பிளாக்கரில் நேரடியாகத் தமிழில் எழுதும் வசதி

இப்போது பிளாக்கரில் நேரடியாகத் தமிழில் உள்ளிடலாம். முன்பு ஹிந்திக்கு மட்டுமே வழங்கப்பட்ட சேவை தமிழுக்கும் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது.

படி 1

படி 2

படி 3

படி 4

கூகிள் தமிழ் எழுதியைப் பயன்படுத்தாதீர் என்கிறார் ரவி!!!! அதையும் பார்த்திடு்ங்களேன்!

15 thoughts on “பிளாக்கரில் நேரடியாகத் தமிழில் எழுதும் வசதி”

 1. இந்த வசதி தமிழ்வழிச் சிந்தனைக்குக் கிடைத்த மிகப்பெரும் பின்னடைவாகத் தெரிகிறது.

  ஒருபக்கம், ஆங்கில உச்சரிப்பில் தட்டச்சிப் பழகும் முறையைத் தீவிரமாக எதிர்த்தும், அதற்குரிய மாற்றாக ‘தமிழ்நெற் 99’ விசைமுறையைப் பரிந்துரைத்தும் சிலர் தீவிரமாக இயங்கி வரும் நேரத்தில் புளொக்கரின் இந்த இடையீடு பெரும் பின்னடைவுதான்.

  Kathaliye என அடித்துவிட்டு அதற்கு 5 தெரிவுகள் இருக்கும் நிலையில் இதெல்லாம் முன்னேற்றமாகத் தெரியவில்லை.

  இந்த வசதியைச் சேர்த்தவர்கள், தமிழ்நெற் 99 விசைமுறையைச் சேர்த்திருந்தால் “தமிழுக்கு” நன்று.

  என்ன இருந்தாலும் ‘பாமினி’ விசைமுறையில் இருக்கும் எங்களை எவ்விதத்திலும் இது கவராது/பாதிக்காது.

 2. அப்படியே கூகிள் ட்ரான்ஸ்லிட்டரேட்டரை ப்ளாக்கரில் இணைச்சிருக்காங்க. அதுல இருக்கும் வழுக்கள் எல்லாம் இதுல இருக்கு.

  உதாரணமா guhapriya அல்லது guha priya என்று தட்டச்சிட்டு என்ன வருதுன்னு பாருங்கள். 😀 நானும் இந்த வசதி வந்ததுல இருந்து அந்தப் பெயரை தட்டச்சிட முயற்சிக்கிறேன்

 3. வசந்தனை வழிமொழிகிறேன். பாமினி, தமிழ்99 முறைகளையும் சேர்த்துத் தருமாறு பல மாதங்கள் முன்பே இந்திய கூகுள் உருவாக்குநர் குழுமத்தில் முறையிட்டிருந்தேன். ஆனால், அவர்கள் அதற்குச் செவி சாய்ப்பார்கள் என்று தோன்றவில்லை.

Leave a Reply