பையா விமர்சனம்

வழமை போல எல்லாரும் எழுதி முடித்த பின்னரே நான் இந்த திரைப்பட விமர்சனத்தை எழுத ஆரம்பிக்கின்றேன். புதுவருட விடுமுறைக்கு யாழ் சென்று சும்மா ஆணி புடுங்கிக்கொண்டு இருந்த வேளையில் சோதரன் அழைக்கவே யாழ் நகர் சென்று பையா படம் பார்க்கச் சென்றேன்.

அதிகமாக எதிர்பார்ப்பு வைத்திருக்கவில்லை காரணம் ஏற்கனவே பலரும் பல விதமான விமர்சனங்களை முன்வைத்திருந்தமையே. சூப்பர் என்று சிலரும் மொக்கை என்று சிலரும் சொல்லி வைத்திருந்த காரணத்தால் நானே சென்று பார்த்து முடிவெடுப்பதாக இருந்தேன்.

திரைப்படம் தொடங்கியதில் இருந்து திரைப்படம் முடியும் வரை நாயகன் ஓடு ஓடு என்று ஓடுவார் அவர் கூட நாயகியும் ஓடுவார். வில்லனும் விதியும் விடாமல் துரத்தும். அவ்வகையான திரைப்படங்களை நாம் இது வரை பார்த்திருக்கின்றோம். அவ்வகையைச் சார்த்த திரைப்படம்தான் இந்த திரைப்படம்.

கார்த்தி பொறுப்பற்ற ஒரு இளைஞன். வாழ்வில் வித்தியாசமாக எதையும் முயற்சித்து காலம் கடத்துபவன். விதியின் செயலால் கட்டாயத் திருமணத்தில் இருந்து தமனாவைக் காப்பாற்றும் ஒரு பொறுப்பில் வீழ்கின்றான்.

கிடைத்த இரவல் காரில் தமானாவை ஏற்றிக் கொண்டு ஊர் ஊராக ஓடுவதும் பின்னால் இரண்டு ரவுடிக் கும்பல் துரத்துவதுமாகக் கதை. இடையில் சொல்ல நினைத்தும் சொல்லாமல் தவிக்கும் ஒரு காதல் வேற.

திரைப்படத்தில் என்ன சிறப்பு என்று கேட்டீர்களானால் என்னைப் பொறுத்தவரையில் பிண்ணனி இசை மற்றும் இரண்டு பாடல்கள். சண்டைக் காட்சியில் வரும் இலக்ரோனிக் கிட்டார் இசை எங்கள் மீசையையும் முறுக்க வைக்கின்றது. என் காதல் சொல்ல நேரம் இல்லை மற்றும் துளி துளி மழைத்துளியாய் வந்தாளே பாடல்கள் மனதில் நச்சென்று பதிந்து விடுகின்றன. மற்றய பாடல்கள் ஒட்டவில்லை.

லொஜிக் இல்லாத மொக்கை சண்டைகளுக்கு குறைவில்லை. இருபது முப்பது பேரை கார்த்தி ஒத்தையாளாக அடித்து வீழ்த்தும் போது.. ஷப்பா… ஆரம்பிச்சுட்டாங்கையா என்றுதான் சொல்லத் தோன்றுகின்றது. ஆனால் தியட்டரில் அந்த சண்டைக் காட்சிகளை விசிலடிச்சு இரசிக்கவும் ஒரு கூட்டம் இருக்கின்றது என்பதே உண்மை.

கார்த்தி நடிப்பு ஓ.கே. தமானா நடிப்பு என்று ஒன்றும் இல்லை ஆனால் கியூட்டா இருந்தாங்க. என்றாலும் கார்த்திதான் பெஸ்ட். 😉

கார்த்தியின் நடிப்பு ஆயிரத்தில் ஒருவன் மற்றும் பருத்தி வீரன் போன்ற திரைப்படங்களுடன் ஒப்பிடும் போது சுமார்தான். கார்த்தி சில இடங்களில் சூர்யாவையும் சில இடங்களில் சிவ குமாரையும் ஞாபகப் படுத்துகின்றார். இன்னும் சிறப்பாக எதிர் வரும் படங்களில் நடிப்பார் என்று நம்பலாம்.

படம் சூப்பரா இல்லை மொக்கையா என்று என்னிடம் கேட்டால் என் பதில் இரண்டும் இல்லை என்பதுதான். ஒரு தடவை தியட்டரில் பார்த்து இரசிக்க கூடிய திரைப்படம். திருட்டு வீசீடியில் பார்ப்பதற்கு இந்த திரைப்படத்தில் ஒன்றும் இல்லை.

அது சரி எதற்காக இந்த திரைப்படத்திற்கு “பையா” என்று பெயர் வைத்தனர்??? பேசாமல் பெங்களூரில் இருந்து மும்பாய் வரை என்று ஒரு பெயர் வைத்திருக்கலாம்.  வர வர லிங்குசாமியிடம் சரக்கு குறைந்து போகின்றதோ என்று எண்ணத் தோன்றுகின்றது.

3 thoughts on “பையா விமர்சனம்”

  1. சுமார் பத்து வருடங்களுக்கு முன் குமரி மாவட்டத்தின் தமிழக கேரள எல்லையோரம் வாழ்ந்தவர்களின் உண்மைகதை

    படத்தை பலப்படுத்த கரண், சரவணன், அஞ்சலி, கஞ்சாகருப்பு, சண்முகராஜ், காதல் தண்டபாணி, சரவணசுப்பையா, நந்தாசரவணன், பாலாசிங்
    இயக்குனர் V.C.வடிவுடையான்

  2. பத்து பேரை நாயகன் அடிப்பதை பார்த்து மக்கள் கை தட்டுவதை பார்க்கும் போது இவர்கள் இன்னும் ஒரு நூற்றாண்டு கடந்து வர வேண்டும் என தோன்றுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.