மன்னிப்பு கேட்கும் விகடன்.காம்

அண்மையில் விகடன்.காம் ஐ அணுக முயன்றபோது பயர்பாக்ஸ் உலாவி கடும் எச்சரிக்கை பண்ணியது. என்னை மீறிப் போய் ஏதாவது ஆனால் நான் பொறுப்பல்ல என்றெல்லாம் பயமூட்டியது பயர்பாக்ஸ் உலாவி. இதற்கு காரணம் விகடன்.காம் பயன்படுத்தியிருக்கும் நிரலில் சில ட்ரோஜன் வகை நிரல்கள் இருக்கிறதாம். இந்த ட்ரோஜன் எனப்படுபவை தம்மை வேறு பொருட்களாக அடையாளம் காட்டி எமது கணனியில் நுழைந்து எமது கணனியின் சில தகவல்களைத் திருடி எசமானருக்கு அனுப்பிவிடும். உதாரணமாக கடன்அட்டை இலக்கம் போன்றவற்றை இந்த ட்ரோஜன் மூலம் கடத்த முடியும்.

எப்படி இந்த ட்ரோஜன் என்ற பெயர் வந்த்து என்று நினைக்கின்றீர்களா??? ட்ரோஜனத்துக் குதிரை என்று சிறுவயதில் படித்த கிரேக்க கதை ஞாபகம் இருக்கின்றதா??? அதன்படி ஒரு மரக்குதிரையைசெய்து கோட்டைக்கு வெளியே வைக்க, அதை கோட்டைக்குள் இருக்கும் முட்டாள்கள் உள்ளே எடுத்து செல்ல மரக் குதிரையின் உள்ளே இருக்கும் அக்கிலீஸ் போன்ற வீரர்கள் கொமாண்டோ பாணியில் தாக்குதல் நடத்தி கோட்டைக் கதவுகளை தகர்க்கின்றார்கள்!!!

இன்று விகடன்.காம் தளத்திற்கு செல்ல முடிகின்றது. அத்துடன் இன்று காலை விகடன்.காம் ஒரு மன்னிப்பு கடிதம் ஒன்றையும் அனுப்பியுள்ளது.

Vikatan Sorry Letter

9 thoughts on “மன்னிப்பு கேட்கும் விகடன்.காம்”

 1. நல்ல விஷயம் சொன்னீர்கள்.. but விகடன் தளம் பக்கம் போய் நாளாகிவிட்டது

 2. @லோஷன்
  விகடன்.காம் இல் இப்போது உருப்படியாக எதுவும் எழுதுவதில்லை. நமீதாவீட்டு கட்டுத்தறியும் பிக்கினி போடுமா? போன்ற கட்டுரைகள்தான் அங்க இப்ப இருக்கு. அதுக்கு 2000 ரூபா சந்தா செலுத்திப் படிக்கிறதவிட புல்லட்டின் பத்து பதிவை வாசிச்சிட்டுப் போயிடலாம் 😉

 3. flash news புல்லட்டின் பத்துப் பதிவுகளை விகடனுடன் ஒப்பிட்டு புல்லட்டை தரமிரக்கியத்ற்கு எதிராக இலங்கைப் பதிவர்கள் ஆர்ப்பாட்டம்.. 😉

 4. flash news புல்லட்டின் பத்துப் பதிவுகளை விகடனுடன் ஒப்பிட்டு புல்லட்டை தரமிறக்கியத்ற்கு எதிராக இலங்கைப் பதிவர்கள் ஆர்ப்பாட்டம்..;)

 5. நானும் சில நாட்களாக விகடன் பக்கம் போனால் குரோம் எச்சரிக்கை செய்தது. விகடனின் கட்டுரைகளை விட புல்லட்டின் பதிவுகள் மேல். அதிலும் சில பின்னூட்டங்கள் மெஹா எரிச்சல்.

 6. வெள்ளவத்தையில் அடிப்பதற்கு ஆள் செட் பண்ணுமிடம் எங்கே உள்ளது என யாராவது தெரிவிக்க முடியுமா?
  அட ! நம்ம வந்தியண்ணாவிண்ட பின்னூட்டல பாருங்கோ? அது சரி.. அவர் கம்பராமாயணம் குண்டலகேசி போன்ற ரேஞ்சில்தானே எழுதுறவர்.. உதாரணமா அவருடைய சூப்புகளை சொல்லலாம்.. கலிகால கம்பர் அவர்.. 😉

 7. இன்றைய சூப் சில ஆணி பிடுங்கல்கள் காரணமாக கொஞ்சம் பிந்தித்தான் வரும் சென்றவாரமும் கண்டி போனபடியால் சூப் பருகாமல் புல்லட் மாதிரி சின்னக் குழந்தைகள் கவலைப்பட்டார்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.