாப்டில் பணியாற்றிய ஸ்டீபன் கடுமையான போக்குடைய ஒரு மேலதிகாரி என்று பலராலும் கூறப்பட்ட ஒரு வல்லுனர். அத்துடன் 2000 ஆண்டு முதல் மைக்ரோசாப்டின் நிறைவேற்று அதிகாரியாக இருக்கும் ஸ்டீவ் பால்மரிற்குப் பின்னர் இவர்தான் மைக்ரோசாப்டின் நிறைவெற்று அதிகாரி என்றும் கிசு கிசுக்கள் மைக்ரோசாப்டினுள் உலா வந்தன.

புதிய வின்டோஸ் பிரிவின் தலைவி – ஜூலி

ஸ்டீபன் சினோவ்ஸ்கியின் இடத்தை மைக்ரோசாப்டில் 1993இல் இருந்து வேலை செய்யும் ஜூலி லார்சன் என்பவர் நிரப்புவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதே வேளை ஜூலி லார்சன் என்பவர் ஒரு பெண்மணி என்பதையும் தெரிந்துகொள்ளுக. (ஆமாங்க பாஸ் இனி பொண்ணுதான் வின்டோஸ் ரிலீஸ் பண்ணப்போகுது 😉 )

ஸ்டீவனின் வெளியேற்றம் ஒரு சாராரால் அதிர்ச்சியாகப் பார்க்கப்பட்டாலும் சிலர் அதை ஒரு சிறப்பான நிகழ்ச்சியாகப் பார்க்கின்றனர். பழைய நபர்கள் வெளியேறும் போது புதியவர்கள் உள்ளே வருவதனால் புதுச் சிந்தனைகளும் ஊற்றெடுக்கும் என்பதே காரணம். பழைய மொந்தையில் இன்னும் வண்டியோட்டாமல் புது இரத்தத்தை மைக்ரோசாப்டினுள் பாய்ச்ச இது சிறந்த சந்தர்ப்பம் என்றே கருதப்படுகின்றது.

Leave a Reply