பில்லா – வந்துட்டம்ல

null

தலைப்பைப் பார்த்து குளப்பம் அடையாதீங்க. அதாவது பில்லா திரைப்படத்தில் அஜித் சொல்லும் வசனம் “I’m back”. அதைத்தான் தமிழாக்கி தந்திருக்கின்றோம். சரி இனி விமர்சனப் பக்கத்திற்குச் செல்வோம்.

திரைக்கதை நீங்கள் ஏற்கனவே அறிந்ததுதான். ஹிந்தி டொன் திரைப்படத்தில் இருந்து சற்று வேறு பட்டுள்ளது. பில்லா ஒரு சர்வதேசக் குற்றவாளி, அவரை மடக்க மலேசியாவில் கால் பதிக்கின்றார் பொலீஸ் அதிகாரி ஜே!. ஒரு கட்டத்தில் ஜே பில்லாவை மடக்கி கொலை செய்து விடுகின்றார்.

பின்னர் பில்லா போன்ற தோற்றம் உள்ள வேலுவை வளைத்து, பில்லாவின் குகைக்குள் பில்லாவின் வேடம் அணிவித்து அனுப்புகின்றார்.

ஏற்கனவே தெரிந்த கதை என்பதால் கதையில் இலயிப்பதற்கு எதுவும் இல்லை ஆனால் காட்சி அமைப்புகள் படு கலக்கலாக உள்ளன. Ford, BMW, Jaguar என்று விதம் விதமான கார்களைக் காட்டிக் கடுப்பேற்றுகின்றார்கள். அஜித் பில்லா வேடத்தில் நச்சென்று பொருந்திவிடுகின்றார். கண்களில் மிளிரும் மிடுக்கும், நிமிர்ந்த நடையும் அஜித்தைத் தவிர வேறு யாரும் இந்தப் பாத்திரத்தில் நடித்திருக்க முடியாது என்று சொல்லாமல் சொல்லுகின்றது.

பிண்னணி இசை நன்றாகவே உள்ளது. யுவன் மின்சார கிட்டாரை வைத்து கலக்கியிருக்கின்றார். ஏதோ ரொக் இசை நிகழ்ச்சிக்கு வந்துவிட்டோமோ என்று எண்ணுமளவிற்கு சில வேளைகளில் எல்லை கடந்து போய்விடுகின்றார் யுவன்.
null
நாயன்தாராவும் நமீதாவும் தாராளம் என்றால் அப்படி ஒரு தாராளம் காட்டியுள்ளனர். இந்த விடயத்தில் இருவரும் கடும் போட்டியிட்டதாகவே தெரிகின்றது. 😉 . ஒரு காட்சியில் நாயன் தாரா அஜித்தைக் காப்பாற்ற பில்லாவின் கூட்டத்துடன் வந்திறங்குவார். பார்த்தால் அந்நாளில் அஞ்சலீனா ஜூலியை டொம் ரைடரில் பார்த்த ஞாபகம் வந்தது.

null
அஜித் ரஜனியின் பாணியைப் பின்பற்றியதாகத் தெரியவில்லை. பாத்திரத்திற்கு புதிய உத்வேகத்துடன் நடித்துள்ளார். நாயன்தாரா அறிமுகத்தில் இருந்து கலக்குகின்றார். ஆனால் நமீதாவிற்கு நடிப்பதற்கு எதுவும் இல்லை.

அதிரடி காட்சியமைப்புகளைப் பார்த்து ரசிக்க நீங்கள் சென்று பார்க்கக்கூடிய படம் இது!

4 thoughts on “பில்லா – வந்துட்டம்ல”

  1. நயந்தாரா நீச்சல் குளக்காட்சியை யூடியூப்பில் பார்த்தேன்..ஆனால், அதில் ஒரு grace இருப்பது போல் தெரியலியே? நொந்து கொண்டு நடித்த மாதிரி இருந்தது. இந்தி don remakeல் பிரியங்கா இந்த இடத்தில் நல்லா செய்து இருந்தார்..

    மற்றபடி நல்ல திருட்டி சிடி கிடைத்த பின் தான் நம்ம விமர்சனத்தை வெளியிட இயலும் 😉

  2. //அஜித் ரஜனியின் பாணியைப் பின்பற்றியதாகத் தெரியவில்லை. பாத்திரத்திற்கு புதிய உத்வேகத்துடன் நடித்துள்ளார்.

    ம்ம்…நல்ல முடிவு.

  3. என்ன செய்வது ரவி… பிரியங்கா சொப்ராவை படத்திற்கு அமர்த்த முடியவில்லை! 🙂

    ஆமாம் சீனு நல்ல முடிவுதான்! 😉

Leave a Reply