மரண மாளிகை – ரிப்போட்டர் ஜானி

புத்தக அட்டை

அண்மையில் சில காமிக்ஸ் புத்தகங்களை கையகப்படுத்தியிருந்தேன். அவற்றை ஒன்று ஒன்றாக வாசித்து இங்கே குறும் பதிவுகளாக இடும் உத்தேசம். அவ்வகையில் இன்று வாசித்துப் பதிவு இடப் போகும் புத்தகம் ரிப்போட்டர் ஜானி தோன்றும் மரண மாளிகை.

நாம் பல ரியாலிட்டி ஷோக்களைப் பார்க்கின்றோம். உதாரணத்திற்கு சொல்லப்போனால் ஜோடி நம்பர் வன், சுப்பர் சிங்கர் என்று பல. அதே போல வெளி நாடுகளிலும் ரியாலிட்டி ஷோக்கள் பிரபலம். அண்மையில் நம் ஷில்பா ஷெட்டி பிக் பிரதர் எனும் நிகழ்ச்சியில் கலந்து கண்ணீரும் கம்பலையுமாக இருந்தார் ஞாபகமா?? அது கூட ஒரு ரியாலிட்டி ஷோவேதான். எங்கள் கதையும் இப்படியான ஒரு ரியாலிட்டி ஷோவை சுற்றியே நடக்கின்றது.

பெந்தோசு மாளிகையில் ஒரு ரியாலிட்டி ஷோ அங்கே அடுத்தடுத்து மர்மமான முறையில் கொலைகள். இதைத் துப்பறிய எங்கள் ரிப்போட்டர் ஜானி களம் இறங்குகின்றார். மெல்ல மெல்லமாக முடிச்சுகளை அவிழ்கின்றார். இறுதியில் எதிர் பாரா ஒரு வில்லன் வந்து அமைந்து விடுகின்றான்.

கதை வேகம் என்னவோ மிகவும் மந்தம்தான்.  நான் ரிப்போட்டர் ஜானியின் கதைகளுக்கு பெரிய விசிரியாக இருந்ததில்லை. ஆனாலும் கிடைக்கும் போது வாசித்துவிடுவேன். ரிப்போட்டர் ஜானி மார்ச் 3, 1955 இல் பிறப்பெடுத்திருகின்றார். ரின் ரின் எனும் காமிக்ஸ் புத்தகத்தில் இவர் வந்திருகின்றார் முதன் முதலாக. தமிழில் ரிப்போட்டர் ஜானி என்று அறியப்பட்டாலும் தலை ஆங்கிலத்தில் Ric Hochet என்றே அறியப்படுகின்றது.

இப்படியான காமிக்ஸூகளை ஆங்கிலத்தில் கூடத் தேடிப் பிடிப்பது கடினம். எங்கள் பாக்கியம் லயன் முத்து காமிக்ஸ் பதிப்பகத்தார் தமிழில் வெளியிடுகின்றமை.

6 thoughts on “மரண மாளிகை – ரிப்போட்டர் ஜானி”

 1. உண்மைதான். ஆனால் தம்ழில் இந்த கதை வந்த சில பல மாதங்களுக்கு பிறகு சில்பா ஷெட்டி அந்த பிக் பிரதர் (பெரியண்ணா?) என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலம் ஆகிவிட்டார்.

 2. ரிப்போர்ட்டர் ஜானியின் கதைகள் ஒரு தடவை வாசித்தால் புரியாது, கதையினை முழுமையாக புரிய வேண்டின் குறைந்தது இரண்டு தடவையாவது படிக்க வேண்டும்….

  கதைகளும் பொதுவாக மந்த கதியில் இருந்தாலும் தரமான ஓவியங்களும் வித்தியாசமான கதை சொல்லும் பாங்கும் இரசிக்க வைக்கும்….

  ஜானியின் கதைகளின் ஒரிஜினல் பதிப்பில் இருக்கும் அதே வித்தியாசமான கதை சொல்லும் பாணியைத் தங்கள் மொழி பெயர்ப்பிலும் பயன்படுத்துவதாக ஆசிரியர் விஜயன் எங்கோ குறிப்பிட்டிருந்தது எனக்கு இன்னமும் நினைவில் இருக்கின்றது.

 3. @கிங்கு
  ஹி..ஹி.. கொடுத்து வைத்த ஷில்பா 🙂

  @சுகந்தன்
  ஆமாம் சுகந்தன் கதை வெகு நிதானமாக நகரும் அதே வேளை ஓவியங்கள் எனக்கு ஏனோ சிக்பில் ஓவியங்களை ஞாபகப் படுத்தும்.

  உங்கள் ஆழமான காமிக்ஸ் அறிவு வியப்பூட்டுகின்றது. வலைப்பதிவு திறந்து தமிழில் காமிக்ஸ் பற்றி எழுதலாமே சுகந்தன்??

 4. எழுதலாம் தான் மயூ, ஆனால் நேரம்தான் முன்போல் கிடைப்பதில்லை, பார்க்கலாம்….

  காமிக்ஸ் படிப்பதே சின்னப்பிள்ளைத்தனமாக கருதப்பட்ட காலத்தில் நல்ல, நல்ல காமிக்ஸ் தொடர்களை அறிமுகப்படுத்தி என்னையும் நல்ல இரசிகனாக்கியதே ஆசிரியர் s. விஜயன் தான். உங்களுக்கு ஒன்று தெரியுமா, லயன், முத்து இதழ்களை நான் வாங்கியதும் வெடுக்கென படிக்கும் பகுதி ஆசிரியர் விஜயன் எழுதும் முகவுரைகளான ஹாட் லைன் மற்றும் காமிஸ் டைம் பகுதிகளே..!! 🙂

  ஒன்றைக் கவனித்தீர்களா ஆசிரியர் s.விஜயன் அறிமுகப்படுத்திய பல நல்ல காமிக்ஸ் ஹீரோக்கள் Franco-Belgian comics வகையைச் சார்ந்தவர்கள். Ric Hochet, XIII, கேப்டன் டைகர் (Blueberry), லக்கிலூக், புரூனோ பிரேசில், சிக் பில், என இந்த பட்டியல் ரொம்பவே நீள…ம்.

 5. @சுகந்தன்
  கிடைக்கும் நேரத்தில் எழுதலாம் தானே. பலரும் அப்படித்தான் ஒரு மாதத்தில் ஒரு பதிவிட்டால் கூட சந்தோசமான விடையம் தானே.

  ஆமாம் ஆசிரியர் எஸ்.விஜயனின் பங்கு அளப்பரியது. ஆங்கில காமிக்ஸ் இரசிகர்களுக்கே தெரியாத பல ஐரோப்பிய காமிக்ஸ் எங்களுக்குத் தெரியும்.

  நான் கூட ஹாட்லைன் வாசிக்காமல் கதைப்பக்கம் போகவே மாட்டேன் 🙂

 6. மயூ, உங்களின் முயற்சி அளப்பெரியது, நீங்கள் எப்பொழுதும் உங்கள் முயற்சியை தொடர வேண்டும் என்று கேட்டு கொள்கின்றேன். அத்துடன் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.