மைக்ரோசாப்ட் சேர்பஸ் – டாப்லட்

ஐபாட், அன்ரொயிட் டபிளட் அணிவகுப்பில் இப்போது மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் சேர்பஸ் (Surface) எனப்படும் டபிளட் கணனியும் இணைந்துள்ளது.
விண்டோஸ் 8 இயங்கு தளத்தில் இயங்கும் இந்த டாப்ளெட் Intel மற்றும் ARM சிப்புகளினால் உயிரூட்டப் பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் இன்டலையோ அல்லது ஏ.ஆர்.ம் சிப்பையோ தெரிவு செய்து கொள்ளலாம்.

Microsoft Surface Tablet

இந்த டாப்லட்டின் ஒரு சிறப்பம்சம் என்னவெனில் மென்பொருள் வன்பொருள் இரண்டையும் மைக்ரோசாப்ட் நிறுவனமே தயாரித்திருக்கின்றமை. இதற்கான காரணமாக தாம் மென்பொருளில் அறிமுகப்படுத்தும் வினைத்திறன் மிக்க செயற்பாடுகளுக்கு ஏற்ற வன்பொருளை மற்றைய நிறுவனங்கள் செய்ய பின்னடிக்கும் காரணத்தினாலேயே தாமே வன்பொருளையும் வடிவமைத்ததாக மைக்ரோசாப்டின் நிறைவெற்று அதிகாரி ஸ்டீவ் பால்மர் தெரிவித்தார்.

மைக்ரோசாப்ட் அறிவித்தன் படி ARM Chip இல் இயங்கும் டாப்லட் 10.6 அங்குலம் நீளமுள்ளதுடன் 32GB, 64GB ஆகிய நினைவுத்திறனுடனும் சந்தையில் கிடைக்கவுள்ளது. இதில் வின்டோஸ் ஆர்.டி எனும் இயங்குதளம் உள்ளிடப்படவுள்ளது.

விண்டோஸ் 8 இயங்கு தளத்தில் இயங்க இருக்கும் டாப்லட் 64, 128GB ஆகிய நினைவுத் திறனுடன் வெளியிடப்படவுள்ளது. அத்துடன் USB 3.0 விற்கான ஆதரவும் வழங்கப்படவுள்ளது.

பொதுவாக அக்டோபர் மாதத்திற்குப் பின்னர் இந்த டாப்லட்கள் சந்தையில் கிடைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

One thought on “மைக்ரோசாப்ட் சேர்பஸ் – டாப்லட்”

Leave a Reply