பாகம் 1: வலைப்பதிவில் பணம் செய்தல்

பணம் தரும் வலைப்பதிவு
பணம் தரும் வலைப்பதிவு

பலரும் பல பதிவுகளில் பிரித்து மேய்ந்த தகவல் என்றாலும் நானும் என்பாட்டிற்கு இணையத்தில் பணம் செய்தல் பற்றிய ஒரு தொடரை எழுத இருக்கின்றேன். முதலாவது பாகம் வலைப்பதிவருக்கானது. வலைப்பதிவில் விளம்பரம் காட்டல் சம்பந்தமானது.

பலரும் அடிக்கடி என்னிடம் கேட்கும் கேள்வி, வலைப்பதிவில் பணம் செய்ய முடியுமா? ஆம் நிச்சயமாக முடியும். இதை இலகுவில் யாரும் நம்பத் தயார் இல்லை. டேய்.. அவனுகள் ஏமாத்திப் போடுவாங்களடா. உன்னட்டை ஆதாரம் இருக்கா? இப்படிப் பல கேள்விகளால் கணை தொடுப்பர். அவ்வாறு செய்பவர்களுக்கு நான் கடைசியாக கூகிளிடம் இருந்து பெற்ற $100 வரையிலான காசோலையைக் காட்டுவேன்.

சுடுதண்ணி ஊத்துப்பட்ட பூனைபோல ஓடிச்சென்று ப்ளாக்கரில் கணக்கு ஆரம்பித்து கட கட என்று பதிவிடுவார்கள். தமிழ் பதிவென்றால் தமிழ்மணம் போன்ற திரட்டிகளிலும் சேர்த்துவிடுவர். ஆனால் கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாக சில மாதங்களில் வலைப்பதிவு பதிவுகள் இல்லாமல் காய்ந்து கறுத்துப்போய்விடும்.

நீங்கள் தொடர்ந்து பதிவிடும் ஒரு நேயராக இருந்தால் நீங்கள் நிச்சயமாக உங்கள் வலைப்பதிவில் பணம் ஈட்டலாம்.

அட்சென்ஸ் (Google AdSense)

உங்கள் தளத்தில் விளம்பரம் இட்டு சம்பாதிக்க விரும்பினால் நீங்கள் நாட வேண்டிய முதலாவது இடம், எங்கள் கூகிளாண்டவரின் அட்சென்ஸ் எனும் நிகழ்ச்சிக்கு.

கூகிள் அட்சென்ஸ் இப்போதைக்கு தமிழ் தளங்களையோ வலைப்பதிவுகளையோ அனுமதிப்பதாக உத்தேசம் இல்லை. அதனால் உங்கள் தளங்களை மதிப்பீட்டுக்கு அனுப்பினால் அவர்கள் அதை நிச்சயமாக நிராகரிப்பார்கள்.

அப்படியானால் எப்படி தமிழிஷ் போன்ற தமிழ் தளங்களில் கூகிள் அட்சென்ஸ் காட்டுகின்றார்கள் என்று நீங்கள் கேட்க முடியும்.

கூகிளைப் பேக்காட்ட இலகுவான முறையை உங்களுக்கு சொல்லுகின்றேன். ;).

முதிலில் ஒரு ஆங்கிலப் பதிவினை ஆரம்பித்து ஒரு மாதமளவிற்கு அதில் எழுதுங்கள். பின்னர் அந்த தளத்தை கூகிளிடம் அனுப்புங்கள். அதைப் பார்த்து கூகிள் ஓகே சொன்னதும் அங்கே நீங்கள் தளத்திற்கு நீங்கள் விளம்பரம் போட சிறிய JavaScript கோடுகளைத் தருவார்கள். அவற்றை உங்கள் ஆங்கிலப் பதிவில் இடுங்கள்.

அப்படியே அந்த JavaScript கோடுகளை தமிழ் வலைப்பதிவுகளிலும் இட்டுவிடுங்கள். அப்புறம் என்ன உங்கள் தமிழ் பதிவுகளிலும் அட்சென்ஸ் காட்டலாம்.

கூகிள் அடசென்சை தமிழ் தளங்களில் பயன்படுத்துவதை விட ஆங்கிலத் தளங்களில் பயன்படுத்தினால் அதிகமாக சம்மாதிக்க முடியும். இது பற்றிய என் இடுகை “அட்சென்ஸ் & தமிழ் மொழி” காண்க.

அட்சென்ஸ் மட்டும்தான் இருக்கின்றதா?

கீரைக் கடைக்கும் போட்டிக் கடை இருந்தால் தானே வியாபாரம் சூடுபிடிக்கும். அட்சென்சைப் போலவே பல்வேறு விளம்பர சேவைகள் இருக்கின்றன. இவை தமிழ் தளங்களையும் இரு கரம் நீட்டி அழைக்கின்றன. உதாரணமாக அட்பிரைட், பிட்வடைசர் போன்ற சேவைகள் இருக்கின்றன. என்னதான் சொன்னாலும் கூகிள் அட்சென்சில் உழைக்கும் அளவிற்கு இந்த தளங்கள் மூலம் பணம் பெற முடியாது உள்ளது.

நேரடி விளம்பரம்

அட்சென்ஸ் போன்ற நிறுவனங்கள் விளம்பரம் செய்ய விரும்புகின்றவரிடம் பணத்தை வாங்கி உங்கள் தளத்தில் அவர் விளம்பரத்தை காட்டிவிட்டு உங்களுக்கு தான் வாங்கிய பணத்தில் ஒரு பகுதியைத் தருவார். மிகுதியை தன்னுடைய தரகுப் பணமாக எடுத்துக் கொள்ளுவார்.

உங்கள் தளத்தில் நேரடி விளம்பரங்களை இடுவதன் மூலம் இந்த தரகுப் பணங்களை நீங்கள் தேவையில்லாமல் தரகுவேலை செய்யும் கம்பனிகளுக்காக அழத்தேவையில்லை. ஆனால் உங்கள் தளத்தில் நேரடியாக விளம்பரம் செய்ய விரும்புபவர்களை தேடிக் கண்டுபிடிப்பது சிறிது கடினமான வேலையே.

இத்துடன் முதலாம் பாகம் முற்றியது. பாகம் இரண்டில் விரைவில் சந்திப்போம்.

10 thoughts on “பாகம் 1: வலைப்பதிவில் பணம் செய்தல்”

 1. சில நாட்கள் முன்னர் தான் என் வலைக்கு அட்சென்ஸ் விளம்பரம் கொடுத்தேன், சரி வந்தால் அடுத்த வழிமுறைகளைக் கையாளலாம்.

 2. வந்தி உங்கள் தளம் பார்த்தேன். அதில் கூகிள் வழி விளம்பரம் தெரிகின்றது. வாழ்த்துக்கள். ஆனால் முன்பே கூறியபடி பொது சேவை விளம்பரம் மட்டுமே தெரிகின்றது போல உள்ளது.

  வருமானம் வரும் என்று நம்புவோம்.

  @வடுவூர் குமார்
  நன்றி நண்பரே 😉

 3. ஆனால் அப்பிடி செய்தும் அது இறுதியில் பொது சேவை விளம்பரமாக மாறிவிட்டது என ஒரு நண்பன் சொன்னான்.
  பொது சேவை விளம்பரம் மூலம் பணம் சம்பாதிக்க முடியுமா எனது வலைப்பதிவில் இருப்பதும் பொது சேவை விளம்பரம்தான்

 4. @பனையூரான்
  தமிழ் மொழி தளத்தில் அட்சென்ஸ் பாவித்தால் ஏட்படும் நிலமைதான் இந்த பொது சேவை விளம்பரம். விதி கொடியது. பொது சேவை விளம்பரத்தை உங்கள் தளத்திற்கு வருபவர் கிளிக்கினால் உங்களுக்குப் பணம் கிடைக்கும். இல்லாவிட்டால் சாரி.காம் தான்.

 5. //முதிலில் ஒரு ஆங்கிலப் பதிவினை ஆரம்பித்து ஒரு மாதமளவிற்கு அதில் எழுதுங்கள்//

  No, it wont work. Coz, We need to have a site that is at least 6 months old.

  “In some locations, including China and India, we also require publishers to have owned their sites for 6 months.”

  https://www.google.com/adsense/support/bin/answer.py?hl=en&answer=75109

 6. //
  Yeah I heard about it later. I’m form Sri Lanka and was not aware of this requirement.

  There are no such 6 months rules for Sri Lankans//

  Yeah, you are so lucky (me too :), I got my account before 3 years), one of my friend is struggling to get the adsense account, now a days they are very strict.

  My simple suggestion is, don’t apply adsense for your own web site.

  Start a blog in blogspot.com, write unique contents, get some decent traffic. Then go to Monetize link on the blogger admin, there you can find the adsense option, there you can apply. There are much chances to get approved your account.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.