லைசன்ஸ் டு வெட்!!!

நேற்று மாலை மிகவும் அலுப்படிக்கவே அருகில் இருந்த டி.வி.டி கடைக்குச்சென்று எடுத்துப் பார்த்த படமே லைசன்ஸ் டு வெட்.

ஒரு திருமணக் காட்சியைக் காட்டுவதுடன் திரைக்கதை ஆரம்பிக்கின்றது. ஒரு பாதிரியார் காதலின் அத்தியாயங்களை விபரிப்பதுடன் ஏன் திருமணங்கள் பிசகுகின்றன என்றும் கூறுகின்றார்.

பின்னர் ஒரு ஜோடி எவ்வாறு சந்திக்கின்றது. அவர்கள் எவ்வாறு காதலில் வீழ்கின்றார்கள், எவ்வாறு அந்தப் பையன் அந்தப் பெண்ணிடம் தன்னைத் திருமணம் முடிக்குமாறு வேண்டுகின்றான் என்பதைக் காட்டுகின்றார்கள்.

பெண்ணின் வேண்டுகோளின் படி அவர்கள் ஊரில் உள்ள ஒரு தேவாலயத்தில் திருமணம் செய்வது என்று முடிவாகின்றது. அந்த தேவாலயத்துப் பாதிரியார் வித்தியாசமானவர். அவர் சில பரீட்சைகள் வைத்து அதில் இவர்கள் சித்தி பெற்றால்தான் தான் திருமணத்தை நடத்தி வைப்பேன் என்று சொல்கின்றார்.

இந்தப் புள்ளியில் இருந்து ஒரே சிரிப்புத்தான். பாதிரியாரின் முக்கியமான வேண்டுகோள்களில் ஒன்று, திருமணம் ஆகும்வரை உடலுறவுகொள்ளக் கூடாது. மேலைத் தேயக் கலாச்சாரத்தில் அவர்களால் இதை நம்பவே முடியவில்லை. இதே போல இரண்டு பொம்மைக் குளந்தைகளைக் கொடுத்து அதைப் பராமரிக்க கேட்டுக்கொள்வார். அந்தப் பொம்மைக் குளந்தைகள் அழும், மூக்குச்சிந்தும், சலம், மலம் கழிக்கும் என்றால் யோசித்துப் பாருங்களேன்.

இறுதியில் இருவரும் சேர்கின்றார்கள், ஆனால் அதற்கு முன்னர் தமிழ்ப் படம் போல பல சென்டிமென்ட் காட்சிகளும் வரும். நேரம் போகாவிட்டால் பார்த்து இரசிப்பதற்கு நல்ல திரைப்படம். பாதிரியாரின் பாத்திரம் மனதில் நிறைந்திருக்கும். குறிப்பாக புதிதாய் திருமணம் ஆனவர்கள், திருமணம் ஆகப்போகின்றவர்கள் பார்க்கவேண்டிய திரைப்படம்.

5 thoughts on “லைசன்ஸ் டு வெட்!!!”

  1. //குளந்தைகள் //

    குழந்தைகள் என்று வரவேண்டிய இரண்டிடங்களிலும் இப்படித்தான் வருகிறது.

    ஓ…. நீங்கள் தமிங்கல முறை ஒருங்குறி மாற்றியர்களல்லவா?
    இந்தப்பிழை மிகச் சாதாரணமானதுதான்.
    😉 😉

  2. ழ,ள பிரைச்சனை ஆதி காலத்ததில் இருந்தே எனக்கு இருக்குது. மற்றும் படி நான் பாமினு முறையில் இருந்து இப்போது தமிழ் 99 முறைக்கு மாறியுள்ளேன்…!!!

Leave a Reply