பிங் மொழிமாற்றி – முழுவீச்சாக கூகிளுக்கு எதிரான யுத்தம்?

தற்போது கூகிளிற்கு எதிராக மைக்ரோசாப்ட் முழுவீச்சிலான யுத்தம் ஒன்றை ஆரம்பித்துள்ளதாகத் தோன்றுகின்றது.முதலில் அவர்கள் பிங்கை அறிமுகப் படுத்தினர். இந்த பிங் தேடற்பொறி பல நுட்ப வலைப்பதிவுகளால் ஓரளவு நன்றாகவே தரப்படுத்தப்பட்டது.இப்போது மைக்ரோசாப்ட் கூகிள் மொழிமாற்றிக்கு தனது பிங் மொழிமாற்றிமூலம் சவால் விடுகின்றது.

கூகிளில் எனக்குப் பிடித்த விடையம் என்னவெனில் அவர்கள் ஹிந்தி, தமிழ் போன்ற இந்திய மொழிகளுக்கு ஆதரவு தருவதே. கூகிள் மொழிமாற்றி ஹிந்தியை ஆதரிக்கின்றது, ஆனால் பிங் மொழிமாற்றி ஹிந்தி உட்பட எந்தவொரு இந்திய மொழிகளையும் ஆதரிக்கவில்லை.

பிங் மொழிமாற்றி இணைய தளங்களை வைத்திருப்பவர்களுக்கு மொழிமாற்றி விட்ஜட்டை வழங்குகின்றது.இந்த விட்ஜட்டை அவர்கள் தங்கள் தளத்திலை பொருத்தினால், தளத்திற்கு வருகை தரும் பயனர்கள் அவர்களுக்கு விரும்பிய மொழிக்கு தளத்தை மொழிபெயர்த்துப் பார்க்கலாம்.

அதேபோன்று நீங்கள் லைவ் மெசஞ்சர் தானியங்கி மொழிமாற்றியையும் பயன்படுத்தாலாம்.ஆங்கில மொழியல்லாத வேறு ஒரு மொழிப் பயனருடன் அரட்டை அடிக்கும் போது இந்த மொழிமாற்றி அதைத் தானே மொழிமாற்றி உங்களுக்கு காட்டும்.

4 thoughts on “பிங் மொழிமாற்றி – முழுவீச்சாக கூகிளுக்கு எதிரான யுத்தம்?”

 1. // அவர்கள் ஹிந்தி, தமிழ் போன்ற இந்திய மொழிகளுக்கு ஆதரவு தருவதே.//

  ஹிந்தியில் மொழிபெயர்த்து பார்த்திருக்கிறேன். தமிழில் மொழிபெயர்ப்பு செய்யமுடியுமா ? லிங் தரவும்

 2. நான் கூகிளின் தீவிர ரசிகன். கூகிள் ஆலமரம் போல நன்றாக இணைய உலகில் வேர்பரப்பி விட்டது. எனவே கூகிளை யாராலும் சரிக்க முடியாது!

  என்னைப் என்னைப்பொறுத்தவரை கூகிளின் வெற்றிக்குக் காரணமே அது வியாபார நோக்கமல்லாத உண்மையான சேவையை பனர்களுக்கு வழங்குவதே ஆகும்.

 3. @தர்மராஜ்
  தமிழ் மொழிமாற்றி இதுவரை இல்லை. http://translate.google.com/toolkit என்ற முகவரியில் தமிழ் மொழிமாற்றி கிடைக்கும் ஆனால் அது கிட்டத்தட்ட சில சொற்களை மட்டுமே மொழிமாற்றும்.

  @அபராஜிதன்
  அப்படி சொல்வதற்கில்லை. ஒரு காலத்தில் மைக்ரோசாப்ட் எப்படிப் பலமாக இருந்தது? இப்போது எல்லாரும் மைக்ரோசாப்டை நோண்டுகின்றார்கள்.

  எதிர்காலத்தை சரியாக கணித்து களத்தில் குதிக்கும் நிறுவனம் கூகிளை ஒருநாள் மிஞ்சும். அது மைக்ரோசாப்ட்டாக இல்லாவிட்டால் எனக்கு சந்தோசம்.

Leave a Reply